ஒரு தனி நபர் இலங்கை நாட்டில் பேணும் வங்கி கணக்குகளும் அதையும் தாண்டி வேறு நாட்டு வங்கிகளில் திறக்கும் வங்கிகணக்கு வகைகளும் அவற்றின் மூலம் அவர் எதிர்பார்க்கும் நன்மைகளும் தீமைகளும்..........!
ஒரு தனி நபர் இலங்கை நாட்டில் பேணும் வங்கி கணக்குகளும் அதையும் தாண்டி வேறு நாட்டு வங்கிகளில் திறக்கும் வங்கிகணக்கு வகைகளும் அவற்றின் மூலம் அவர் எதிர்பார்க்கும் நன்மைகளும் தீமைகளும்..........!
ஒரு தனி நபர் இலங்கை நாட்டில் பேணும் வங்கி கணக்குகளும் அதையும் தாண்டி வேறு நாட்டு வங்கிகளில் திறக்கும் வங்கிகணக்கு வகைகளும் அவற்றின் மூலம் அவர் எதிர்பார்க்கும் நன்மைகளும் தீமைகளும்..........!
வங்கிகள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான தூண்களாகும். இலங்கையில் பல்வேறு வகையான வங்கிகள் உள்ளன. அவை பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசுக்கான நிதி சேவைகளை வழங்குகின்றன. இவை சேமிப்பு, கடனுதவி, பரிவர்த்தனை, முதலீடு மற்றும் சர்வதேச வணிக தேவைகளுக்காக பயன்படுகின்றன. இலங்கையில் வங்கிகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இலங்கையில் வங்கிகள் இரண்டு முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன:
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் (Licensed Commercial Banks - LCBs)
இவை பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பரந்த அளவிலான வங்கி சேவைகளை வழங்குகின்றன உதாரணமாக:
- சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகள்
- கடன்கள் (Loans)
- கடன் அட்டைகள் (Credit Cards)
- வெளிநாட்டு பரிவர்த்தனைகள் (Foreign Exchange)
- முதலீட்டு சேவைகள் (Investment Services)
உதாரணங்கள்:
- Bank of Ceylon (BOC)
- People's Bank
- Commercial Bank of Ceylon
- Hatton National Bank (HNB)
- Sampath Bank
- Seylan Bank
உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள் (Licensed Specialised Banks - LSBs)
இவை குறிப்பிட்ட நிதிச் சேவைகளில் நிபுணத்துவம் பெற்றவை, பொதுவாக:
- வீட்டு கடன்கள்
- சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியுதவி
- வளர்ச்சித் திட்டங்கள்
உரிமம் பெற்ற வணிக வங்கிகள் (Licensed Commercial Banks) இவை பொதுவான வங்கிச் சேவைகளை வழங்குகின்றன. சில முக்கிய வணிக வங்கிகள்
* வங்கி ஆப் சிலோன் (Bank of Ceylon)
* மக்கள் வங்கி (People's Bank)
* கொமர்ஷல் வங்கி (Commercial Bank of Ceylon PLC)
* ஹட்டன் நேஷனல் வங்கி (Hatton National Bank PLC)
* சம்பத் வங்கி (Sampath Bank PLC)
* சேயிலன் வங்கி (Seylan Bank PLC)
* நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி (Nations Trust Bank PLC)
* DFCC வங்கி (DFCC Bank PLC)
* பான் ஏசியா வங்கி (Pan Asia Banking Corporation PLC)
* யூனியன் வங்கி (Union Bank of Colombo PLC)
* அமானா வங்கி (Amana Bank PLC)
* கர்கில்ஸ் வங்கி (Cargills Bank Limited)
மக்கள் வங்கி (People's Bank)
மக்கள் வங்கியால் பேணப்படும் வைப்புக்களின் வகைகள்
நடைமுறைக்கணக்கு (Current Deposits)
சேமிப்பு கணக்கு (Savings Deposits)
நிலையான வைப்பு(Fixed Deposits)
வெளிநாட்டு நாணயக் கணக்கு
நடைமுறைக் கணக்கு
தனிநபர் நடைமுறைக் கணக்கு
தனிநபர் நடைமுறைக் கணக்கு, சம்பளம் பெறுகின்ற ஒவ்வொரு தனிநபர்களுக்குமான, அவர்களின் நிதியியல் கொடுக்கல்வாங்கல்களை பெருமையுடனும், இலகுவாகவும் முன்னெடுப்பதற்கும் வழிவகுக்கும் கணக்காகும்.
