இனி O/L இல்லாமல் A/L படிக்கலாம்....!

 இனி O/L இல்லாமல் A/L படிக்கலாம்....!




இனி O/L இல்லாமல் A/L படிக்கலாம்....!





இனி O/L இல்லாமல் A/L படிக்கலாம்....!



இனி O/L இல்லாமல் A/L படிக்கலாம்....!


2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்வி பிரிவில் தரம் 12 இல் சேருவதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்படுகின்றன. க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைப் பெறுபேறுகள் இந்தப் பிரிவில் இணையக் கருத்திற் கொள்ளப்படுவதில்லை. இது மாணவர்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வித் தகுதியை (NVQ நிலை 4) பெற வாய்ப்பளிக்கிறது. மாணவர்கள் 13 ஆம் வகுப்பு வரை பாடசாலைக் கல்வியைத் தொடரும்போது இந்தத் தகுதியைத் தொடரலாம்.


2024 (2025) அல்லது கடந்த 2 ஆண்டுகளுக்குள் O/L பரீட்சை எழுதிய எந்தவொரு மாணவரும் தங்கள் பகுதியில் தொழிற்கல்வி பிரிவு உள்ள பாடசாலையில் 12 ஆம் வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்.


12 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்கள் மென் திறன்களை வளர்ப்பதையும், தொழில் துறைகளை அறிமுகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட தொகுதிகளைப் படிக்கலாம். 13 ஆம் வகுப்பில், மாணவர்கள் பொருத்தமான தொழிலில் NVQ 4 நிலை பயிற்சிக்காக பாடசாலையிலேயே ஒரு அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்துடன் இணைக்கப்படுவார்கள். இங்கு, மாணவர்கள் ஒரு தொழிற்பயிற்சி நிறுவனத்திலும் பணியிடத்திலும் பயிற்சி பெறலாம்.


அதன்படி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், வாகன தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் பராமரிப்பு சேவைகள், ரத்தினம் மற்றும் நகை தொழில்நுட்பம், அழகு, கலை மற்றும் கைவினைப்பொருட்கள், உணவு உற்பத்தி, ஆடை, மின் மற்றும் மின்னணு தொழில்நுட்பம், உலோக பதப்படுத்துதல், வெல்டிங், இயந்திர செயல்பாடு, கட்டுமானத் தொழில், வீட்டு அலங்காரம், தோட்ட அலங்காரம், விவசாயம் மற்றும் தோட்டத் தொழில், நீர்வாழ் வள தொழில்நுட்பம், விளையாட்டு, உயிர்காக்கும் மற்றும் டைவிங் திறன்கள், வர்த்தகம் மற்றும் தளவாடங்கள் போன்ற பல துறைகளில் மாணவர்கள் தொழில் பயிற்சி வாய்ப்புகளைப் பெற உரிமை உண்டு.


இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து பாடசாலைக் கல்வியை முடிக்கும் மாணவர்கள் NVQ 4 சான்றிதழைப் பெறலாம், இது வேலைவாய்ப்பு, உயர் தொழிற்கல்வி வாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோருக்கு வழிவகுக்கும்.


உயர்தர தொழிற்கல்விப் பிரிவில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்கக்கூடிய பாடசாலைகளின் பட்டியல் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி பெறக்கூடிய துறைகள் ஆகியவை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் இணையதளத்தில் சிறப்பு அறிவிப்புகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன.


சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் பதின்மூன்று ஆண்டுகள் கல்வியை உறுதி செய்யும் நோக்கில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் இந்தப் பிரிவு செயல்படுத்தப்படுகிறது.


இது குறித்த மேலதிக தகவல்களை இந்த அமைச்சின் கல்விக் கிளையைத் தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது இந்த அமைச்சின் வலைத்தளத்தின் மூலமோ பெறலாம்.


 பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய பயணம்


இலங்கை-மாலைதீவு இராஜதந்திர உறவுகள் 60வது ஆண்டு நிறைவை எட்டியுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியின் மாலைதீவு உத்தியோகபூர்வ விஜயம், இருநாடுகளினதும் பொருளாதார ரீதியாக ஒருங்கிணைந்த மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் ஒரு தீர்க்கமான காரணியாக இருக்கும் என்று மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு தெரிவித்துள்ளார்.


