இலங்கையில் காணப்படும் முதலீட்டு முறைகளும் அதன் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய முறைகளும்....!
இலங்கையில் காணப்படும் முதலீட்டு முறைகளும் அதன் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய முறைகளும்...........!
இலங்கையில் காணப்படும் முதலீட்டு முறைகளும் அதன் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய முறைகளும்
இலங்கையில் காணப்படும் முதலீட்டு முறைகளும் அதன் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய முறைகளும் முதலீட்டு முறைகளில் சிறந்த தெரிவுகளை இணைத்தல்.
உள்ளடக்கம்
முதலீட்டு அறிமுகம்
முதலீட்டின் நோக்கம்
முதலீட்டு வகைகள்
முதலீட்டு இலக்குகள்
அபாயமும் வருமானமும்
இலங்கையின் பொருளாதாரச் சூழல் மற்றும் முதலீட்டின் மீதான தாக்கம்
முதலீட்டு முறைகள்
முதலீட்டு வழிமுறைகளை தெரிவு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்கள்
முதலீட்டு அறிமுகம்
முதலீடு என்பது ஒரு தனிநபரின் அல்லது ஒரு நிறுவனத்தின் நிதி வளங்களை எதிர்காலத்தில் வருமானம் அல்லது மூலதன ஆதாயம் பெறும் நோக்குடன் ஒரு சொத்தில் அல்லது ஒரு வணிகத்தில் பயன்படுத்துவதாகும். நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு, முதலீடு இன்றியமையாத ஒரு கருவியாகும். இது தனிப்பட்ட நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதுடன், தேசிய பொருளாதார அபிவிருத்திக்கும் அத்தியாவசியமானது.
குறிப்பாக இலங்கை போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரத்தில், சரியான முதலீட்டுத் தெரிவுகளை மேற்கொள்வது தனிநபர்களுக்கு செல்வத்தை உருவாக்குவதற்கும், பணவீக்கத்தின் தாக்கத்தில் இருந்து தங்கள் செல்வத்தைப் பாதுகாப்பதற்கும், மேலும் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கும் மிக முக்கியமானது.
அண்மைய தசாப்தங்களில் நாடு பல பொருளாதார சவால்களையும், மாற்றங்களையும் கடந்து வந்துள்ளது. உள்நாட்டுப் போர், பூகோள பொருளாதார அழுத்தங்கள், மற்றும் அண்மைய பொருளாதார நெருக்கடி ஆகியவை முதலீட்டாளர்களுக்கு ஒரு சவாலான ஆனால் அதே நேரத்தில் சில வாய்ப்புகளை வழங்கியுள்ளன.
மத்திய வங்கி, நிதி அமைச்சு, மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை (டீழுஐ) போன்ற ஒழுங்குமுறை அமைப்புகள் முதலீட்டுச் சூழலை நிர்வகிக்கின்றன. வட்டி விகிதங்கள், பணவீக்கம், அரசியல் ஸ்திரத்தன்மை, மற்றும் உலகளாவிய பொருளாதாரப் போக்குகள் ஆகியவை இலங்கையின் முதலீட்டு நிலப்பரப்பை வடிவமைக்கும் முக்கிய காரணிகளாகும்.
இலங்கையில் காணப்படும் பல்வேறு முதலீட்டு முறைகள், அவற்றின் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய வழிகள், ஒவ்வொரு முதலீட்டு முறையின் நன்மைகள் மற்றும் அபாயங்கள், மற்றும் தனிநபர்கள் தங்கள் நிதி இலக்குகள், இடர் சகிப்புத்தன்மை, மற்றும் முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து சிறந்த முதலீட்டுத் தெரிவுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதை ஆராய்கிறது.
இன்றைய வேகமாக மாற்றம் அடையும் பொருளாதார சூழலில், முதலீடு என்பது தனிநபர் மட்டுமல்லாமல் நாடின் வளர்ச்சிக்கும் முக்கிய கூறாகத் திகழ்கிறது. இலங்கையில் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன, அவற்றின் வழியாக மக்கள் வருமானம் ஈட்டுவதோடு, நிதி பாதுகாப்பையும் பெறுகிறார்கள்.
