பல்கலைக்கழகங்களில் தொடரும் அடாவடித்தனம்......!

       பல்கலைக்கழகங்களில் தொடரும் அடாவடித்தனம்......!



பல்கலைக்கழகங்களில் தொடரும் அடாவடித்தனம்......!றை......!




பல்கலைக்கழகங்களில் தொடரும் அடாவடித்தனம்......!


பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது


சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura) சேர்ந்த ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (06) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மீது கடந்த 29 ஆம் திகதி கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர் பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அதே வருட மற்றும் நான்காம் வருட மாணவர்கள் குழுவால் மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சுமார் 20 மாணவர்கள் விடுதிக்கு வந்து, தலைக்கவசத்தால் தலையிலும் முதுகு பகுதியிலும் மனிதாபிமானமற்ற வகையில் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, குறித்த மாணவர் வெலிகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த பிண்ணனியில், தாக்குதலை மேற்கொண்டதாக கிரிந்திவெல, தெல்கொட, புத்தல, குளியாப்பிட்டிய மற்றும் கலங்குட்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 22, 23 மற்றும் 24 வயதுடையவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 




பல்கலைக்கழகங்களில் தொடரும் அடாவடித்தனம்......!



No comments

Theme images by fpm. Powered by Blogger.