உலகின் பெரும் செல்வந்தர் பட்டியலில் முதலிடம் யார் தெரியுமா?

 உலகின் பெரும் செல்வந்தர் பட்டியலில் முதலிடம் யார் தெரியுமா?

உலகின் பெரும் செல்வந்தர் பட்டியலில் முதலிடம் யார் தெரியுமா?

FULL DETAILS - 

 உலகின் பெரும் செல்வந்தர் பட்டியலில் முதலிடம் யார் தெரியுமா?

உலகின் பெரும் செல்வந்தர் பட்டியலில் முதலிடத்தில் எலான் மஸ்க்....

ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான உலக பணக்காரர்களின் பட்டியலை நேற்று (2) 39வது ஆண்டாக பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் 3,000க்கும் (3,028) அதிகமானோர் இடம்பிடித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 247 பேர் கூடுதலாக இடம்பிடித்துள்ளனர்.

அந்த வகையில் இந்த பட்டியலில் ஸ்பேஸ்எக்ஸ்,டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின்உரிமையாளர்  எலான் மஸ்க் 342 பில்லியன் அமெரிக்க டொலருடன் முதலிடத்தில் உள்ளார். 

கடந்த ஓராண்டு காலத்தில் இவரின் சொத்து மதிப்பில் 147 பில்லியன் டொலர்கள் சேர்ந்திருப்பதாக ஃபோர்ப்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

எலான் மஸ்குக்கு அடுத்ததாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் 216 பில்லியன் டொலருடன் இரண்டாம் இடத்திலும் இதை தொடர்ந்து அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர்  ஜெஃப் பெசாஸ் 215 பில்லியன் டொலருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர் .

முதல் 10 இடங்களைப் பிடித்த உலக பணக்காரர்கள் பட்டியலில் அமெரிக்கர்கள் 8 பேரும், பிரான்ஸ் நாட்டினர் 1 நபரும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு நபரும் உள்ளனர்.

உலகின் பெரும் செல்வந்தர் பட்டியலில் முதலிடம் யார் தெரியுமா?

No comments

Theme images by fpm. Powered by Blogger.