தனிநபர் நடைமுறைக் கணக்கின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்
பிரத்தியேகமான காசோலைப் புத்தகங்கள்
எந்தவொரு கிளையிலும் காசோலைகளை உடனடியாகவே பணமாக மாற்றிக்கொள்ளும் சௌகரியம்.
உங்களுடைய கணக்கினை தொழிற்படுத்துவதற்கு சர்வரீதியாகச் செல்லுபடியாகும் டெபிட் அட்டை.
காசோலை விரைவாக தீர்வையாகும் வசதி.
வருடத்தில் 365 நாட்களும் எமது பண வைப்பு இயந்திரங்கள் மூலமாக பண வைப்பு
சுய வங்கிச்சேவை, மொபைல், இணைய மற்றும் குரல் வங்கிச் சேவைகளின் சௌகரியத்தை அனுபவித்தல்
குறைவான கட்டணங்கள் (சேவைக் கட்டணம் மற்றும் உரிய ஏனைய கட்டணங்கள்)
கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை
பீப்பிள்ஸ் நடைமுறைக் கணக்கொன்றை நீங்கள் ஆரம்பித்து காசோலைகளை விநியோகிப்பது கிட்டத்தட்ட பணத்திற்கே ஒப்பானது.
கணக்கின் அம்சங்கள்
பிரத்தியேகமான காசோலைப் புத்தகங்கள்
எந்தவொரு கிளையிலும் காசோலைகளை உடனடியாகவே பணமாக மாற்றிக்கொள்ளும் சௌகரியம்
காசோலை விரைவாக தீர்வையாகும் வசதி
விஷேட நன்மைகள்
வருடத்தில் 365 நாட்களும் 24 மணித்தியாலமும் எமது பண வைப்பு இயந்திரங்கள் மூலமாக பண வைப்பு
மொபைல் வங்கிச்சேவை, குரல் வங்கிச்சேவை மற்றும் இணைய வங்கிச்சேவை வசதி.
குறைந்த கட்டணங்கள் (சேவைக் கட்டணம் மற்றும் உரிய ஏனைய கட்டணங்கள்)
உங்களுடைய கணக்கினை தொழிற்படுத்துவதற்கு சர்வரீதியாகச் செல்லுபடியாகும் டெபிட் அட்டை.
கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை
சேமிப்புக் கணக்கு
இசுரு உதான
இசுரு உதானா என்பது குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்காகும், இது பிறந்தது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் எந்தவொரு மக்கள் வங்கிக் கிளையிலும் குறைந்தபட்ச வைப்புத்தொகையான ரூ.100/- உடன் கணக்கைத் திறக்க முடியும். குழந்தை பிறந்தது முதல் பாலர் பள்ளிக்குச் செல்லும் வயது வரையிலான குழந்தைகளுக்கான கணக்கைத் திறப்பதற்கான ஆரம்ப வைப்புத்தொகையை வங்கி டெபாசிட் செய்யும், ஏற்கனவே பாலர் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு ரூ.250/-.
இந்தக் கணக்கின் தனித்துவமான அம்சங்கள் "இசுரு உதான" பரிசு வவுச்சர் மற்றும் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வி மதிப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன. பரிசு வவுச்சர்களை எந்த மக்கள் வங்கிக் கிளையிலும் கவுண்டரில் வாங்கலாம், ரூ.200, ரூ.500, ரூ.2,000, ரூ.5,000 மற்றும் ரூ.10,000 ஆகிய மதிப்புகளில் நீங்கள் இசுரு உதான கணக்கைத் திறக்கலாம். அல்லது வவுச்சரை ஏற்கனவே இருக்கும் இசுரு உதான கணக்கில் வரவு வைக்கலாம்.
உங்கள் பிள்ளை 6 வயதை அடையும் போது இசுரு உதான சேமிப்புக் கணக்கு தானாகவே சிசு உதான சேமிப்புக் கணக்காக மாற்றப்படும்.
