சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!




சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை




சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை



நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை - வெளியான அறிவிப்பு


கண்டி (Kandy) எசல பெரஹராவை முன்னிட்டு கண்டி பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கண்டி வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.



இதன்படி, எதிர்வரும் 2025 ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 04 ஆம் திகதி வரை இரண்டாம் தவணை விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படும் என்று கண்டி வலயக் கல்வி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.


மேலும், கண்டியிலுள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறைகள் ஆகஸ்ட் 08 முதல் ஆகஸ்ட் 17ஆம் திகதி வரை வழங்கப்படுவதோடு முஸ்லிம் பாடசாலைகள் ஆகஸ்ட் 20 தொடக்கம் ஆகஸ்ட் 24 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 


இதேவேளை, வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 


இதற்கமைய, ஜூலை 30 ஆம் திகதி தொடக்கம் 10 நாட்களுக்கு கும்புல் பெரஹெர மற்றும் ரந்தோலி பெரஹெர வீதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாகவும் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.


 மேலும், வீதி ஊர்வலத்திற்கு போதுமான யானைகள் இல்லாதது ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை


No comments

Theme images by fpm. Powered by Blogger.