இலங்கையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தங்களுக்கு ஏற்றவாறு, முதலீட்டின் நோக்கம், கால எல்லை, மற்றும் ஆபத்து சகிப்புத் தன்மையை மதிப்பீடு செய்து முதலீடு செய்தால், நிதி சுதந்திரம் அடையலாம். தனிநபருக்கேற்ப பங்கு சந்தை, சொத்து முதலீடு, ஆரவரயட குரனெ, வணிக முதலீடு ஆகியவை சிறந்த தெரிவுகள் ஆகும்.
முதலீடு
முதலீடு என்பது நிகழ்கால நுகர்வைப் பாதுகாத்து, எதிர்காலத்தில் அதிக வருமானத்தைப் பெறும் நோக்குடன் நிதியை ஒரு சொத்தில் அல்லது வணிகத்தில் ஈடுபடுத்துவதாகும். இது வெறுமனே பணத்தைச் சேமிப்பதற்கு அப்பாற்பட்டது. சேமிப்பு என்பது பணத்தைப் பாதுகாப்பதுடன் தொடர்புடையது, ஆனால் முதலீடு என்பது பணத்தை வளர்ப்பதுடன் தொடர்புடையது.
முதலீட்டின் நோக்கம்
முதலீட்டின் முக்கிய நோக்கம் செல்வத்தைப் பெருக்குவது, பணவீக்கத்தின் அரிப்பிலிருந்து பாதுகாப்பது, மற்றும் எதிர்கால நிதி இலக்குகளை அடைவதாகும்.
முதலீட்டின் வகைகள்
முதலீடுகளைப் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்
1. நிதிச் சொத்து முதலீடுகள்
இவை நிதிப் பத்திரங்களில் முதலீடு செய்வதைக் குறிக்கும்.
உதாரணமாக :-
பங்குச் சந்தை,
கடன் பத்திரங்கள் (அரசாங்கக் கடன் பத்திரங்கள், நிறுவனக்கடன்பத்திரங்கள்)
பரஸ்பர நிதிகள், வைப்பு நிதிகள்.
2. பௌதீகச் சொத்து முதலீடுகள்
இவை உண்மையான, தொட்டுணரக்கூடிய சொத்துக்களில் முதலீடு செய்வதைக் குறிக்கும்.
உதாரணமாக :-
ரியல் எஸ்டேட் (நிலம், கட்டிடங்கள்)
தங்கம்
பொருட்கள் (உழஅஅழனவைநைள)
கலைப் பொருட்கள்
முதலீட்டு இலக்குகள்
ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் தனிப்பட்ட நிதி இலக்குகள் இருக்கும். பொதுவான சில இலக்குகள்.
1. செல்வத்தைப் பெருக்குதல்
நீண்ட காலத்திற்குச் செல்வத்தை வளர்ப்பது.
2. வருமான உருவாக்கம்
வழக்கமான வருமானத்தைப் பெறுதல் (உதாரணமாக, வாடகை, ஈவுத்தொகை, வட்டி).
3. பணவீக்கப் பாதுகாப்பு
வாங்கும் சக்தியைப் பணவீக்கத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்தல்.
4. ஓய்வூதியத் திட்டமிடல்
ஓய்வூதியக் காலத்திற்கான நிதியை உருவாக்குதல்.
5. குறிப்பிட்ட நிதி இலக்குகள்
வீடு வாங்குதல், பிள்ளைகளின் கல்விக்கு நிதியளித்தல் போன்ற குறிப்பிட்ட இலக்குகள்.
அபாயமும் வருமானமும்
முதலீட்டில், அபாயத்திற்கும் வருமானத்திற்கும் இடையே ஒரு நேரடியான தொடர்பு உண்டு. அதிக வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீடுகள் பொதுவாக அதிக அபாயங்களைக் கொண்டிருக்கும். இதை "அபாய-வருமான சமரசம்" (சுளைம-சுநவரசn வுசயனந-ழகக) என்று கூறுவார்கள். முதலீட்டாளர்கள் தங்கள் அபாய சகிப்புத்தன்மைக்கு ஏற்ப முதலீடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அபாயம்
முதலீடு செய்த பணத்தை இழக்கும் அல்லது எதிர்பார்த்த வருமானத்தைப் பெறாத சாத்தியக்கூறு.
