புதிய கல்வி மறுசீரமைப்பு - தவணைப் பரீட்சை நீக்கம்.....!
புதிய கல்வி மறுசீரமைப்பு - தவணைப் பரீட்சை நீக்கம்.....!
புதிய கல்வி மறுசீரமைப்பு - தவணைப் பரீட்சை நீக்கம்.....!
புதிய கல்வி மறுசீரமைப்பு - தவணைப் பரீட்சை நீக்கம்.....!
புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் தவணைப் பரீட்சை முறையை இரத்து செய்யவும் காலை 7.30 மணி முதல் 2.00 மணிவரை பாடசாலை கற்றல் நடவடிக்கை இடம்பெறும் காலப்பகுதியில் மாணவர்களுக்கு இரு ஓய்வு நேரங்களைப் பெற்றுக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
அதன்போது, தவணைப் பரீட்சையை படிமுறையாக நீக்கி மொடியுலர் (Moduler) முறையின் கீழ் (பாட உள்ளடக்கத்தை சிறிய அலகுகளாக பிரித்தல்) மாணவர்களின் வெற்றிகரமான கல்வி நிலையை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தவணைப் பரீட்சை முறையை நீக்குமாறு கல்வித் துறையைச் சேர்ந்த விசேட நிபுணர்களினால் முன்வைக்கப்பட்ட நிலைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.
பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும் நேரங்களில் பெற்றுக்கொடுக்கப்படும் ஓய்வு நேரம் போதாது என்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய காலை 10.10 மணிமுதல் 10.30 மணிவரையும் பகல் 12.10 மணி முதல் 12.20 மணிவரை இரு ஓய்வு நேரங்களைப் பெற்றுக்கொடுக்குமாறும் பிரதி பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசோக த சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து 50 நிமிடங்கள் வரை அதிகரிக்கும் பாட நேரத்தை மாணவர்களால் பொறுத்துக்கொள்வதில் அசெளகரியம் ஏற்படும் என்பதால் இவ்வாறு இரு ஓய்வு நேரங்களைப் பெற்றுக்கொடுக்கவுள்ளதாக பிரதி பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாட நேர அட்டவணை காலை 7.40 – 8.30, 8.30 9.20, 9.20 – 10.10, 10.30 – 11.20, 11.20 – 12.10 பகல் 12.20 – 1.10, 1.10 – 2.00 மணி என்ற அடிப்படையில் திருத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலாநிதி அசோக த சில்வா, புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் ஆரம்பக் கல்விக்கு அறிவியல் தோற்றம், தாய் மொழி, ஆங்கில மொழி, இரண்டாம் மொழி, கணிதம், சமயம், மதிப்புக் கல்வி, சுற்றுச் சூழல் செயற்பாடுகள், சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய கல்வி மற்றும் ஒரு அழகியல் பாடமும் உள்ளடங்குமென குறிப்பிட்டுள்ளார்.
06 - 09 ஆம் தரம் மற்றும் 10, 11 ஆம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு 14 பாடங்களை கற்கக்கூடியதாக இருக்குமென தெரிவித்துள்ள பிரதி பணிப்பாளர் நாயகம், 06 – 09ஆம் தரங்களில் பாடப்புத்தகங்களுக்கு பதிலாக அந்தந்தப் பாடங்களுக்கு மொடியுலர் முறையில் பாட உள்ளடக்கங்கள் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரம் குறித்து - எச்சரித்த சர்வதேச நாணய நிதியம்
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஐந்தாவது மீளாய்வை சர்வதேச நாணய நிதியம், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் நடத்த உள்ளதாக நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், உலகளாவிய வர்த்தக பதற்றங்கள் மற்றும் கொள்கை நிச்சயமற்ற தன்மைகள் இலங்கையின் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த காரணிகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மீளாய்வின் போது கவனமாக மதிப்பீடு செய்யப்படும்,
இதில் திட்ட இலக்குகளில் சாத்தியங்கள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். பல்கலை முன்னாலுள்ள நடைபாதை வியாபாரத்தை அகற்ற நடவடிக்கை
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்புறமாகவுள்ள நடைபாதையில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டுள்ளது.
மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் தற்காலிக வியாபார நிலையங்களை அகற்றும் செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
குறித்த நடைபாதையில் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் அகற்றுமாறும், அதனை மீறி வியாபாரங்களில் ஈடுபடுகின்றவர்களின் அத்தனை வியாபார நிலையப் பொருட்களும் ஜூலை 30 ஆம் திகதி சபையினால் கையகப்படுத்தப்படும்.
அத்துடன் நடைபாதையில் வாகனங்கள் நிறுவத்துவதும் முற்றாக தடை செய்யப்படுகின்றது. குறித்த அறிவித்தலினை மீறி வாகனங்களை நிறுத்துவோர் மீது போக்குவரத்துப் பொலிசார் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளது.
அதிகரிக்கப்படும் உதவித்தொகை - மகிழ்ச்சி செய்தி
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை எதிர்காலத்தில் 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச தரப்பு அறிவித்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
அரசாங்க தகவல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா (Sugath Wasantha de Silva) இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8.7 சதவீதமான பேர் மாற்றுத்திறனாளிகள், அவர்கள் இல்லாமல் ஒரு வளமான நாட்டை உருவாக்க முடியாது.
அந்தவகையில், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக என நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் நிதி உதவியை அதிகரித்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தல் போன்ற திட்டங்களையும் எதிர்காலத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுகத் வசந்த டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு -- அதிர்ச்சி தகவல்
உள்நாட்டில் உர விலைகளும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலக சந்தையில் உர விலைகள் அதிகரித்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவான பிரச்சினையைத் தாண்டி, சலுகை விலையில் உரங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் ஒவ்வொரு நாளும் 500 கிலோவுக்கும் மேற்பட்ட வாழைப்பழங்கள் விற்பனை ஆகாமல் குப்பையில் வீசப்படுவதாக நிலையத் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
மஹவெலி ‘H’ மண்டலம், ராஜாங்கனை, எப்பாவெல, கட்டியாவ, நொச்சியகம போன்ற பகுதிகளில் இருந்து வாழைப்பழங்களை கொண்டுவரும் விவசாயிகள், சந்தை தேவை குறைவானதால் தங்களது அறுவடைகள் பெரிதும் வீணாகி வருவதால் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
சந்தையில் தேவை இல்லாததால், மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் வாழைப்பழங்களில் பெரும்பகுதி விற்பனை ஆகாமல் கழிவாக வீசப்படுவதாகவும், இது விவசாயிகளுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை கட்டடம் இடிந்து விழுந்து -- சிறுவர்கள் பலி!
இந்தியாவின் ராஜஸ்தானில் இன்று (25) காலை பாடசாலை கட்டடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரச பாடசாலையின் ஒற்றை மாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளதுடன், விபத்து நடந்த நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தவிர சுமார் 40 மாணவர்கள் உள்ளே இருந்தனர்.
கட்டடம் பாழடைந்த நிலையில் இருந்ததுடன், இது தொடர்பாக முன்னர் பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
புதிய கல்வி மறுசீரமைப்பு - தவணைப் பரீட்சை நீக்கம்.....!
No comments