3ம் தர மாணவர்களை தண்டித்த வீடியோ பரவல்.!

      3ம் தர மாணவர்களை தண்டித்த வீடியோ பரவல்.!

      




3ம் தர மாணவர்களை தண்டித்த வீடியோ பரவல்.!


                                      3ம் தர மாணவர்களை தண்டித்த வீடியோ பரவல்.! 



                                                  




          3ம் தர மாணவர்களை தண்டித்த வீடியோ பரவல் | கொழும்பு பாடசாலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்.          

                       

கொழும்பு கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றில் மனிதாபிமானமற்ற முறையில் மாணவர்கள் சிலர் தண்டிக்கப்பட்ட சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. 

 

குறித்த பாடசாலையின் 3 ஆம் தரத்தைச் சேர்ந்த மாணவர்கள் தண்டிக்கப்படுவதைக் காட்டும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவிவரும் நிலையில் இது தொடர்பாகப் பெறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

 

தண்டனைக்கு உள்ளான ஏழு வயதுடைய இரண்டு சிறுவர்கள், அவர்களின் பெற்றோர், பாடசாலையின் பிரதி அதிபர் உள்ளிட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

 

சிறுவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் காணொளி சாட்சியங்களைப் பதிவு செய்வதற்கு நீதிமன்ற அனுமதியும் கோரப்பட்டுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

No comments

Theme images by fpm. Powered by Blogger.