கணக்கு அம்சங்கள்
இசுறு உதான கணக்கானது பெற்றோரினாலோ பாதுகாவலளாரினாலோ ஆரம்பிக்கக் கூடியதாக இருத்தல்
சாதாரண சேமிப்புக் கணக்குளை விட 1% கூடிய வட்டி
இசுறு உதான கணக்கின் சிறப்பம்சமான அன்பளிப்புக் கூப்பன்கள்
கணக்கு அம்சங்கள்
பரிசு வவுச்சர்கள் உட்பட குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வி மதிப்பு பரிசுகள்
விஷேட நன்மைகள்
கல்வி கற்றலுக்கும் மேம்பாட்டிற்குமான பெறுமதியான பரிசில்கள்
நாளாந்த மீதிகளின் மீது வட்டி கணிப்பீடு
கணக்கொன்றினை ஆரம்பிக்கும்போது முதலாவது வைப்புத்தொகையாக ரூபா.100/- இனையும் ஏற்கனவே முன்பள்ளி செல்லும் சிறாருக்கு முதலாவது வைப்புத்தொகையாக ரூபா.250/- இனை வங்கியே வைப்பு செய்தலும்
யெஸ் கணக்கு
YES கணக்கு, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இளம் பருவத்தினர் தாங்கள் கற்பனை செய்துள்ள வாழ்வை வாழ்வதற்காக தமது கனவுகளை நோக்கிப் பயணிக்க ஆரம்பிப்பதற்கு டிஜிட்டல் வசதியுடன் கூடிய வங்கிச்சேவையை பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஓர் இளைஞர் சேமிப்பு கணக்கு.
YES கணக்கின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்
• பின்வருவனவற்றிற்கான கடன் வசதி: உயர் கல்வி/ வியாபாரம்/ வீடமைப்பு/ வாகனம்/ மின்உபகரணம்/ கணனி மற்றும் நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களைக் கொள்வனவு செய்தல்.
• பீப்பிள்ஸ் லீசிங் கம்பனி ஊடாக குத்தகை வசதிகள்.
• தற்போதைய அட்டை கொள்கைகளுக்கு அமைவாக சலுகைக் கட்டணத்தில் கடனட்டை.
• மொபைல் வங்கிச்சேவை, குரல் வங்கிச்சேவை மற்றும் இணைய வங்கிச்சேவை வசதி.
• சிறுவர்களின் சிசு உதான சேமிப்புக் கணக்கானது, சிறுவர்கள் 18 வயதினை எட்டும்போது YES சேமிப்புக் கணக்காக சுயமாகவே மாற்றம் செய்யப்படும்.
YES கணக்கினை ஆரம்பிப்பது எவ்வாறு
நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு மக்கள் வங்கி கிளையிலும் உங்கள் பெயரில் ரூபா.2000/- குறைந்தபட்ச வைப்புத் தொகையுடன் கணக்கொன்றினை இலகுவாக ஆரம்பிக்க முடியும்;
கணக்கு அம்சங்கள்
கவர்ச்சிகரமான வட்டி விகிதம்
டிஜிட்டல் வங்கி சேவைகள்
தற்போதைய அட்டை கொள்கைகளுக்கு அமைவாக சலுகைக் கட்டணத்தில் கடனட்டை
கணக்கு அம்சங்கள்
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு
சிறப்பு நன்மைகள்
பின்வருவனவற்றிற்கான கடன் வசதி: உயர் கல்வி/ வியாபாரம்/ வீடமைப்பு/ வாகனம்/ மின்உபகரணம், கணனி மற்றும் நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களைக் கொள்வனவு செய்தல்.
மொபைல் வங்கிச்சேவை, குரல் வங்கிச்சேவை மற்றும் இணைய வங்கிச்சேவை வசதி.
வனிதா வாசனா
வனிதா வாசனா கணக்கு, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு தங்களின் எந்தவொரு நிதியியல் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சேமிப்புத் திட்டமாகும்.
வனிதா வாசனா கணக்கின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்.
ரூபா 500/- என்ற சொற்ப தொகையை வைப்புச் செய்து நீங்கள் வனிதா வாசனா கணக்கொன்றை ஆரம்பிக்க முடியும். வேறுபட்ட தேவைகள் மற்றும் நிலைமைகளுக்கு கடன் வசதிகள். உங்களுடைய வருமானம்/கணக்கு மீதியின் அடிப்படையில் கடனட்டை வசதி. பீப்பிள்ஸ் டிராவல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் மூலமான பிரயாணச் சீட்டு பதிவுகளுக்கு விசேட தள்ளுபடி. பிள்ளை ஒன்று பிறக்கும் சமயத்தில் விசேட அன்பளிப்பாக ரூபா 100/- வைப்புத் தொகையுடன் இசுறு உதான சேமிப்புக் கணக்கு. உப கணக்கான வனிதா வாசனா நிதித் திட்டமிடல் உயர் வட்டி வீதத்தை வழங்குகின்றது. மொபைல் வங்கிச்சேவை, குரல் வங்கிச்சேவை App மற்றும் இணைய வங்கிச்சேவை வசதி.
