புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் தகாத வார்த்தை --- இதனால் ஏற்பட்ட விபரீதம்....!
புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் தகாத வார்த்தை --- இதனால் ஏற்பட்ட விபரீதம்....!
புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் தகாத வார்த்தை --- இதனால் ஏற்பட்ட விபரீதம்....!
புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் தகாத வார்த்தை --- இதனால் ஏற்பட்ட விபரீதம்.
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முன்னோடி வினாத்தாள் ஒன்றில் தகாத வார்த்தை அச்சிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் கல்வி வலயத்தில் கடந்த 22ம் திகதி இந்த வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த எழுத்து மற்றும் அச்சுப் பிழையினால் தாமும் மாணவ மாணவியரும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் (Anuradhapura) வலயக் கல்வி காரியாலயத்தினால் இந்த பரீட்சை வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வினாத்தாளை பெற்றுக்கொண்ட அதிபர்கள் தங்களது பாடசாலைகளில் பரீட்சையை நடாத்தியுள்ளனர்.
பரீட்சையின் போது மாணவர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டதாகவும் இது குறித்து தேடிப் பார்த்த போது வினாத்தாளில் தவறுதலாக தகாத வார்த்தை அச்சிடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து அதிபர்கள் வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருத்தி அமைக்கப்பட்ட புதிய வினாத்தாள்களை வழங்குவதற்குநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதம் இன்று..
புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதம் இன்று (24) நடைபெற உள்ளது.
விவாதம் இன்று மாலை 5.30 மணி வரை நடைபெறும் என்று பாராளுமன்ற தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த விவாதம் 22 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற விவகாரக் குழுவில் நடத்த முன்மொழியப்பட்டது.
இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நடத்த முன்னர் திட்டமிடப்பட்டது, ஆனால் மசோதா தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, பாராளுமன்ற விவகாரக் குழுவில் அதை பின்னர் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை
பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரச பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் புள்ளி விபரங்களுடன் கருத்துக்களை முன் வைத்தார்.
98 பாடசாலைகளில் ஒரு மாணவரும் இல்லை. 115 பாடசாலைகளில் 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ளனர், 20 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 406 காணப்படுகின்றன. 30 மாணவர்களுக்கு குறைவான 752 பாடசாலைகள் உள்ளன.
அத்துடன், 40 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1141 என்றும், 50 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் எண்ணிக்கை 1506 ஆகும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக் காட்டினார்.
நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15 சதவீதமான பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாவே உள்ளனர். 100 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் 3144 நாட்டில் உள்ளன.
குச்சவெளியில் 02 மாணவர்களுக்கு 02 ஆசிரியர்களும் பண்டாரவளையில் 03 மாணவர்களுக்கு 03 ஆசிரியர்களும் திருகோணமலையில் 04 மாணவர்களுக்கு 04 ஆசிரியர்களும் உள்ளனர்.
சில பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளை முழுமையாக மூட வேண்டும் என்பதோடு, சில பாடசாலைகளை ஒன்றாக இணைக்க வேண்டும். இன்னும் சில பிரதேசங்களில் புதிதாக பாடசாலைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
16 வயது மாணவியால் பொலிஸ் நிலையத்தில் நடந்த பரபரப்பு
இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தில் இணையம் மூலமாக காதல் உருவாகி, அதனால் ஒரு மாணவியின் வாழ்க்கை பாதிக்கப்படும் அளவுக்கு சென்ற சம்பவம், பெற்றோர்களுக்கும் மாணவிகளுக்கும் பெரும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
பத்தமடை பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவிக்கும், சமூக வலைதளங்களில் பழகிய 40 வயது கூலித் தொழிலாளருமான முருகனுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது.
இது மாணவியின் கல்வியையும், பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் முற்றியுள்ளதை பொலிஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாணவி கடந்த 14 ஆம் திகதி பள்ளிக்கு சென்றவாறு காணாமல் போனதையடுத்து பெற்றோர் பொலிஸில் புகார் செய்துள்ளனர். பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து மாணவியும் முருகனும் திருச்செந்தூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மாணவி பொலிஸாரிடம் கூட, “அவருடன்தான் இருப்பேன்” என்று பிடிவாதம் பிடித்ததுடன், பொலிஸ் நிலையத்திலேயே தற்கொலைக்கும் முயன்றார். இது அவருடைய இரண்டு கால்களில் பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, மாணவி சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (POCSO Act) காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். முருகன் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இவர் மீது முன்பு இருந்த போக்சோ வழக்கும் விசாரணையில் உள்ளது.
இச்சம்பவம், சமூக வலைதளங்களின் பாதிப்பு, இளைய தலைமுறையின் விநோதமான நம்பிக்கைகள், “இன்புளுயன்சர்கள்” போன்றவற்றால் உருவாகும் தவறான பாதைகள் குறித்தும் சிந்திக்க வைக்கும்.
மேலும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் ஆரோக்கியமான தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்பதையும், இணையத்தில் ஏற்படும் பழக்கங்களை சிறிது சிக்கலாகக் காண வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதையும் இந்தச் சம்பவம் உணர்த்துகின்றது.
Debit card அல்லது கிரடிட் கார்ட் ஊடாக பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம், வியாபாரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதம்
வாடிக்கையாளர்கள் Debit card அல்லது Credit card ஊடாக பணம் செலுத்தும் போது, வியாபாரிகள் கூடுதல் கட்டணம் (உதாரணமாக 2.5%) வசூலிப்பது சட்டவிரோதம் என இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
வியாபாரிகள் கார்ட் இயந்திரத்தை பெறும் போது வங்கிகளுடன் கைச்சாத்திடும் ஒப்பந்தத்தின் கீழ், வாடிக்கையாளரிடம் எந்தவொரு கூடுதல் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
“பட்டியல் விலையைவிட அதிகமாக வியாபாரி பணம் கேட்டால், உடனடியாக அந்த வாடிக்கையாளர் தங்களது card ஐ வழங்கிய வங்கிக்கு புகார் அளிக்க வேண்டும்,” என்றும் இலங்கை மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.
சில கடைகள் மற்றும் சேவை வழங்குநர்கள் card மூலம் பணம் செலுத்தும் போது கூடுதல் கட்டணங்களை வசூலிக்கிறார்கள் என்று வாடிக்கையாளர்கள் அதிகமான முறையில் புகார் கொடுத்துவரும் சூழலில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் தகாத வார்த்தை --- இதனால் ஏற்பட்ட விபரீதம்....!
No comments