முயற்சியாண்மை கல்வி தொடர்ச்சி.......!

  முயற்சியாண்மை கல்வி தொடர்ச்சி.......!





முயற்சியாண்மை கல்வி தொடர்ச்சி.......!



 முயற்சியாண்மை கல்வி தொடர்ச்சி.......!


அதற்கான விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன

 

·         உங்கள் வணிகச் செயற்பாடுகள் நுகர்வோரின் தேவைகளைநிறைவேற்றக் கூடியவையாக இருக்க வேண்டும். அவ்வாறில்லையெனில் கேள்வி ஏற்படாது.

·         நீங்கள் மேற்கொள்ளப்போகும் வணிக நடவடிக்கைக்குரியதிறமையும் அனுபவமும் நுட்ப அறிவும் இருத்தல் அவசியம்.

 

·         தேவையான வளங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல் வேண்டும்.

 

·         சந்தையிலுள்ள போட்டித் தன்மையை எதிர்வுகொள்ளும் ஆற்றலும் இருக்க வேண்டும். இதற்காகப் பொருளின் தரம், அளவு, பொதியிடல், குறியிடல் போன்றவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

·         ஆரம்பிக்கவுள்ள வணிகத்தின் மூலம் அனுகூலங்களைப் பெறுவது முக்கிய ஒரு விடயமாக இருக்கும்.

 

·         கொள்வனவாளரை கவர்ந்துகொள்வதற்கு உங்கள் பொருளில் அல்லது சேவையில் ஏதாவது சிறப்பம்சம் காணப்படுதல் அவசியம்

 

 வணிக வாய்ப்பு

 ஆபத்துகளை பொறுப்பேற்கின்றன நபர்களுக்கு போதுமான பிரதிபலனை பெற்றுக் கொடுக்கும் ஆற்றலுள்ள கவர்ச்சிகரமான முதலீட்டு எண்ணம் வணிக வாய்ப்பு எனப்படும் அத்தோடு அவ்வெண்ணம் நுகர்வோரின் தேவை,விருப்பங்களை நிறைவு செய்கின்ற அவர்களுக்கு பெருமானத்தை உருவாக்குகின்ற பொருட்கள் அல்லது சேவையாக இருத்தல் வேண்டும். வணிகஎண்ணங்கள்  எவ்வளவு தான் இருந்தாலும் அவற்றுள் மிகவும் பொருத்தமான எண்ணத்தை தேரிவு செய்து அதை வணிக வாய்ப்பாக மாற்றுவது முயற்சியாளரின் பொறுப்பாகும்

.

 வணிக எண்ணத்திற்கும் வணிக வாய்ப்புக்கும் இடையிலான வேறுபாடுகள்

 வணிக எண்ணம் மற்றும் வணிக வாய்ப்பு பற்றி இதுவரை நீங்கள் நன்கு அறிந்து உள்ளீர்கள் அனைத்து வணிக எண்ணங்களும் நல்ல  வணிகச் சந்தர்ப்பங்களாக இருக்காது என்பதை அறிவோம்

 இவ்விரண்டு எண்ணக்கருவிற்கும் இடையிலான வேறுபாடுகள்

வணிக எண்ணம்

வணிக வாய்ப்பு

 

 வணிக எண்ணம் இலகுவானது. பல்வேறு மூலகங்களிலிருந்து அதிகமான வணிக எண்ணங்களை பிறப்பிக்க முடியும்

வணிக வாய்ப்பு இலகுவானதான தென்று நூற்றுக்கணக்கான வணிகர் எண்ணங்களோடு குறிப்பிட்ட சில வணிக வாய்ப்புகள் தெரிவு செய்து கொள்ளலாம்.

வணிக வண்ணம் பகிரங்கமானது பெரும்பாலானோர் அதைத் தெரிந்து வைத்திருப்பார்கள்

வணிக வண்ணங்களில் இருந்து வணிக வாய்ப்புகளை வெளிப்படுத்துவதற்கு எல்லோராலும் முடியாது.