வனிதா வாசனா கணக்கினை ஆரம்பிப்பது எவ்வாறு:
நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு மக்கள் வங்கி கிளையிலும் உங்கள் பெயரில் கணக்கொன்றினை இலகுவாக ஆரம்பிக்க முடியும்.
கணக்கு அம்சங்கள்
கவர்ச்சிகரமான வட்டி வீதம்
கவர்ச்சிகரமான வட்டி விகிதம்
உங்கள் வருமானம்/கணக்கு நிலுவையைப் பொறுத்து கிரெடிட் கடடை்டை வசதி
கணக்கு அம்சங்கள்
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள்.
சிறப்பு நன்மைகள்
கடனட்டை வசதி.
பிள்ளை ஒன்று பிறக்கும் சமயத்தில் விசேட அன்பளிப்பாக வைப்புத் தொகையுடன் இசுறு உதான சேமிப்புக் கணக்கு.
உப கணக்கான வனிதா வாசனா நிதித் திட்டமிடல் உயர் வட்டி வீதத்தை வழங்குகின்றது.
மொபைல் வங்கிச்சேவை, குரல் வங்கிச்சேவை
பரிணத
புதிய கனவைக் கனவு காண நீங்கள் ஒருபோதும் வயதாகவில்லை என்று மக்கள் வங்கியில் நாங்கள் நம்புகிறோம். எனவே, நாங்கள் "பரிநாதா" என்ற மூத்த குடிமக்கள் கணக்கை உருவாக்கியுள்ளோம், அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு வாழ்க்கையை முழுமையாக வாழ எதிர்பார்க்கிறார்கள். 55 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கணக்கு தொடங்கலாம். சர்வதேச அளவில் விசா ஏடிஎம் நெட்வொர்க் மூலம் உங்கள் பணத்தை 24 மணிநேர அணுகலை வழங்கும் "விசா" இன்டர்நேஷனல் டெபிட் கார்டைப் பெறுவீர்கள். நீங்கள் சாதாரண சேமிப்பு விகிதத்தை விட 2% போனஸ் வட்டியையும் பெறுவீர்கள்.
நீங்கள் உள்ளூர் அரசாங்கத்திலோ அல்லது அரசாங்க சேவையிலோ ஓய்வூதியம் பெறுபவராக இருந்தால், நீங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்
கணக்கு அம்சங்கள்
சாதாரண சேமிப்புக் கணக்குகளை விடவும்
அதிகபட்சமாக ரூபா 3,000,000/- வரை கடன் வசதி
கணக்கு அம்சங்கள்
55 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும்
சிறப்பு நன்மைகள்
சர்வதேசரீதியாக வீசா ATM வலையமைப்பின் மூலமாக பணத்தை நீங்கள் 24 மணி நேரமும் பெற்றுக்கொள்ளும் வசதியை 'வீசா' சர்வதேச டெபிட் அட்டை உங்களுக்கு வழங்குகின்றது.
மொபைல் வங்கிச்சேவை, குரல் வங்கிச்சேவை app மற்றும் இணைய வங்கிச்சேவை வசதி.
அனைத்து கிளைகளிலும் சேவை முன்னுரிமை.
வெளிநாட்டு
நாணயக் கணக்கு
தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகள்- PFCA
தகுதி
விஷேட நன்மைகள்
வெளிநாட்டு பணம்
தகுதி
இலங்கை நாட்டினத்தவராகவுள்ள பராயமடையாதவர் உட்பட்ட தனியாளொருவர்.
இலங்கைக்கு வெளியே வதிகின்ற பராயமடையாதவர் உட்பட இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட தனியாளொருவர்
இலங்கையில் வதிகின்ற நாட்டினத்தவரல்லாத வதிவுள்ளவரொருவர்
ஒன்றில் இலங்கைக்குத் தற்காலிகமாக வருகைதருகின்ற அல்லது இலங்கைக்கு வருகைதருவதற்கு உட்கருதுகின்ற நாட்டினத்தவரல்லாதவரொருவர்
அந்த அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியிடம் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரியிடம் தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கொன்றைப்(PFCA) பேணிவந்த ஓர் இறந்துள்ள ஆளின் மரணச்சொத்தினது நிருவாகம் பூர்த்திசெய்யப்படும்வரை அத்தகைய இறந்துள்ள அந்த ஆளின் மரணச்சொத்தினது நிருவாகி அல்லது நிறைவேற்றுனர்.
