பாடசாலை மாணவியின் நெகிழ்ச்சியான செயற்பாடு......!
பாடசாலை மாணவியின் நெகிழ்ச்சியான செயற்பாடு......!
பாடசாலை மாணவியின் நெகிழ்ச்சியான செயற்பாடு......!
பெருந்தொகை பணத்துடன் வீதியில் கிடந்த பை! பாடசாலை மாணவியின் நெகிழ்ச்சியான செயற்பாடு
வீதியில் விழுந்து கிடந்த 17,000 ரூபாய் பணத்துடன் இருந்த பையை பாடசாலை மாணவியொருவர் உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பொலன்னறுவை- கிரிதலேகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பொலன்நறுவை கிரிதலேகம மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்று முடித்த மாணவியொருவர் பாடசாலைக்கு சென்ற பொழுது வீதியில் ஒரு பணப்பையை கண்டெடுத்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த மாணவி பணப்பையை பாடசாலை அதிபரிடம் கொடுத்து உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.
இந்தநிலையில், அதிபர் குறித்த தகவலை முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து, தகவலறிந்த 75 வயதுடைய முதியவர் அதிபரிடம் தனது பணப்பையை பெற்றுக்கொண்டுள்ளார்.
அத்தோடு, தனது பணப்பையை பெற்றுக்கொடுத்த பாடசாலை சமூகத்தினருக்கும், மாணவிக்கும் அவரது பெற்றோருக்கும் முதியவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவியின் நெகிழ்ச்சியான செயற்பாடு......!

No comments