 

எல்லா வணிக எண்ணங்களையும் பிரயோக ரீதியாக செயல்படுத்த முடியாது

 

வணிக சந்தர்ப்பம் பிரயோகரீதியானது

 

 

 சிறந்த வணிக வாய்ப்பு ஒன்றின் பண்புகள்

 தேவையான வளங்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருத்தல்

 வணிக வாய்ப்பு நடைபெறுவதற்கு அவசியமான மூலப்பொருள் ஊழியம் இயந்திர சாதனங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவை இலகுவாக பெறக்கூடியதாக இருத்தல் வேண்டும்  

 கேள்வி காணப்படல்

 பொருட்கள் சேவைகள் முன்வைக்கப்படும்போது அவற்றிற்கு போதுமான கேள்வி நிலவுதல் வேண்டும் அதாவது குறிப்பிடத்தக்க நுகர்வோர் எண்ணிக்கை காணப்பட வேண்டும்.

 கவர்சிகரமான வருமானம் கிடைத்தல்

 வணிக வாய்ப்பின் மூலம் வணிகத்திற்கு பயன்படுத்திய பணத்திற்குப் போதுமான இலாபம் கிடைக்கக் கூடியதாக இருத்தல்   வேண்டும்

போட்டித் தன்மை

 சந்தையில் ஒரே வகையான வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற ஏனைய வணிக நிறுவனங்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள கூடிய ஆற்றல் இருத்தல் வேண்டும்

 சட்டதிட்டங்களுக்கு உட்படுதல்

 நாட்டு காணப்படுகின்ற சூழல் பாதுகாப்பு நுகர்வோர் பாதுகாப்பு ஊழியர்களை ஈடுபடுத்தல் வரி கொள்கை போன்ற சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வணிக வாய்ப்பாக இருத்தல் வேண்டும்

 

 பொருத்தமான வணிக வாய்ப்பு ஒன்றை தேர்வு செய்தல்

 வணிக வண்ணங்களை மதிப்பீடு செய்வதன் ஊடாக பொருத்தமான வணிக வாய்ப்பு ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்.

 சிறந்த வணிகம் எண்ணமொன்றை தேர்ந்தெடுக்கும் செயற்பாடு  மூன்று படிமுறைகளின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. முழுபகுப்பாய்வு மற்றும் சூட்சுமமான பகுப்பாய்வு SWOT பகுப்பாய்வு எனக் குறிப்பிடப்படுகிறது.

 இதை விளக்குவதற்கு கீழ் வரும் புனல் மாதிரியே பயன்படுத்த முடியும்.

 

 முதலாவது படிமுறை

முழு பகுப்பாய்வு

 ஆயிரக்கணக்கில் பிறந்த வணிக எண்ணங்களில் ஒவ்வொரு எண்ணத்தையும் எடுத்து

·         உற்பத்தியை விற்பனை செய்ய முடியுமா?

·         வளம் தேவையான அளவு உள்ளதா?

·         முயற்சியாளரின் ஆற்றலுக்கும் விருப்பத்திற்கும் பொருந்துகின்றதா?

·         உதவி உபகாரங்கள் வழங்க கூடியவர்கள் உள்ளனர்?

·         சட்ட பிரச்சனைகள் உள்ளதா?

·         தேவையான மூலதனத்தை பெற்றுக் கொள்ள முடியுமா?

·          போட்டியாளர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளதா?

 இரண்டாவது படிமுறை

சூட்சுமமான பகுப்பாய்வு

 முதலாம் படிமுறையில் தெரிவு செய்த, வணிக எண்ணங்கள் ஒவ்வொன்று தொடர்பாகவும் இப்பகுப்பாய்வு மேற்கொள்ளப்படல் வேண்டும் கீழே காட்டப்படும் எடுக்கோள்கள் ஒவ்வொரு வணிக எண்ணங்களின் மீதும் செல்வாக்குச் செலுத்துவதைத் கருத்தில் கொண்டுமே மிகவும் சிறந்த வணிக எண்ணங்கள் மூன்றை மட்டும் தெரிவு செய்வதே, சூட்சுமமான பகுப்பாய்வு ஆகும் இதனூடாக முதலாம் படிமுறையில் நோக்கிய விடயங்கள் ஆழமாக நோக்கப்படுவதே இடம் பெறுகினறது.

