பாடசாலைகள் மூடப்படும் அபாயம் தொடர்பில் வெளியான தகவல்....... !

        பாடசாலைகள் மூடப்படும் அபாயம் தொடர்பில் வெளியான தகவல்....... !

      




பாடசாலைகள் மூடப்படும் அபாயம் தொடர்பில் வெளியான தகவல்....... !



நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்படும் அபாயம் தொடர்பில் வெளியான தகவல்....!


இலங்கையிலுள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதால் இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்தோடு, நாட்டில் பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை இப்போது 500ஐ தாண்டி விட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அவற்றில், அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகளில் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.

இவ்வாறான பாடசாலைகளை மூடி, அந்த மாணவர்களை வசதிகள் உள்ள பாடசாலைகளில் சேர்ப்பதற்கான முறையான திட்டத்தைத் தொடங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள பல சிறிய பாடசாலைகள் மூடப்பட்டு, அவற்றின் மாணவர்கள் தற்போது வேறு பாடசாலைகளை அனுப்பப்படுகிறார்கள்.

மூன்று கிலோமீட்டருக்குள் ஒரு பாடசாலை என்ற கருத்தை மனதில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கில் இதுபோன்ற பாடசாலைகள் அதிக அளவில் இருப்பதாகவும், சிறிய பாடசாலைகள் மூடப்பட்டு, அவற்றின் மாணவர்கள் சிறந்த வசதிகள் கொண்ட பள்ளிகளுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அத்தோடு, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது முதலாம் தரத்திற்கு மாணவர்கள் சேர்க்கும் எண்ணிக்கை ஐந்தாயிரத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்படும் அபாயம் தொடர்பில் வெளியான தகவல்....!

No comments

Theme images by fpm. Powered by Blogger.