இலங்கையில் --- பெண்களிடையே அதிகரிக்கும் நோய் - !
இலங்கையில் --- பெண்களிடையே அதிகரிக்கும் நோய் - !
இலங்கையில் --- பெண்களிடையே அதிகரிக்கும் நோய் - !
இலங்கையில் --- பெண்களிடையே அதிகரிக்கும் நோய் - !
இலங்கையில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை சுவாச நோய்களுடன் தொடர்புடைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நுரையீரல் புற்றுநோய்க்கு புகைப்பிடித்தல் முக்கிய காரணியாக இருக்கின்ற போதிலும் இலங்கையில் புகைப்பிடித்தல் பழக்கமுடைய பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக வெலிசற தேசிய சுவாச நோய் வைத்தியசாலையின் நிபுணர் வைத்தியர் தமித் ரோட்ரிகோ கூறினார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
காற்று மாசடைதல் காரணமாகவே பெண்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரித்துள்ளது.
ஆசியாவில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் காற்று மாசடைதல் அதிகரித்துள்ளது.
மரபணு காரணிகளினாலும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்று (03) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
வேரஹெரவில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் இதுவரை பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இந்தப் பணிகள் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினர் பெரும்பாலும் கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது அருகிலுள்ள இடங்களில் இருந்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து தங்கள் பயணங்களின் போது தாங்களாகவே சாரதிகளாக செயல்படுவதாகவும், இதற்காக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் மற்றும் இலகுரக வாகனங்கள் பயன்படுத்தப்படுவது கவனிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் கூறினார்.
இருப்பினும், புதிய முறையின் கீழ், வெளிநாட்டினருக்கு இலகுரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி அனுமதிப்பத்திரம் மட்டுமே வழங்கப்படும் என்றும், கனரக வாகனங்கள் அல்லது முச்சக்கர வண்டிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படாது என்றும் அவர் மேலும் கூறினார்.
வானிலை அறிவிப்பு
அடுத்த 36 மணி நேரத்திற்கு மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல முறை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வட மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் அத்திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க, மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
வாகனம் தொடர்பாக வெளியான மகிழ்ச்சித்தகவல்...
நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திற்கும் மோட்டார் வாகன துணை ஆணையாளர் நாயகம் நியமிக்கப்படுவார் என்று மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.
போக்குவரத்து தொடர்பான சேவைகளுக்காக கொழும்புக்கு வராமல் தங்கள் சொந்த மாகாணத்தில் சேவைகளை வழங்குவதை எளிதாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
10 மாவட்டங்களில் பணிகள் ஏற்கனவே ஒன்லைனில் நடைபெற்று வருவதாகவும், எதிர்காலத்தில், மற்ற 15 மாவட்டங்கள் இணைக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்ட பிறகு, 25 மாவட்டங்களிலிருந்தும் தரவுகள் ஒரே நேரத்தில் ஒன்லைனில் பெறப்பட்டு மக்களுக்கு திறமையான சேவைகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் 25 மாவட்டங்களும் ஒன்லைனில் சேவைகளை வழங்கும் நிலையில் இருக்கும் என்று அவர் கூறினார்.
இதேபோல், எதிர்காலத்தில் "இ-மோட்டாரிங்" திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, மோட்டார் வாகனம் தொடர்பான அனைத்து சேவைகளும் வீட்டிலிருந்தே கிடைக்கும் என்றும், இதற்கு குறுகிய காலம் எடுக்கும் என்றும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
ரஷ்யாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு...
ரஷ்யாவில் இன்று காலை ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கம்சற்கா கடற்கரையின் ஒரு பகுதியை 19 சென்றிமீற்றர் (7.5 அங்குலம்) வரை சுனாமி அலை பாதிக்கக்கூடும் என்று ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் --- பெண்களிடையே அதிகரிக்கும் நோய் - !
No comments