 சூட்சுமமான பகுப்பாய்விற்குப்  பயன்படுத்தப்படும் எடுகோள்கள்

 சந்தை காணப்படுதல்

 

·         குறித்த உற்பத்திகளை சந்தையில் முன்வைக்கும் போது, அதற்கு போதுமான கொள்வனவாளர்  உள்ளனரா? இல்லாவிடின் வணிகத்தில் நிலைத்திருக்கப் போதுமான வருமானத்தை பெறக்கூடிய விற்பனை காணப்படுகின்றதா? என்பதே இங்கு கவனிக்கப்படுகின்றது. அத்தோடு எதிர்காலத்தில் சந்தையை மேலும் விரிவு படுத்துவதற்கு ஆற்றல் காணப்படுகின்றதா என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

 மூலப் பொருட்களை பெறுவதில் உள்ள வசதி

·          வணிமொன்றின் உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடர்ந்து இலகுவாக நடத்தி செல்வதற்கு, குறைந்த செலவில் தரமான மூலப்பொருளை இலகுவாக பெற முடியுமா? என்பதாகும் அவ்வாறு இல்லாவிடின் உற்பத்தி வீழ்ச்சியடைவதற்கு காரணமாக அமையும்.

 

 

 தேவையான மூலதனத்தை பெறக்கூடிய வசதி

·          வணிக எண்ணங்கள் சிலவற்றை வணிக வாய்ப்புகளாக மாற்றுவதற்கு ஆரம்பத்தில் அதிகமான மூலதனம் தேவைப்படுகிறது. இங்கு தேவையான மூலதனத்தை குறைந்த செலவில் பெற்றுக் கொள்ள முடியுமா? என்பதில் கவனஞ் செலுத்த வேண்டும்.

 

 

 அரச சட்டதிட்டம், கொள்கை ஊக்குவிப்பு

·          அவ்வளவுதான் இலாபகரமானதாக இருந்தாலும் கூட சில வணிகத்துறைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்ற அரசு சட்டங்கள் கொள்ளைகள் உள்ளன. அதாவது வணிகத்தின் மீது செல்வாக்கு செலுத்துகின்ற சொற்றாடல் சட்டம் ஊழியர் சட்டம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ஏற்றுமதி இறக்குமதி கொள்கை போன்றன அவற்றுள் செலவாகும்

·          இதை குறித்த வணிக எண்ணம் மீது எவ்வகையில் சார்பானதாக உள்ளது எனவும் வரிச்சலுகை, உட் கட்டமைப்பு வசதி, கடன் திட்டம் போன்ற அரச ஊக்குவிப்புக்கள் காணப்படுகின்றமை தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்

 

 

 போட்டித் தன்மை

போட்டித் தன்மைஎன்பது ஒரு நிறுவனத்தின் அல்லது திட்டத்தின் சந்தையில் உள்ள போட்டியுடன் தொடர்புடைய தன்மைகளை குறிக்கிறது. இது, ஒரு வணிகம் எவ்வாறு அதன் போட்டியாளர்களுடன் போட்டியிடும் மற்றும் சந்தையில் தனது நிலையை உறுதி செய்யும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இதன் முக்கிய அம்சங்கள்:

 

போட்டியாளர்களின் விவரங்கள்

 சந்தையில் உள்ள பிரதான போட்டியாளர்களின் அடிப்படைகளைப் பற்றிய தகவல்.

 போட்டியாளர்களின் வலிமைகள் மற்றும் பலவீனங்கள்**: போட்டியாளர்களின் உற்பத்தி மற்றும் சேவைகளின் சிறந்த அம்சங்கள் மற்றும் குறைவுகள்.

 

விலைகள் மற்றும் செலவுகள்

போட்டியாளர்களின் விலை மாதிரிகள் மற்றும் உங்களின் விலையை ஒப்பிடுதல்.

செலவுகளை குறைத்தல்

உங்கள் வணிகத்திற்கு தேவையான செலவுகளைச் சமநிலைப்படுத்தும் திறன்கள்.

 

வாடிக்கையாளர் நம்பிக்கை

  பொதுவாக நம்பிக்கை வாடிக்கையாளர்களின் உங்கள் நிறுவனத்திற்கும் போட்டியாளர்களுக்குமான நம்பிக்கைகளைப் புரிந்துகொள்ளல்.

உற்பத்தி மற்றும் தரம்

 போட்டியாளர்களின் உற்பத்தி தரத்துடன் ஒப்பிடல்.உற்பத்தி திறன் மற்றும் தரத்தை உறுதிப்படுத்தல்.

 

 

இந்த அம்சங்களைப் பொறுத்து, ஒரு நிறுவனத்தின் போட்டித் தன்மையை புரிந்து கொண்டு, சந்தையில் வெற்றிகரமாகச் செயல்பட முடியும்.

