கொழும்புப் பங்குப் பரிமாற்றகம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் !
கொழும்புப் பங்குப் பரிமாற்றகம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் !
கொழும்புப் பங்குப் பரிமாற்றகம் இலங்கையின்
பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்கள் சில பின்வருமாறு:
· தனி நபர்களையும் நிறுவனங்களையும் முதலீட்டிற்காக ஊக்குவித்தல்,
முதலீட்டாளர்களுக்குக் கொழும்புப் பங்குப் பரிமாற்றகத்தினூடாகப் பல்வேறு அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ள முடிதல்.
·
கம்பனிகளுக்குப்
பாரியளவு மூலதனத்தைத் திரட்டிக் கொள்ள முடிதல்.
·
கம்பனிகளின்
பங்குகளுக்காக இரண்டாம் தரச் சந்தைகள் உருவாகுதல்.
·
வெளிநாட்டு
முதலீட்டாளர்களை நாட்டிற்குள் ஈர்த்துக்கொள்ள முடிதல்.
·
அரசின்
பிணைப் பத்திரங்களை விற்பனை செய்வதினூடாக அரசிற்குத் தேவையான நிதியத்தைப்
பெற்றுக்கொள்ள முடிதல்.
·
கம்பனிகளின்
பங்குகளுக்குப் பெறுமானமொன்று உருவாகுதல்.
·
கம்பனிகளின்
நன்மதிப்பும் பிரதி விம்பமும் உயர்வடையும்.
பங்கு வழங்கும்
கம்பனியொன்றிலிருந்து முதலீட்டாளர்கள் நேரடியாகப் பங்குகளைக் கொள்வனவு செய்தலானது
முதலாம் நிலைச் சந்தையாகும்.
கொழும்புப் பங்கு
சந்தையிலிருந்து முதலீட்டாளர்கள் பங்குகளைக் கொள்வனவு செய்தல் இரண்டாம் தரச்
சந்தையாகும்.
வரையறுக்கப்பட்ட பொதுக்கம்பனிகளுக்கு கொழும்புப் பங்குப் பரிமாற்றகத்தில் பதிவு செய்யக்கூடிய முறைகள் மூன்றாகும்.
1.ஆரம்பப் பொது வழங்கல்(Initial public offer) மூலம் கம்பனியொன்று முதல் தடவை யாகப் பங்குகளை வழங்குவதன் மூலம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துப் பங்குச் சந்தையில் பட்டியற்படுத்துதல்.
2.விற்பனைக்கான கொடை முனைவு (offer for sale) மூலம்
தற்போது பங்குகளை வழங்கியுள்ள கம்பனியொன்று பொதுமக்களிடம் காணப்படும் பங்குகள்
சந்தை யினூடாக விற்பனைக்கு முன்வைப்பதற்காகப் பட்டியற்படுத்துதல்.
3. அறிமுகப்படுத்தலொன்றின் (Introduction) மூலம் பொதுமக்களுக்குப்
பங்குகளை வழங்காது அறிமுகப்படுத்தும் சந்தர்ப்பத்தின்போதே கொழும்புப் பங்குப்
பரிமாற்றகத்தினூடாகப் பங்குகளை வழங்கல்.
பங்குச் சந்தையில் கம்பனிகளைப் பட்டியற்படுத்தும்பொழுது சகல கம்பனிகளும் இருபலகைகளின் அடிப்படையில் பட்டியற்படுத்தல் மேற்கொள்ளப்படும்.
1. பிரதான பலகை / பட்டியற் திரை (Main Board)
2. திரிசவியப் பலகை / பட்டியற் திரை (Dirisavi Board)
பிரதான பட்டியற் திரை / பிரதான
பலகை (Main Board)
பாரியளவு கூறப்பட்ட மூலதனத்துடன் கூடிய கம்பனிகளுக்காக ஒதுக்கப்பட்ட பட்டியற்திரையே பிரதான பட்டியற் திரை எனப்படும்.
பிரதான பலகையில் சாதாரண
பங்குகளைப் பட்டியற்படுத்துவதற்காக நிறைவு செய்ய வேண்டிய சில தேவைகள் பின்வருமாறு:
·
கம்பனியின்
கூறப்பட்ட மூலதனம் ரூபா 500 மில்லியனுக்குப் குறையாதிருத்தல்.
