செயற்கை நுண்ணறிவால் கட்டுப்படுத்தப்படும் கருவிகள் பொருத்த தீர்மானம்.............!

செயற்கை நுண்ணறிவால் கட்டுப்படுத்தப்படும் கருவிகள் ; பேருந்துகளில் பொருத்த தீர்மானம்

நீண்டதூர பயணச் சேவையில் ஈடுபடுகின்ற அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு செயற்கை நுண்ணறிவால் கட்டுப்படுத்தப்படும் கருவிகளைப் பொருத்த நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், எதிர்வரும் 2 மாதங்களுக்குள் 40 பேருந்துகளுக்கு இவ்வாறான கருவிகள் பொருத்தப்படவுள்ளதாகக் கூறியுள்ளார்.

நீண்டதூர பயண சேவையில் ஈடுபடுகின்ற பேருந்துகளில் பொருத்தப்படவுள்ள இந்த கருவிகள், பேருந்து சாரதிகளை அவதானத்துடன் வைத்திருக்க உதவும்.

பேருந்துகளுக்கான இந்த கருவி பொருத்தப்படும் வேலைத்திட்டத்தை விரிவாக்க கட்டம் கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இலங்கை போக்குவரத்து சேவையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டி இருப்பதாகவும், இதற்காக முன்வைக்கப்பட்ட 85 அம்ச யோசனை ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவால் கட்டுப்படுத்தப்படும் கருவிகள்  பொருத்த தீர்மானம்.............!

No comments

Theme images by fpm. Powered by Blogger.