·          தனது உற்பத்திக்கு நிகரான உற்பத்தி அல்லது 18 உற்பத்திகளை சந்தித்து வழங்குகின்ற வேறு நபர்கள் நிறுவனங்கள் பற்றிய அவர்களின் பலம் மற்றும் காயங்கள் பற்றிய மறைந்திருப்பதோடு எதிர்காலத்து சந்தையில் நுழைய காத்திருக்கும் போட்டியாளர்கள் பற்றிய கவனஞ்செலுத்துதல் வேண்டும்

 முயற்சியாளரின் றிவு தேர்ச்சி மற்றும் பற்று

·          தெரிவு செய்த வணிக ண்ணங்களை செயல்படுத்துவதற்கு முயற்சியாளரிமுள்ள ஆரம்ப அறிவு,அனுபவம் மற்றும் பற்று மிக முக்கியமானதாகும். அப்போது வணிக முகாமைச் செயற்பாட்டிற்கும் இலகுவாக இருக்கும். வணிக தீர்மானங்களை மேற்கொள்ளவும், தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றவும் இவை முக்கிய காரணிகளாக உள்ளன.

 

 ஊழியர்களை பெறுவதற்கான ஆற்றல்

·          மணிகண்டங்களை செயற்படுத்துவதற்கு தேவையான பயிற்சி அல்லது பயிற்சி எட்டு ஊழியர்கள் தாராளமாக உள்ளனரா எனவும், சேர்த்துக் கொள்வதற்காக அல்லது பயிற்சி வழங்குவதற்காக ஏற்படுகின்ற செலவுகள் தொடர்பாகவும் கவனம் செலுத்துதல் வேண்டும்

 இடர்

·          வணிகம் நட்டமடைவதன் காரணமாக, தோல்வியுறுவதற்கான வாய்ப்புகளை அறிந்திருத்தல் வேண்டும்.

 விரிவு படுத்துவதற்கான வசதி

·         வணிகமொன்றை ஆரம்பிப்பதற்கு வேறு தடைகள் உள்ளனவா?   குறைந்த பழத்தின் மூலம் இலகுவாக ஆரம்பிக்க முடியுமா போன்ற விடயங்களை கருத்தில் கொள்ளல் வேண்டும்  

சூட்சுமமனா பகுப்பாய்விற்காக மேலே குறிப்பிட்ட எடுகோள்களுக்குப் பதிலாக, பொருத்தமான வேறு எடுகோள்களையும் பயன்படுத்தலாம். அதிகமான நாடுகளை கவனத்தில் கொள்வதன் ஊடாக வணிக வண்ணங்களை மதிப்பீடு செய்து மிகவும் சரியான வணிக வாய்ப்பைத் தெரிவு செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.

 தெரிவு செய்த வணிக எண்ணங்கள் தொடர்பான பல்வேறு பட்ட எடு கோள்களின் கீழ் நன்மையானதா? அல்லது தீமையானதா? என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். பின்னர் அவற்றைக் கீழ் வரும் புள்ளி திட்டத்திற்கு உட்படுத்த முடியும். அப் புள்ளி திட்டத்தைப் பயன்படுத்தி கீழ்வரும் அட்டவணைக்கு அமைவாக வணிக எண்ணங்களை மதிப்பீடு  செய்ய முடியும்.

 

SWOT பகுப்பாய்வு

 

SWOT பகுப்பாய்வு என்றால் என்ன?

SWOT பகுப்பாய்வு என்பது ஒரு நிறுவனம் செயல்படும் போட்டிச் சூழலுடன் தொடர்புடைய நிலைமையைப் புரிந்துகொள்ளப் பயன்படுத்தப்படும் பகுப்பாய்வு ஙட்பமாகும். SWOT (Strengths, Weaknesses, Opportunitiesஇ மற்றும் Threats) என்பது நிறுவனம் முகங்கொடுக்கும் பலம், பலவீனங்கள், வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களைக் குறிக்கிறது. இது உங்கள் வணிகத்திற்கான வலிந்த போட்டித் தாக்குதல் மற்றும் தற்காப்பு மூலோபாயங்களை உருவாக்கப் பயன்படும் எளிய ஆனால் சக்திவாய்ந்த ஒரு கருவியாகும்.