வருமானம்
முதலீடு செய்ததன் மூலம் கிடைத்த இலாபம் அல்லது ஆதாயம்.
இலங்கையின் பொருளாதாரச் சூழல் மற்றும் முதலீட்டின் மீதான தாக்கம்
இலங்கையின் முதலீட்டுச் சூழல் பல உள்நாட்டு மற்றும் உலகளாவிய காரணிகளால் பாதிக்கப்படுகிறது. அவையாவன
1.பணவீக்கம்
இலங்கையில் பணவீக்கம் வரலாற்று ரீதியாக ஒரு சவாலாக இருந்துள்ளது. பணவீக்கம் முதலீடுகளின் உண்மையான வருமானத்தைக் குறைக்கும். முதலீட்டாளர்கள் பணவீக்கத்தை விட அதிக வருமானம் தரும் முதலீடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2.வட்டி விகிதங்கள்
மத்திய வங்கியால் நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதங்கள் சேமிப்பு, வைப்பு நிதி, மற்றும் கடன் பத்திரங்களின் வருமானத்தை நேரடியாகப் பாதிக்கின்றன. வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் போது, நிலையான வருமான முதலீடுகள் கவர்ச்சிகரமானதாக மாறும்.
3.அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை
அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு மிக முக்கியம். ஸ்திரமற்ற சூழல் முதலீடுகளைக் குறைக்க வழிவகுக்கும்.
4.அந்நியச் செலாவணி விகிதங்கள்
ரூபாயின் பெறுமதி மற்ற உலக நாணயங்களுக்கு எதிராக மாறுபடுவது, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், ஏற்றுமதி சார்ந்த வணிகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
முதலீட்டு முறைகள்
1. 🏦 வங்கித் திட்டங்கள் ஃ வைப்புக்கள்
- சேமிப்பு கணக்குகள், நிலையான வைப்புகள்
- குறைந்த ஆபத்து, நிச்சய வட்டி வருமானம்
2. 📈 பங்கு சந்தை
- பங்குகள் வாங்குதல்
- உயர்ந்த வருமான வாய்ப்பு, ஆனால் ஆபத்தும் அதிகம்
3. 🏠 சொத்து முதலீடு
- நிலம், வீடு, காணிகள்
- நிலத்தின் மதிப்பு உயர்வால் பன்மடங்கு வருமானம்
4. 💼 வணிக முதலீடுகள்
- சொந்தமாக வணிகம் தொடங்குதல்
- உற்பத்தி, விற்பனை, சேவைகள் மூலமாக வருமானம்
5. 📜 அரசு பத்திரங்கள்
- குறைந்த ஆபத்துடன் இடைக்கால வருமானம்
- உயர் பாதுகாப்பு, உத்தியோகபூர்வ நிதி அமைப்பு
6. 🏢 ஆரவரயட குரனௌ ஃ ருnவை வுசரளவள
- நிபுணர்கள் நிர்வகிக்கும் முதலீட்டு நிதிகள்
- சமநிலை வட்டி மற்றும் லாபம்
7. 🪙 ஊசலிவழஉரசசநnஉல ஃ குழசநஒ
- மிகச் சமீபத்திய முறைகள்
- உயர்ந்த வருமான வாய்ப்பு, ஆனால் அதிக ஆபத்து
8.🌾 விவசாய முதலீடு
- கால்நடை, பண்ணை முதலீடுகள்
- நீண்ட காலத்தில் வளர்ச்சி வாய்ப்பு
9. 🏦 அலகு நம்பிக்கை நிதிகள்
- பல முதலீட்டாளர்களின் பணத்தை ஒன்றாகச் சேர்த்து நிபுணர்கள் முதலீடு செய்கின்றனர்.
- பங்குகள், பத்திரங்கள், வங்கி வைப்புகள் ஆகியவற்றில் சேர்க்கப்படும்.
- ஆபத்து மற்றும் வருமானம் சமநிலை.
10. அந்நிய செலாவணி முதலீடுகள்
- இலங்கையில் ருளு னுழடடயச அல்லது நுரசழ போன்ற நாணயங்களில் வைப்புத் திட்டங்கள்.
- மாற்று நாணய மதிப்பை பொறுத்து உயரும்ஃகுறைவான வருமானம்.