·
பட்டியற்படுத்துவதற்கு
விண்ணப்பிக்கின்ற தினத்திற்கு முன்னர் குறைந்தது தொடர்ச்சியாக 3 வருடங்கள் வரிக்கு
முன்னரான இலாபம் உழைத்திருத்தல் வேண்டும்.
·
வணிகத்தில்
காணப்படுகின்ற தேறிய சொத்துக்களைப் பட்டியற்படுத்துவதற்கு விண்ணப்பிக்கின்ற
தினத்திலிருந்து அண்மித்து இரு வருடங்களில் கணக்காய்வு செய்யப்பட்ட நிதி
அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல். வழங்கப் பட்ட பங்குகளின் பெறுமதியில்
குறைந்தது 25% பொது மக்களுடையதாக இருத்தல்.
திரிசவியப் பட்டியற் திரை/
திரிசவியப் பலகை (Dirisavi
Board)
வரையறுக்கப்பட்டளவு கூறப்பட்ட
மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கம்பனிகளைப் பட்டியற்படுத்துவற்காக ஒதுக்கப்பட்ட
பலகையே திரிசவியப் பட்டியற் திரை எனப்படும்.
திரிசவியப் பட்டியற் திரையில்
பட்டியற்படுத்துவதற்காக நிறைவுசெய்ய வேண்டிய தேவைகள் சில பின்வருமாறு:
·
கம்பனியின்
கூறப்பட்ட மூலதனம் ரூபா. 100 மில்லியனை விடக் குறையாதிருத்தல் வேண்டும்.
·
வழங்கப்பட்ட
பங்குப் பெறுமானத்தின் அதிகுறைந்தது 10% பொதுமக்களுக்குரியதாக இருத்தல் வேண்டும்.
·
வணிகத்தில்
காணப்படும் தேறிய சொத்துக்களைப் பட்டியற்படுத்துவதற்கு விண்ணப்பித்த தினத்தில் வருடமொன்றின்
கணக்காய்வு செய்யப்பட்ட நிதி அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
·
கம்பனியின்
செயற்பாட்டுக் காலவரையறை குறைந்தது ஒரு வருடத்திற்குற் பட்டிருத்தல்.
மீறுவோர் பட்டியற் திரை /
மீறுவோர் பலகை (Default
board)
பங்குச் சந்தையில் பட்டியற்படுத்துவதற்கான நிபந்தனைகள் மீறப்படுகின்ற அல்லது பின்பற்றாத கம்பனிகளை உள்ளடக்குகின்ற பலகை வொச்லிஸ்ட் பலகை எனப்படும். இதனை மீறுவோர் பட்டியற் திரை எனப்படும்.
கொழும்புப் பங்குப் பரிமாற்றகத்தில் கொடுக்கல், வாங்கல் செய்யப்படும் பிணைப்பத்திரங்களுள் சில பின்வருமாறு:
1. சாதாரண பங்குகள்(Ordinary Shares)
2. 2 முன்னுரிமை பங்குகள் (Preference Shares)
3. 3 பங்காணைப்பத்திரங்கள்(Share Warrants)
4. 4 கூட்டினைக்கப்பட்ட தொகுதிக்கடன்கள்
(Cooperate Debentures)
5. 5 அரச பிணைப்பத்திரங்கள்
(Government Debt Securities)
சாதாரண
பங்குகள் (Ordinary Shares)
சாதாரண பங்குகளைக் கொள்வனவு
செய்யும் முதலீட்டாளர்கள் அக்கம்பனியின் உரிமையாளர்களாவர். இப்பங்குகளைக் கொள்வனவு
செய்யும் முதலீட்டாளர்களுக்குக் கம்பனி பெறும் இலாபத்தில் குறிப்பிட்டளவு தொகை
உரித்துடையதாக இருந்தாலும்கூட பங்குலாபம் நிலையானதன்று. எனவே, இடர் அதிகமாகும்.
வருடாந்தப் பொதுக்கூட்டங்களில் பங்குபற்றுவதற்கான உரிமை கிடைக்கின்றது. நிர்வாக
அதிகாரமும் கிடைக்கப்பெறும். சாதாரண பங்குகள் இருவகைப்படும்.
