உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு......!

     உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு......!








உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு......!




 உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு......!



[உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு...

     

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையை நவம்பர் 10 முதல் டிசம்பர் 05 வரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


அதன்படி, ஜூன் 26 முதல் ஜூலை 21ஆம் திகதிவரை விண்ணப்பங்கள் இணையவழியில் வரவேற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் விண்ணப்பங்களை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஐப் பார்வையிட்டு, தொடர்புடைய வழிமுறைகளைப் படித்து, அதற்கேற்ப உங்கள் விண்ணப்பங்களைச் சரியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பரீட்சை விண்ணப்பங்களை ஜூலை 21 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு சமர்ப்பிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இறுதித் திகதி எந்தக் காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படாது என்பதையும் பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்துகிறது.


மேலும், இது தொடர்பாக ஏதேனும் தகவல் தேவைப்பட்டால், பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொள்ளலாம்.


🚫தொலைபேசி இலக்கங்கள்


👉0112784208/0112784537/0112785922


👉துரித இலக்கம் - 1911


👉மின்னஞ்சல் - gcealexam@gmail.com





 உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு......!

 

No comments

Theme images by fpm. Powered by Blogger.