செல்பி மோகத்தால் பறிபோனமாணவிகள்.............!
செல்பி மோகத்தால் பறிபோனமாணவிகள்.............!
செல்பி மோகத்தால் பறிபோனமாணவிகள்.............!
செல்பி மோகத்தால் பறிபோன இரு மாணவிகள் : முல்லைத்தீவில் சோகம்
முல்லைத்தீவு (Mullaitivu) - குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் தவறி விழுந்த இரண்டு மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (01.06.2025) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “முல்லைத்தீவு குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் செல்பி (புகைப்படம்) எடுப்பதற்காக இரு மாணவிகள் சென்றுள்ளனர்.
இந் நிலையில் இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இரு மாணவிகளும் பூதன்வயல் மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செல்பி மோகத்தால் பறிபோனமாணவிகள்.............!
No comments