11.🎓 கல்வி முதலீடு
- தங்களது அல்லது பிள்ளைகளின் கல்விக்காக முதலீடு செய்தல்.
- நேரடி வருமானம் இல்லையென்றாலும், நீண்டகால பயனளிக்கும் முதலீடு.
12. திட்டமிட்ட ஒய்வுத் திட்டங்கள்
- இலங்கை அரசின் நுPகுஃநுவுகு (நுஅpடழலநந Pசழஎனைநவெ குரனெஃவுசரளவ குரனெ) போன்ற சேமிப்பு மற்றும் ஒய்வு திட்டங்களில் முதலீடு.
- ஓய்வுக்குப் பிந்தைய பாதுகாப்பு.
முதலீட்டு வழிமுறைகளை தெரிவு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்கள்
1. ஆபத்து சகிப்புத் தன்மை
முதலீட்டாளரின் மனநிலை மற்றும் நிதி நிலையைப் பொறுத்து, அதிக அல்லது குறைந்த ஆபத்து உள்ள முதலீடுகளை தேர்வு செய்ய வேண்டும்.
2. முதலீட்டுக்காலம்
குறுகிய, நடுத்தர அல்லது நீண்ட கால தேவைகளுக்கேற்ப முதலீடு தேர்வு செய்ய வேண்டும்.
- குறுகிய காலம் – வங்கி வைப்புகள்
- நீண்ட காலம் – பங்கு சந்தை, சொத்துகள்
3. வருமான தேவைகள்
மாதாந்திர வருமானம் தேவைப்பட்டால், வட்டி வருமானம் தரும் முதலீடுகள் சிறந்தவை (எ.கா. அரசு பத்திரங்கள்).
4. முதலீட்டு இலக்குகள்
கல்வி, வீடு, ஓய்வு, திருமணம் போன்ற நோக்கங்களை அடிப்படையாக வைத்து முதலீட்டு வகையை தேர்வு செய்ய வேண்டும்.
5. நிதி நிலை
முதலீட்டாளரின் மொத்த வருமானம், செலவுகள் மற்றும் சேமிப்பு நிலையைப் பார்க்க வேண்டும்.
6. பணவீக்கம் மற்றும் சந்தை நிலை
முதலீடு மேற்கொள்ளும் நேரத்தில் நாட்டின் பணவீக்கம், வட்டி விகிதம் மற்றும் சந்தை நிலவரங்களை கவனிக்க வேண்டும்.
7. பணத்தை மீட்டெடுக்கும் திறன்
அவசர தேவைக்கு பணம் எளிதாக மீட்கக்கூடிய முதலீடுகள் முக்கியம் (வங்கி வைப்புகள் , நிலம்).
வங்கித்திட்டங்கள் வைப்புக்கள்
வங்கி வைப்புகள் அல்லது வங்கி திட்டங்கள் என்றால், நபர் ஒருவர் தனது பணத்தை வங்கியில் பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான திட்டங்கள் ஆகும். இதன்மூலம் வட்டி வருமானம் பெறலாம்.வங்கியில் பணத்தை குறிப்பிட்ட காலத்திற்கு வைப்பதன் மூலம், வட்டியுடன் மீண்டும் பெற்றுக்கொள்ளும் முறையே வங்கி வைப்பு திட்டம் ஆகும்.
மூலதன பாதுகாப்பு மற்றும் நிச்சய வருவாய் தரும் முதலீட்டு முறையாகும்.
:- சேமிப்பு கணக்குகள் (ளுயஎiபௌ யுஉஉழரவெள)
நிலையான வைப்புகள் (குiஒநன னுநிழளவைள)
1. சேமிப்பு கணக்கு
- பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம்
- குறைந்த வட்டி வருமானம்
2. நிலையான வைப்பு
- ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணம் வைக்கப்படும் (6 மாதம், 1 ஆண்டு)
- அதிக வட்டி வருமானம், ஆனால் நேருக்கு நேரே எடுக்க முடியாது
வங்கி வைப்புகளின் நன்மைகள்
பாதுகாப்பான முதலீடு
நிலையான வட்டி வருமானம்
பணத்தை சமயோசிதமாக பயன்படுத்த உதவும்
அரசு காப்புறுதி (குனு-க்கு குறிப்பிட்ட வரம்பு வரை பாதுகாப்பு)
வங்கி வைப்புகளின் தீமைகள்
1. குறைந்த வட்டி வருமானம்
வங்கி வைப்புகள் வழங்கும் வட்டி விகிதம் மிகக் குறைவாக இருக்கலாம்.