'குரும்பா மோல்டீவ்ஸ்' விடுதியில் நேற்று (28) இரவு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இராப்போசன விருந்துபசாரத்தின் பின்னர் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு இவ்வாறு தெரிவித்தார்.


மாலைதீவு - இலங்கை உறவுகளின் பொருளாதார முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மாலைதீவு ஜனாதிபதி, பிராந்தியத்தில் செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்ப இலங்கையுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகக் கூறினார்.


இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுமுக்கியமான உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவித்த அவர், தற்போது கருவாடு போன்ற பாரம்பரிய வர்த்தகப் பரிமாற்றங்களுக்கு அப்பால் சுற்றுலா, டிஜிட்டல் தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் போன்ற நவீன துறைகளையும் உள்ளடக்கும் வகையில் விரிவடைந்துள்ளன.


இந்த பன்முகப்படுத்தல், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் எதிர்காலத் தன்மையை மட்டுமல்லாமல், வேகமாக மாறிவரும் உலகின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான இரு நாடுகளின் பொதுவான விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது என்று ஜனாதிபதி முய்சு மேலும் சுட்டிக்காட்டினார்.


கல்வி, சுகாதாரம் மற்றும் மனிதவள அபிவிருத்தி போன்ற முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை நினைவு கூர்ந்த மாலைதீவு ஜனாதிபதி, இந்த ஒத்துழைப்பு தற்போதைய பொருளாதார விரிவாக்கத்திற்கு ஒரு உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது.


இரு நாடுகளுக்கும் இடையிலான அண்மைய உயர்மட்ட கலந்துரையாடல்கள் இது வரை பயன்படுத்தப்படாத புதிய பொருளாதார மூலங்கள் குறித்து ஆராய்ந்து இரு நாட்டு மக்களுக்கும் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தும் என்றும் ஜனாதிபதி முய்சு நம்பிக்கை தெரிவித்தார்.


பல தலைமுறைகளாக, மாலைதீவு மக்கள் இலங்கையை ஒரு பங்காளராக மட்டுமல்லாமல் இரண்டாவது வீடாகவும் கருதி வருவதாகக் கூறிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வலுவான தனிப்பட்ட மற்றும் நிறுவன ரீதியிலான உறவுகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த உறவு ரீதியான உணர்வு இரு நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு தனித்துவமான சாதக நிலைமையை உருவாக்குகிறது என்று மாலைதீவு ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்



வீதி விபத்துக்களால் 1355 பேர் உயிரிழப்பு


நாடு முழுவதும் இந்த ஆண்டு இதுவரை 1,355 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

2024 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் வீதி விபத்துகளால் மொத்தம் 2,521 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் பிரடெரிக் வூட்லர் குறிப்பிட்டார். 

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் மீது, சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

தினமும் நிகழும் உயிரிழப்புகளைக் குறைப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் மேலும் வலியுறுத்தினார். 



 நாடு முழுவதும் சோதனை நடவடிக்கை


உரிய முறையில் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய்யில் கலப்படம் செய்யப்படுவதாகக் கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

உரிய முறையில் பொதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யை மாத்திரமே எதிர்காலத்தில் விற்பனை செய்வதற்கு அனுமதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில், 75 விற்பனை நிலையங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட தேங்காய் எண்ணெய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், 22 மாதிரிகளில் பிற பொருட்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதற்கமைய, நுகர்வோர் தரமான தேங்காய் எண்ணெய்யைப் பெறுவதனை உறுதிப்படுத்தும் வகையில், தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியன இணைந்து, உரிய முறையில் பொதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யை மாத்திரம் விற்பனை செய்வதற்கு அனுமதிக்கத் தீர்மானித்துள்ளன. 

இதனை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், அனைத்து பொதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்களும் எஸ்.எல்.எஸ். தர முத்திரையைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.



இனி O/L இல்லாமல் A/L படிக்கலாம்....!


No comments

Theme images by fpm. Powered by Blogger.