அரச சேவையில் 30,000 பேரை இணைப்பதற்கு நடவடிக்கை.... - !

 அரச சேவையில் 30,000 பேரை இணைப்பதற்கு நடவடிக்கை.... - !

அரச சேவையில் 30,000 பேரை இணைப்பதற்கு நடவடிக்கை.... - !

அரச சேவையில் 30,000 பேரை இணைப்பதற்கு நடவடிக்கை.... - !

அரச சேவையில் 30,000 பேரை இணைப்பதற்கு நடவடிக்கை.

இலங்கையில் 05 வருடங்களுக்கு பிறகு அரச சேவைக்குப் புதிதாக 30,000 பேரை இணைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

ஹம்பந்தோட்டை (Hambantota) மாவட்ட விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 11.07.2025  கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.

வீழ்ச்சியடைந்துள்ள அரச சேவையை வலுப்படுத்த அரசாங்கம் திட்டங்களை தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக் காட்டினார்.

அரச நிறுவனங்களில் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளால் இலங்கையின் அரச சேவை மிகவும் பலவீனமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பிரதேச செயலாளர்கள் உட்பட ஒவ்வொரு துறையிலும் பணியாற்றுபவர்களின் வசதிக்காக தேவையான வாகனங்களை வழங்குவதற்கான நிதியை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அடுத்த 05 ஆண்டுகளுக்குள் நாட்டில் டிஜிட்டல் மாற்றம் ஏற்படுவது அரசாங்கத்தின் அடிப்படைத் திட்டம் என்றும் டிஜிட்டல் அடையாள அட்டை அதில் ஒரு புதிய பாய்ச்சல் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரச சேவையில் 30,000 பேரை இணைப்பதற்கு நடவடிக்கை.... - !

No comments

Theme images by fpm. Powered by Blogger.