ஆசிரியைக்கு துடப்பத்தினால் அடித்த ஆசிரியருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.....!

துடைப்பக் கைப்பிடி மற்றும் குடையால் தாக்கி ஆசிரியை ஒருவரை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு ஆசிரியையை குற்றவாளி எனக் கண்டறிந்த அனுராதபுரம் மேலதிக நீதவான் திருமதி. பி.கே.   சமரசிங்க ​குறித்த ஆசிரியைக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஆசிரியருக்கு ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனை விதித்தார்.  பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.

மேலும், முறைப்பாடு செய்த ஆசிரியைக்கு முப்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு பிரதிவாதியான ஆசிரியைக்கு நீதவான் உத்தரவிட்டார்.

 மிஹிந்தலை, கன்னடிய, கல்வல சந்திப்பில் வசிக்கும்  ஒரு பெண் ஆசிரியரை துடைப்பக் கைப்பிடி மற்றும் குடையால் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதாக 54 வயதான ஆசிரியைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2021 செப்டம்பர் 30,   மிஹிந்தலை, கன்னட்டியவைச் சேர்ந்த 59 வயதான ஆசிரியையின் வீட்டுக்குள் நுழைந்து, இந்த தாக்குதலை  ஆசிரியையை மேற்கொண்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியையால் தாக்கப்பட்ட ஆசிரியை,  மிஹிந்தலை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்தது.

தனது தோட்டத்தில் உள்ள ஒரு வெறிச்சோடிய கிணற்றில் இரண்டு காட்டுப்பன்றிகள் விழுந்து இறந்து விட்டதாகவும், அது துர்நாற்றம் வீசுவதாகவும் கூறியதற்காக முறைப்பாட்டாளரான ஆசிரியை திட்டிய பின்னர், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை இந்த தாக்குதலை நடத்தியதாகவும் நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்தது.

 ஆசிரியைக்கு துடப்பத்தினால் அடித்த ஆசிரியருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.....!

No comments

Theme images by fpm. Powered by Blogger.