 

நீங்கள் இதுவரைக்கும் வணிகத்தின் பலம், பலவீனம், வாய்ப்பு, சவால் போன்ற விடயங்களைக் கற்றுள்ளீர்கள். சூட்சுமமான பகுப்பாய்வு முடிவில் தெரிவு செய்த வணிகம் ஒவ்வொன்றையும் வெவ்வேறாக எடுத்து SWOT பகுப்பாய்வு செய்வதனூடாக முயற்சியாளரால் மிகவும் பொருத்தமானதும், இலகுவானதுமான வணிக வாய்ப்புச் செயற்பாடுகளை இனங்காண முடியும்.

 

 

பலங்கள்

 

இவை நிறுவனத்தின் போட்டித்தன்மையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளக காரணிகளைக் குறிக்கின்றன. இவை சந்தையில் நீங்கள் மேல் நிலையைக் கொண்டிருக்கவும், உங்கள் சந்தைப் பங்கு மற்றும் வளர்ச்சியைத் தக்கவைக்கவும் உதவுகின்றன. பின்வரும் கேள்விகள் உங்கள் நிறுவனத்தின் பலத்தை அடையாளம் காண வழிகாட்டியாகப் பயன்படுத்தப்படலாம்.

 

• போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், அவர்களை விடவும் முன்னேறுவதில் வெற்றிகரமான மற்றும் பயனுள்ள நிறுவன செயல்முறைகள் யாவை?

• நிறுவனத்தின் மதிப்புமிக்க சொத்துக்கள் (பணியாளர்கள் உட்பட) எவை நிறுவனத்திற்கு மற்றவர்களை விட மேன்மையை வழங்குகின்றன?

• உங்கள் தனிப்பட்ட விற்பனை முன்மொழிவுகள் என்ன?

• உங்கள் நிறுவனம் அல்லது வர்த்தகநாமத்தின் தனித்துவம்


பலவீனங்கள்

 

உங்கள் பலத்தால் பெறப்பட்ட முன்னணியைக் குறைக்கும் காரணிகள் உள்ளதா? உங்கள் நிறுவனத்தில் உள்ள இந்த எதிர்மறை காரணிகள் பலவீனங்களாக வரையறுக்கப்படுகின்றன. பின்வரும் கேள்விகளைக் கேட்பதன் மூலம் அவற்றை அடையாளம் காணலாம்.

 

• உங்கள் வணிகம் அல்லது தயாரிப்பு, போட்டியாளர்களுக்கு அல்லது வெளிப்புற சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு என்ன பாதிப்புகளைக் கொண்டுள்ளது?

• நிறுவனத்தில் செயல்திறன் அற்ற செயல்முறைகள் என்ன?

• உங்கள் நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் என்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்?

• உங்கள் போட்டியாளர்களை விட நீங்கள் பின்தங்கியிருப்பதற்கு அல்லது அவர்களைப் போல் விரைவாக உங்களை மாற்றியமைக்க முடியாததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?


வாய்ப்புகள்

 

உங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களிக்கும் வெளிப்புறக் காரணிகள் வாய்ப்புகளின் கீழ் வருகின்றன. பெரும்பாலான நேரங்களில், இந்த காரணிகள் நீங்கள் பயன்படுத்தக்கூடிய வெளிப்புற சூழலில் ஏற்படும் மாற்றங்கள்.

• உங்கள் நிறுவனத்திற்கு சாதகமாக நடக்கும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தொடர்பான மாற்றங்கள் உள்ளதா?

• சந்தையில் புதிய போக்குகள் உங்கள் வணிகத்தை நேர்மறையான வகையில் பாதிக்கிறதா?

• உங்கள் நிறுவன வளர்ச்சி சந்தை வளர்ச்சிக்கு ஏற்ப உள்ளதா?

 

அச்சுறுத்தல்கள்

 

உங்கள் வணிகத்தை எதிர்மறையாக பாதிக்கும் வெளிப்புற காரணிகள் இருந்தால், அத்தகைய காரணிகள் அச்சுறுத்தலின் கீழ் வரும். உங்கள் நிறுவனம் ஏதேனும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறதா என்பதைப் புரிந்துகொள்ள பின்வரும் கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

 

• சந்தையில் ஒரு சாத்தியமான போட்டியாளரின் நுழைவு உங்களை எவ்வாறு பாதிக்கிறது?