1. வாக்குரிமையுள்ள பங்குகள்
(Voting Shares)
2. வாக்குரிமையற்ற பங்குகள்
(Non-voting Shares)
வாக்குரிமையற்ற பங்குதாரர்களுக்கு வாக்குரிமையளிக்கும் அதிகாரம் இல்லாவிடிலும் சாதாரண பங்குகளுக்குரிய ஏனைய சகல வரப்பிரசாதங்களும் கிடைக்கப்பெறும்.
https://youtu.be/gCWqy_qMRGE?si=or5agVc-JZQKsMFQ
முன்னுரிமை பங்குகள் (Preference Shares)
நிலையான பங்குலாபங்களுக்குரித்துடைய பங்குகளாகும். கம்பனியினைக் கலைக்கும் போதும் மூலதனத்தை மீளச் செலுத்தும்போதும் முன்னுரிமைப் பங்குதார்களுக்கே முன்னுரிமை கிடைக்கப்பெறுகின்றது. இப்பங்குதாரர்களுக்கு கம்பனியில் உரிமை கிடைக்கப்பெறுவதில்லை. இடர் குறைவானது. நிர்வாக அதிகாரமும் கிடையாது.
பங்காணைப்பத்திரங்கள் (Share Warrants)
எதிர்காலத்தில் குறிப்பிட்ட விலைக்குக் கம்பனியின் பங்குகளைக் கொள்வனவு செய்தவற் கான உரிமையினை வழங்கி சமகாலத்தில் கம்பனியினால் வழங்கப்படுகின்ற ஆவணமே பங்கு ஆணைப்பத்திரம் எனப்படும். எவ்வாறாயினும் பங்கு முதலீட்டிலிருந்து முதலீட்டாள ரொருவர் பெற்றுக்கொள்ளும் மூலதன இலாபம் தவிர்ந்த ஏனைய அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருப்பின் பங்கு ஆணைப் பத்திரம் பங்கு எனும் நிலைக்கு மாற்றமடையும் வரையில் அதனைத் தன்னிடம் வைத்திருத்தல் வேண்டும்.
கூட்டினைக்கப்பட்ட
தொகுதிக்கடன்கள் (Cooperate
Debentures)
கம்பனியொன்றிற்குக் கடன் மூலதனத்தைப் பெற்றுக்கொள்வதற்காக கம்பனியினால் வழங்கப்படுகின்ற பிணைப்பத்திர வகையொன்றாகும். பட்டியற்படுத்தப்பட்ட கம்பனிகளால் வழங்கப்படுகின்ற பட்டியற்படுத்தப்பட்ட தொகுதிக்கடன்களைப் பங்குச் சந்தையில் பரிமாற்றம்செய்ய முடியும். தொகுதிக்கடன் பத்திரங்களினால் முதலீட்டாளர்களுக்கு நிலையானவட்டி வீதமொன்று கிடைக்கப்பெறும்.
அரச பிணைப்பத்திரங்கள் (Government Debt Securities)
அரசினால் வழங்கப்படுகின்ற
திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் என்பது இதன் விளக்கமாகும். இடர்
மிகவும் குறைந்த முதலீடாக இது கருதப்படும். திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி
முறிகளுக்கான வட்டி வீதம் நிலையான தொன்றல்லாததாக இருப்பதுடன் அரசினால்
காலத்திற்குக் காலம் பல்வேறு வட்டி வீதங்களின் கீழ் வழங்கப்படுவதையும்
காணமுடியும்.
பங்குச் சந்தையில் பரிமாற்றப்படும் பிணைப்பத்திர முதலீடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் நேர், நேரில் அனுகூலங்களுள் சில பின்வருமாறு:
நேர் அனுகூலங்கள்
1 பங்குலாபம்
கம்பனியொன்று தமது வணிக நடவடிக்கைகளை நடத்திச் செல்வதினூடாக உழைக்கப்படும் தேறிய இலாபத்திலிருந்து கம்பனியின் பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் பெறுமானமே பங்குலாபமாகும். கம்பனிகள் பொதுவாக பங்குலாபத்தை நிதி ரீதியாகாவே அல்லது பங்குகள் எனும் வகையிலோ பிரசித்தப் படுத்தும். பங்குலாபத்தை நிதி ரீதியாகப் பிரசித்தப்படும்பொழுது பங்கொன்றிற்கு பணரீதியான பெறுமானமொன்றாகவே பிரசித்தப்படுத்தப்படும். அதாவது பங்கொன்றிற்குக் குறித்த பணப் பெறுமானமொன்றாகப் பிரசித்தப்படுத்தப்படும். உதாரணம்: பங்கொன்றிற்கு ரூபா. 2.50 எனும் வகையில்.
