தேசிய கல்வியியற் கல்லூரிகளுடன் ஆசிரிய பயிற்சி கல்லூரிகளை இணைத்து பயிற்சி ..........!

   தேசிய கல்வியியற் கல்லூரிகளுடன்  ஆசிரிய பயிற்சி கல்லூரிகளை இணைத்து பயிற்சி - ..........!








தேசிய கல்வியியற் கல்லூரிகளுடன்  ஆசிரிய பயிற்சி கல்லூரிகளை இணைத்து பயிற்சி ..........!




 தேசிய கல்வியியற் கல்லூரிகளுடன்  ஆசிரிய பயிற்சி கல்லூரிகளை இணைத்து பயிற்சி ..........!


தேசிய கல்வியியற் கல்லூரிகளுடன்  ஆசிரிய பயிற்சி கல்லூரிகளை இணைத்து பயிற்சி - பிரதமர் 


தேசிய கல்வியிற் கல்லூரிகளுடன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளையும் இணைத்து பயிற்சிகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில்  தேசிய மக்கள் சக்தி எம்.பி  ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


நாடளாவிய ரீதியில் 8 ஆசிரிய பயிற்சி கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராகம ஆசிரியர் பயிற்சி கல்லூரி பேராதனை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு 150 பேருக்கு அங்கு பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தொடர்ச்சியான ஆசிரியர்  பயிற்சி மூலம் அவர்களது திறமையை அபிவிருத்தி செய்வதற்கு இந்த வருடத்தில் விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தேசிய கல்வியிற் கல்லூரிகளுடன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளையும் இணைத்து பயிற்சிகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில் 2175 பயிற்சியாளர்களை இணைத்து பயிற்சிகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம், சம்பந்தப்பட்ட பயிற்சி நிறுவனங்களின் விடுதி வசதிகளை அதிகரித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் வகையில் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.




தேசிய கல்வியியற் கல்லூரிகளுடன்  ஆசிரிய பயிற்சி கல்லூரிகளை இணைத்து பயிற்சி ..........!


No comments

Theme images by fpm. Powered by Blogger.