• நீங்கள் பின்தங்கியுள்ள சூழ்நிலையில் உங்கள் போட்டியாளர்(கள்) சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் தம்மைக் காலத்திற்கு ஏற்ப புதுப்பித்த நிலையில் உள்ளவரா?

• அந்த புதிய சந்தைப் போக்கு உங்கள் வணிகத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறதா?

• நுகர்வோர் நடத்தை முறைகள் எதிர்மறையானதா?

 

 

ஒரு உணவகத்திற்காக செய்யப்பட்ட ஒரு கற்பனையான SWOT பகுப்பாய்வைப் பார்ப்போம்.

SWOT பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு இவை மட்டும் தான் விதிகள் அல்லது வழிமுறைகள் என்று எதுவும் கிடையாது. ஏனெனில் SWOT பகுப்பாய்வுக் கட்டம் தொழில்துறையைப் பொறுத்து ஒரு வணிகத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறுபடும். இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட்டு, அமர்வில் பங்கேற்றவர்களிடமிருந்து அனைத்து சிந்தனைகளும் சேகரிக்கப்படும் போது, சிந்தனைகளின் அடிப்படையில் சாத்தியமான மூலோபாயங்களை உருவாக்க முடியும். உள்ளக பலத்துடன் வெளிப்புற காரணிகளை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளைக் கண்டறிவது இந்த செயல்முறையின் அடுத்த படியாகும். நிறுவனங்கள் தங்கள் பலத்தை மேம்படுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கான வழிகளைத் தேடலாம் அல்லது தங்கள் பலத்தைப் பயன்படுத்தி வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

பொதுவான வணிக எண்ணம் தொடர்பான SWOT பகுப்பாய்வில் ஈடுபடும்போது பயன்படுத்தக்கூடிய காரணிகள் சில கீழே தரப்பட்டுள்ளன.

 

சாதகமான காரணி                                  பாதகமான காரணி

 

அசுச் சூழல்

   பலம்                                         பலவீனம்

    உதாரணம் –                                    உதாரணம்

·         வளங்கள் காணப்படுதல்                   நிதிப்பற்றாக்குறை                 

·         திறமையான ஊழியர்கள்                  காலாவதியான இருத்தல்                                      தொழில்நுட்பம்

·         தரமான உற்பத்திகள்                       மூலபொருள்                                                     

·         ஸ்திரமான நிதி நிலமை                      பற்றாக்குற

 

புறச் சூழல்

வாய்ப்புகள்                      சவால்கள்

     உதாரணம் –                         உதாரணம்

·         அதிகமான நுகர்வோர்             தேவையற்றா அரசியல்

      பிரிவினர்உள்ளமை                     தலையீடுகள்

·         போட்டியாளர்கள் விலகல்        கடுமையான சட்டதிட்டம்

·         தொழிநுட்ப முன்னேற்றம்        இயற்கை அனர்த்தங்கள்

·         தகவல் மற்றும் ஆராய்ச்சி        பொருளாதார வீழ்ச்சி

·         அரச ஊக்குவிப்புகள்       

 

 

 

சூட்சுமமான பகுப்பாய்வினூடாக குறிப்பிட்ட மூன்று வணிக எண்ணங்கள் தொடர்பாக SWOT பகுப்பாய்வினை மேற்கொள்ளும்போது அதிகமான பலம் மற்றும் வாய்ப்புக்கள் உள்ளதும் குறைந்த பலவீனம் மற்றும் சவால்கள் உள்ளதுமான வணிக எண்ணங் களைத் தெரிவு செய்து கொள்ளலாம்.

 

வணிக வாய்ப்பு மதிப்பீடு, வணிக எண்ணத்தின் பிறப்பு, முழுப் பகுப்பாய்வு, சூட்சுமமான பகுப்பாய்வு போன்ற படிமுறைகளை இதுவரை நீங்கள் கற்றுள்ளீர்கள். வணிகத் திட்டம் தயாரித்தல் மற்றும் வணிகங்களின் செயற்பாடுகள் போன்றவற்றின் படிமுறைகளைத் தரம் 11 இல் கற்றுக் கொள்ளலாம்.

  

SWOT பகுப்பாய்வை யார் நடத்த வேண்டும்?