2 வட்டி
பட்டியற்படுத்தப்பட்ட கம்பனிகளின் மூலம் வழங்கப்படுகின்ற கூட்டிணைக்கப்பட்ட தொகுதிக்கடன் பத்திரங்களைக் கொள்வனவு செய்யும் முதலீட்டாளர்களுக்குக் கம்பனியின் மூலம் வருடாந்தம் வட்டியொன்று செலுத்தப்படும். தொகுதிக்கடன் பத்திரங்களுக்காக நிலையான வட்டி வீதமொன்றே கிடைக்கப்பெறுவதோடு. தொகுதிக்கடன் பத்திரங்களை வழங்கும் போதே வெளிப்படுத்தப்படும்.
3 ஒதுக்கங்களை மூலதனமாக்கல்
கம்பனியிடம் காணப்படும்
ஒதுக்கங்களை பங்கு மூலதனமெனும் நிலைக்கு மாற்றுதல் இங்கு இடம்பெறும். இதன்மூலம்
பங்காளருக்குக் குறித்த விதத்தில் புதிய பங்குகள் கிடைக்கப்பெறும். ஒதுக்கங்களை
மூலதனமாக்கும்போது கம்பனியில் கூறப்பட்ட மூலதனத்தில் அதிகரிப்பொன்று இடம்பெறும்.
இந்த ஒதுக்கங்களை மூலதனமாக்கல் செயன்முறைக்குக் கொழும்புப் பங்குச் சந்தையின் பூரண
அனுமதியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.
4 உரித்து வழங்கல் / உரிமை வழங்கல்
கம்பனியில் சமகாலத்தில்
இருக்கின்ற சாதாரண பங்குரிமையாளர்களுக்கு ஏதேனும் வீதமொன்றிற்கமைய பங்குகளை மீண்டும் பெற்றுக்கொடுப்பதே
உரித்து வழங்கல் எனப்படும்.
உரித்து வழங்கலின்போது சந்தை விலையைவிடக் குறைவானவிலையில் பங்குகளைப்
பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் முதலீட்டாளர்களுக்குக்கிடைக்கப்பெறும், இவ்வாறு
குறைவான விலைக்குப் பங்குகளின் உரிமையினைப்பெற்றுக்கொள்வதற்கும், அவ்வுரிமையினைக்
கூடிய விலைக்கு விற்பனை செய்துஇலாபத்தைப் பெற்றுக் கொள்வதற்கும்
முதலீட்டாளர்களுக்குச் சந்தர்ப்பத்தைப்பெற்றுக்கொள்ளுதல் உரித்து வழங்கலினால்
கிடைக்கப்பெறும் அனுகூலமொன்றாகும்.
5 மூலதன இலாபம்
எவரேனும் முதலீட்டாளரொருவர்
கொள்வனவு செய்த விலையைவிடக் கூடியவிலைக்குப் பங்குகளை விற்பனை செய்வாராயின் அதன்
மூலம் அவர் மூலதனஇலாபத்தையே பெற்றுக்கொள்கின்றார். உதாரணமாக: பங்கொன்று ரூபா. 30
நேரில் அனுகூலங்கள்
·
கம்பனியொன்றின்
சாதாரண பங்குதாரர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைப்பதுடன் பணிப்பாளரொருவராகவும்
முடியும்.
·
அரச பிணைப்
பத்திரங்களைக் கொள்வனவு செய்த தனிநபர்களுக்கு அதனைப் பெற்றுக்கொள்ளும்பொழுது
பிணைகளாகப் பயன்படுத்த முடியும்.
·
அரச
பிணைப்பத்திரங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டின் இடர் மிகக் குறைந்த மட்டத்தில்
இருப்பதோடு உயர் திரவத்தன்மையொன்றும் காணப்படும்.
·
பங்குகளை
விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கப் பெறும் மூலதன இலாபமானது வரிகளிலிருந்து
விடுபட்டதாக இருக்கும்.
·
பங்குகள்
தேவைப்படும்பொழுது பங்குச் சந்தையில் விற்பனை செய்யமுடியுமாக இருப்பதனால்
விரைவாகப் பணம் பெறும் நிலைக்கு மாற்றக்கூடிய தன்மை இருப்பதோடு பங்குகள் உயர்வான
திரவத்தன்மையையும் கொண்டிருக்கும்.
· ஒதுக்கங்களுக்கான
பங்கு வழங்கல்களுக்கான உரிமை கிடைக்கப்பெறும்
கொழும்புப் பங்குப் பரிமாற்றகம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் !
1.
No comments