விஷேட நன்மைகள்
பற்று (டெபிட்) அட்டை இலவசமாக விநியோகிக்கப்படுகின்றது
கணக்கில் உள்ள தொகைக்கு எதிராக கடனட்டை வசதிகள் கிடைக்கப்பெறுகின்றன.
மாதாந்த வட்டி.
நிலையான
வைப்பு
சிறுவர்கள்
18 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கு, கவர்ச்சியான வட்டி வீதங்களை பெற்றுக்கொள்ள, கூட்டு வட்டியுடன் வளர்ச்சியடையும் மீதியைக் கொண்ட பராயமடையாதோருக்கான வைப்புக் கணக்கு ஓர் சிறந்த தேர்வாகும்.
அம்சங்கள்
பெற்றோரினாலோ அல்லது பாதுகாவலரினாலோ பராயமடையாதோர் கணக்கை ஆரம்பிக்க முடியும்.
சாதாரண நிலையான வைப்பு வீதங்களிலும் பார்க்க 0.5% மேலதிக வட்டி வீதத்தை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
தகுதி
18 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கு
விஷேட நன்மைகள்
சாதாரண சேமிப்பு வைப்பு வீதங்களிலும் அதிக வட்டி வீதம்.
சாதாரண நிலையான வைப்பு
18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும், குறிப்பிட்ட காலப்பகுதியில் கவர்ச்சியான, அதிசிறந்த பிரதிலாபங்களைத் தருகின்ற ஒரு நிலையான கால வைப்பில் உங்களது பணத்தினை நீங்கள் வைப்புச் செய்ய விரும்பினால் சாதாரண நிலையான வைப்புக்களின் கீழான கால வைப்புக்களே அதற்கு உகந்த தீர்வு.
அம்சங்கள்
வைப்பிலுள்ள பணம் மற்றும் மிகுதியின் மீதான வட்டிகளுக்கு அதிக வட்டி வீதம்
தகுதி
18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இலங்கைப் பிரஜை
விஷேட நன்மைகள்
மீளப்புதுப்பிக்கப்படுகின்ற நேரத்தில் மீளப்புதுப்பிக்கப்படும் அறிவித்தல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
வாடிக்கையாளரின் பெறுமானத்தைக் கருத்தில் கொள்ளும் போது நிலையான வைப்புத் தொகை மீதியை வங்கி கருத்தில் கொள்ளும்.
கணக்கிலுள்ள மீதிக்கு எதிராக பணக் கடனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சிரேஷ்ட பிரஜைகள்
55 வயதிற்கு மேற்பட்ட, சிரேஷ்ட பிரஜைகளுக்கான எமது கால வைப்புக்கள் ஓய்வு வயதில் ஈடுஇணையற்ற வெகுமதிகளை அளிக்கின்றன. வாழ்க்கையின் இக்காலகட்டத்தில் அதிகபட்ச ஆனந்தத்திற்கு இது உங்களை இட்டுச்செல்வதுடன், தேவைக்கேற்றவாறு, நீங்கள் உங்களது சொந்த வியாபார முயற்சியை ஆரம்பிப்பதற்கும் உதவுகின்றது. நீங்கள் கடின உழைப்பின் மூலமாக சம்பாதித்துள்ள பணம் அதை விடவும் சிறப்பாக உங்களுக்கு பயனளிப்பதற்கும் நீங்கள் விரும்பியவற்றை எப்போதும் முன்னெடுப்பதற்கும் மக்கள் வங்கிக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்குங்கள்.
அம்சங்கள்
12 அல்லது 24 மாதங்களுக்கு குறைந்தபட்ச வைப்புத்தொகையாக ரூபா 100,000/- இனை வைப்புச் செய்ய முடியும்.
உங்களுடைய விருப்பத்திற்கேற்ப வட்டியை மாதாந்தம் அல்லது முதிர்வின் போது பெற்றுக்கொள்ள முடியும்.
