ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் இடம்பிடித்த..........!

ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் இடம்பிடித்த..........!










ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் இடம்பிடித்த..........!





ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் இடம்பிடித்த..........!


இலங்கையின் கொத்து ரொட்டியும், வட்டிலப்பமும் ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில்!



ஒக்ஸ்ஃபோர்ட் (Oxford) ஆங்கில அகராதியின், 2025 ஜூன் புதுப்பிப்பில், இலங்கையில் பயன்படுத்தப்படும் பல தனித்துவமான சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

இது, இலங்கையின் மொழி, கலாசார தனித்துவங்களை உலக அரங்குக்குக் கொண்டு செல்லும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது. 


இலங்கையில் நெல் அறுவடைக்காக நிலத்தைத் தயார் செய்வதைக் குறிக்கும் சிங்கள சொல்லான அஸ்வெத்தும என்னும் சொல் 'Asweddumize' என்று ஒக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளது. 


இதனைத் தவிர வெட்டப்பட்ட ரொட்டி, இறைச்சி, காய்கறிகள், மசாலா கலந்து செய்யப்படும் சாலையோர உணவான கொத்து ரொட்டி என்ற சொல்லும் ஒக்ஸ்போரட் அகராதியில் இடம்பிடித்துள்ளது. 


மெல்லுங் என்ற 'Mallung' தேங்காயும் மசாலாவும் கலந்து சுருட்டிச் செய்யப்பட்ட கீரை உணவு அல்லது கீரை சுண்டலும், கிரிபத் எனப்படும் பாற்சோறும் ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன. 


அவ்ருது என்ற சிங்கள சொல்லும், இஸ்லாமியர்களின் முக்கிய உணவாகக் கருதப்படும் வட்டலப்பம், என்ற சொல்லும் சிங்கள துல்லிசையான பைலா என்ற சொல்லும் ஒக்ஸ்போர்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. 


பபரே 'Papare' என்ற கிரிக்கெட் விளையாட்டுகளில் பரவலாக இசைக்கப்படும் பேன்ட் இசையைக்குறிக்கும் சொல்லும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 


வலவ்வ என்ற இலங்கையில் நில அளவையுடன் கூடிய பிரமாண்டமான வீட்டைக் குறிக்கும் சொல்லும், ஒசரி என்ற சிங்கள பெண்கள் அணியும், தனித்துவமான மடிப்பு வடிவத்தைக் கொண்ட பாரம்பரிய புடவை என்ற சொல்லும் ஒக்ஸ்போர்ட் பிந்திய சேர்க்கையில் இடம்பிடித்துள்ளன.



ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் இடம்பிடித்த..........!


No comments

Theme images by fpm. Powered by Blogger.