டிக்டொக் காதலால் ஏற்பட்ட அவலம்..... - !

 டிக்டொக் காதலால் ஏற்பட்ட அவலம்..... - !





டிக்டொக் காதலால் ஏற்பட்ட அவலம்..... - !




 டிக்டொக் காதலால் ஏற்பட்ட அவலம்..... - !



டிக்டொக் காதலால் ஏற்பட்ட அவலம் 




டிக்டொக் மூலம் அறிமுகமான காதலன் ஒருவர் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் களுத்துறையில் பதிவாகியுள்ளது.


களுத்துறை பொலிஸ் பிரிவில் வசிக்கும் மாணவி ஒருவர் ஜனவரி மாதம் டிக்டாக் மூலம் ஒருவருடன் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் பெப்ரவரி மாதம் சிறுமி டிக்டொக் காதலனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, தமது காதலை வெளிப்படுத்தியுள்ளார். சிறுமியின் பெற்றோரும் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறான நிலையில் சிறுமியின் வீட்டில் காதலன் இரவை கழித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில், கடந்த 10 ஆம் திகதி குறித்த சிறுமி உடல்நலக்குறைவு காரணமாக தனது தந்தையுடன் ஹொரணை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதன் போது சிறுமி கர்ப்பம் தரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


டிக்டாக் காதலனின் முழுப் பெயரோ முகவரியோ தனக்கு தெரியாது என சிறுமி குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வடக்கு களுத்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துஷார டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தப்பியோடிய காதலனை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகினறனர்.



 டிக்டொக் காதலால் ஏற்பட்ட அவலம்..... - !



No comments

Theme images by fpm. Powered by Blogger.