வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய நடைமுறை..............!
வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய நடைமுறை..............!
வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய நடைமுறை..............!
வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய நடைமுறை..
பயனர்கள் தங்கள் தொலைபேசி சேமிப்பிடத்தை மிகவும் திறமையாக நிர்வகிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் (WhatsApp) தயாராகி வருகிறது.
உலகலாவிய ரீதியில், ஊடகப் பகிர்வு அதிகரித்து வரும் நிலையில், குழு அரட்டைகளில் உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தானாக பதிவிறக்கம் செய்வதால் பல பயனர்கள் வரையறுக்கப்பட்ட இடத்துடன் சிரமப்படுகிறார்கள்.
இதைச் சரி செய்வதற்காக, வாட்ஸ்அப் ஒரு 'பதிவிறக்கத் தரம்' அம்சத்தை உருவாக்கி வருகிறது, இது பயனர்கள் தரவு கோப்புகளைப் பதிவிறக்குவதற்கு முன்பு அவற்றின் தெளிவுத்திறனைத் தெரிவுசெய்ய அனுமதிக்கும்.
இந்த அம்சம், பயனர்களுக்கு HD தரம் மற்றும் SD தரத்திற்கு இடையேயான தெரிவை வழங்குகிறது.
அந்தவகையில், இந்த அம்சத்தை அமைப்புகள் > சேமிப்பு மற்றும் தரவு > தானியங்கி-பதிவிறக்கத் தரம் வழியாக அணுகலாம், அதில் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான தரவு தரத்தைத் தேர்ந்தெடுக்க முடியும்.
குறிப்பாக தினமும் அதிக அளவிலான தரவுகளை பெறுபவர்களுக்கு, இந்த நடவடிக்கை சேமிப்பக பயன்பாட்டின் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அண்மைய வாட்ஸ்அப் புதுப்பிப்பைப் பதிவிறக்கிய பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே இந்த புதிய அம்சம் தற்போது அணுகக்கூடியதாக உள்ளது என்று வாட்ஸ்அப்பீட்டா தரவுத்தளம் (WABetaInfo) தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய நடைமுறை..............!
No comments