 

வணிகம் முழுவதும் பொறுப்பான பதவிகளை வகிக்கும் நபர்கள் SWOT பகுப்பாய்வில் ஈடுபட வேண்டும். நிறுவனத்திற்குள் வெவ்வேறு கண்ணோட்டத்தில் உள்ளவர்கள் அணியாக ஈடுபடும்போது, அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அனைவருக்கும் ஒன்றிணைந்து இந்த பகுப்பாய்வில் ஈடுபடுவது முக்கியம். இது நிறுவனம் மற்றும் அதன் பணியாளர்களை உள்ளடக்கிய ஒரு சிந்தனை வெளிக்கொணர்வு அமர்வாக இருக்கலாம் அல்லது இது மிகவும் தீவிரமான மற்றும் மூலோபாய மட்டத்தில் நடத்தப்படலாம். பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் ஊழியர்களின் சிந்தனைகளை ஒரு எளிய வழிமுறை மூலமாக ஒன்று திரட்டலாம்;. அதன் பின்னர் பதில்களை ஒன்றாக திரட்டி, பகுப்பாய்வு செய்து முக்கிய நுண்ணறிவுகளைக் கணக்கிடும் ஒர் மூலோபாயத்தை முன்வைக்கலாம்.

 

ஆக்கப்பூர்வமான வணிக எண்ணத்திற்கு சட்டப் பாதுகாப்பை பெறுதல்

 

பொருத்தமான வணிக வாய்ப்பைப் பயன்படுத்தி, வணிக உலகில் பிரவேசிக்கின்ற முயற்சியாளர் தனது வணிக  எண்ணங்கள்தொடர்பாக, சட்ட ரீதியான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் இவரின் வணிக எண்ணத்தை வேறொருவர் ஆக்கிரமித்துக்கொள்ள வழி ஏற்படும். அதனால் முயற்சியாளர் ஒருவர் புலமைச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு, ஆக்கவுரிமைப் பத்திரந்தைப் பயன்படுத்துகின்றார்.

 

ஆக்கவுரிமை Patent

புத்தாக்குனருக்கு ஏகபோக உரிமைக்காக அரசு ஆக்கவுரிமையை வழங்குகிறது. உதாரணமாக: மற்றவர்கள் அதைத் தயாரிப்பதை தடுப்பதற்கு, ஆக்கவுரிமை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திகதியிலிருந்து 20 வருடங்களுக்கு தரமான புத்தாக்கங்களை பயன்படுத்துவதையும் மற்றவர்கள் விற்பனை செய்வதையும் தடுப்பதற்காக அரசு இந்த ஆக்கவுரிமையை வழங்குகின்றது. இந்த ஆக்கவுரிமையின் உரிமையாளர் அவர் ஆக்கவுரிமை பெற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும், விற்க முடியும் அல்லது நிதிசார்ந்த பெற்றுக்கொள்ள முடியும். பயன்களைப்

 

 

 

ஆக்கவுரிமை என்பது புதிய கண்டுபிடிப்பிற்கு அரசால் வழங்கப்படும் சான்றிதழ்ஆகும். புதிய கண்டுபிடிப்புக்களாக,

·         புதிய உற்பத்தி

·         புதிய இயந்திரம்

·          புதிய செயற்பாடு

·         மேற்படி காரணிகள் ஒன்றிணைப்பு

·         நடைமுறையில் உள்ள கண்டுபிடிப்பொன்றை மீளப் புதுப்பித்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

 

 

புதிய கண்டுபிடிப்புக்களைச் சந்தையில் முன்வைக்கும்போது, அதனைப் போன்று உருவாக்குவதற்கு வேறு நபர்களும் முனைவர். அதனால் புதிய கண்டு பிடிப்புக்களின் உரிமையைப் பாதுகாத்துக்கொள்ள ஆக்கவுரிமைப் பத்திரத்தைப் பெற வேண்டியுள்ளதோடு, அதன் ஆயுட் காலம் இருபது வருடங்களாகவும் உள்ளது. தேவையாயின் தனது ஆக்கவுரிமைப் பத்திரத்தை வேறு நபர்களுக்கு விற்பனை செய்யலாம். அப்போது அதன் உரிமை விலைக்கு வாங்கியவர்க்கு உரித்தாகும்.


 முயற்சியாண்மை கல்வி தொடர்ச்சி.......!




No comments

Theme images by fpm. Powered by Blogger.