தகுதி
55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
விஷேட நன்மைகள்
இந்த வட்டி விகிதங்கள் உள்ளூர் நாணய வைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்
மூத்த குடிமக்களுக்கான எங்கள் டெர்ம் டெபாசிட்கள் ஓய்வு பெறும் வயதில் இணையற்ற வெகுமதிகளை வழங்குகின்றன. இது வாழ்க்கையின் இந்த நேரத்தை அதிகபட்சமாக அனுபவிக்க உங்களுக்கு உதவுகிறது மற்றும் தேவைப்பட்டால், உங்கள் சொந்த முயற்சியைத் தொடங்க உங்களுக்கு உதவும். நீங்கள் கடினமாக சம்பாதித்த சேமிப்புகள் உங்களுக்காக இன்னும் கடினமாக உழைக்கட்டும். இதன் மூலம் நீங்கள் எப்போதும் செய்ய விரும்புவதைச் செய்யலாம்.
இலங்கை வங்கி (Bank of Ceylon)
இலங்கை வங்கி (Bank of Ceylon) இலங்கையின் மிகப் பெரிய அரசுடமை வங்கி. இதன் தலைமைக் காரியாலயம் இலங்கையின் வர்த்தக மற்றும் அரசியல் தலைநகரமான கொழும்பில் அமைந்துள்ளது. இது 303 உள்நாட்டுக் கிளைகளையும் 3 வெளிநாட்டுக் கிளைகளையும் தன்னகத்தே கொண்டு தனது சேவையினை விரிவாக்கி உள்ளது. இவ்வங்கியானது பல்வேறுபட்ட சில்லறை, மொத்த, சர்வதேச, முதலீட்டு வங்கியியல், பல்வேறுபட்ட சேவைகள், கடனட்டை வசதி, வரவட்டை வசதி, நகை அடகு சேவை போன்ற பல்வேறு சேவைகளை வழங்குகிறது.
இலங்கை வங்கியால் பேணப்படும் வைப்புக்களின் வகைகள்
நடைமுறைக்கணக்கு (Current Deposits)
சேமிப்பு கணக்கு (Savings Deposits)
நிலையான வைப்பு(Fixed Deposits)
ஏனைய தொழிற்பாடுகள்
நிலையான வைப்புகளை பேணல்.
நகை அடகுபிடித்தல்.
நாணயமாற்றம் செய்தல்.
சர்வதேச கொடுக்கல் வாங்கல்களைப் பேணல்.
ATM அட்டை, கடனட்டை(Credit card) வழங்கல்.
நன்மைகள்:
1. பாதுகாப்பான முதலீடு:
- BOC இலங்கையின் முன்னணி அரசாங்க வங்கியாகும், இது வைப்புகளுக்கு உயர் பாதுகாப்பு அளிக்கிறது.
2. பல்வேறு கால அளவுகள்:
- 1 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை வைப்புகள் கிடைக்கின்றன.
3. வட்டி வீதங்கள்:
- வட்டி வீதங்கள் கால அளவுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. உதாரணமாக:
- 1 மாதம்: 6.00%
- 3 மாதம்: 6.50%
- 6 மாதம்: 6.75%
- 1 ஆண்டு: 7.00%
- 5 ஆண்டு: 8.00%[1]
4. முதிர்ந்தோர் வைப்புத் திட்டம்:
- 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் வட்டி வீதங்கள் வழங்கப்படுகின்றன.
5. குறுகிய கால வைப்புகள்:
- 100, 200, மற்றும் 400 நாட்கள் வைப்புகளுக்கு 7.50% வரை வருடாந்த வட்டி வழங்கப்படுகிறது
6. வாடிக்கையாளர் சேவைகள்:
- SMS அறிவிப்புகள், மின்னணு வங்கி சேவைகள், மற்றும் E-Statements போன்ற வசதிகள் கிடைக்கின்றன.
7. கடன் வசதி:
- வைப்பின் மீது 75% வரை கடன் பெற முடியும்.[3]
சவால்கள்
1. முன்கூட்டிய எடுத்தல் கட்டுப்பாடுகள்:
- நிலைத்த வைப்புகளை காலத்திற்கு முன் எடுத்தால், வட்டி வீதத்தில் குறைவு ஏற்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
2. மதிப்பிழைப்பு அபாயம்:
- வட்டி வீதம் விலை உயர்வை (inflation) விட குறைவாக இருந்தால், பணத்தின் உண்மையான மதிப்பு குறையலாம்.
3. நிபந்தனைகள் மற்றும் வரம்புகள்:
- சில திட்டங்களில், சிறப்பு நிபந்தனைகள் மற்றும் குறைந்தபட்ச வைப்பு தொகைகள் உள்ளன, இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது.
No comments