பணவீக்கம் (ஐகெடயவழைn) அதிகமாக இருந்தால், உண்மையான வருமானம் குறையும்.
2. வருமான வளர்ச்சி வாய்ப்பு இல்லை
பங்கு சந்தை போன்ற முதலீடுகளைக் காட்டிலும் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு குறைவு.
3. வரி செலுத்த வேண்டிய அவசியம்
குனு-யில் கிடைக்கும் வட்டி வருமானம் அதிகமாக இருந்தால், அதற்கு வரி செலுத்த வேண்டியிருக்கலாம்.
4. பணவீக்கத்தால் மதிப்பு குறைபாடு
பணவீக்கம் விகிதம் வங்கித் திட்ட வட்டியைவிட அதிகமாக இருந்தால், உங்கள் பணத்தின் உண்மையான மதிப்பு குறையும்.
பங்கு சந்தை
பங்கு சந்தை முதலீடு என்பது, ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலம் அந்த நிறுவனத்தில் நிதி முதலீடு செய்வதைக் குறிக்கும். இந்த பங்குகள், பங்கு பரிவர்த்தனை மையத்தில் வாங்கப்படும்.
இலங்கையில், இது கொழும்பு பங்கு பரிவர்த்தனை மையம் மூலம் நடைபெறுகிறது.
முதலீட்டு செயல்முறை
பங்கு வாங்கும் நபர், ஒரு பங்குச் சந்தை மத்தியிலான முகவரிடம் கணக்கு திறக்க வேண்டும்.பின்னர், விருப்பமான நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம் அல்லது விற்கலாம். பங்குகளின் விலை சந்தையின் கோரிக்கைக்கும் வழங்கலுக்கும் ஏற்ப மாறும்.
இயல்பான முதலீட்டாளர்கள்
- தனிநபர்கள்
- நிறுவனம் அல்லது நிறுவனர்
- முதலீட்டு நிதிகள் (ஆரவரயட குரனௌ)
பங்கு சந்தையின் ஆபத்துகள்
- சந்தை மாறுபாடுகள் (அயசமநவ கடரஉவரயவழைளெ)
- நிறுவன நஷ்டம்
- பொருளாதார வீழ்ச்சி
- அரசியல் நிலவரங்கள்
📌 உதாரணம் :-
நீங்கள் சுள.1000-க்கு ஒரு நிறுவன பங்கைக் கொள்முதல் செய்தீர்கள்.
6 மாதங்களில் அதன் விலை சுள.1500 ஆக உயர்ந்தால்,
நீங்கள் சுள.500 இலாபம் (உயிவையட பயin) பெறலாம்.
மேலும், ஆண்டு முடிவில் சுள.100 என இலாப விகிதமும் (னiஎனைநனெ) கிடைக்கலாம்.
நன்மைகள்
- குறுகிய காலத்தில் அதிக இலாபம் ஈட்ட வாய்ப்பு கிடைத்தல்.
- நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கு.
- பங்குகளின் உரிமையாளர் ஆகும் வாய்ப்பு கிடைத்தல்.
சவால்கள்
- சந்தை குறித்து அறிவு இல்லாமல் முதலீடு செய்தால் நஷ்டம் ஏற்படும்.
- தினசரி மாற்றங்களை கவனிக்க வேண்டியது.
சொத்து முதலீடு
சொத்து முதலீடு (சுநயட நுளவயவந ஐnஎநளவஅநவெ) என்பது நிலம், வீடு, கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற நிலையான சொத்துகளில் பணம் முதலீடு செய்வது ஆகும். இது நீண்ட கால வருமானம், மதிப்பு உயர்வு, மற்றும் பாதுகாப்பான முதலீடு என்பவற்றுக்காக தேர்வாகும்.
இலங்கையில் காணப்படும் முதலீட்டு முறைகளும் அதன் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய முறைகளும்...........!
No comments