இன்ஸ்டாகிராமில் வரும் புதிய கட்டுப்பாடு...

 இன்ஸ்டாகிராமில் வரும் புதிய கட்டுப்பாடு...

  


இன்ஸ்டாகிராமில் வரும் புதிய கட்டுப்பாடு...



இன்ஸ்டாகிராமில் வரும் புதிய கட்டுப்பாடு...



ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில் சமூக வலைத்தளங்கள் இளையசமூகத்தினர் மத்தியில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்றால் அது மிகையல்ல.

வட்ஸ் அப், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை விட இன்ஸ்டாகிராம்தான் அதிக அளவில் தற்போது பிரபலம் ஆகி வருகிறது.

இன்ஸ்டாகிரம் செயலியை பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு அனைவர் மத்தியிலும் இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலமாக உள்ளது.

இந்தியாவில் மட்டும் 43 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப்பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ள அமெரிக்காவில் இந்தியாவை விட பாதிக்கு பாதி குறைவாக 17 கோடி பேர் மட்டுமே பயன்படுத்துவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புதிய அப்டேடுகளை அதன் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் ஒரு முக்கிய மாற்றத்தை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

அதாவது, இன்ஸ்டாவில் உள்ள லைவ் வசதியை இனி அனைவரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சில விதிமுறைகளை மாற்றியுள்ளது.

இனிமேல், குறைந்தபட்சம் 1,000 பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளவர்கள் மட்டுமே லைவ் வீடியோக்களை வெளியிட முடியும். தற்போது வரை எந்தவொரு பயனரும், லைவ் வசதியை பயன்படுத்தும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் அனுமதித்திருந்தது.



அமெரிக்க விசா பிணைத் திட்டம்: 5,000 டொலர்கள் வரை பிணைத் தொகை



வணிக அல்லது சுற்றுலா விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் நுழைய 15,000 அமெரிக்க டொலர்கள் வரை பிணைத் தொகை சமர்ப்பிக்க வேண்டிய முன்னோடித் திட்டத்தை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் (U.S. State Department) செயல்படுத்தவுள்ளதாக, ஃபெடரல் ரெஜிஸ்டர் இணையதளத்தில் நேற்று (04) வெளியிடப்பட்ட முன்னோட்ட அறிவிப்பு தெரிவிக்கிறது. 

12 மாத கால "விசா பிணை முன்னோடித் திட்டத்தின்" கீழ், தூதரக அதிகாரிகள் குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களிடம் 5,000, 10,000 அல்லது 15,000 அமெரிக்க டொலர்கள் பிணைத் தொகையை கட்டாயப்படுத்தலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம், அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குப் பிறகு, அதாவது ஓகஸ்ட் 20 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

விசா மீறல் விகிதங்கள் அதிகமாக உள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அல்லது புலம்பெயர்ந்தோர் பரிசோதனை மற்றும் அடையாள சரிபார்ப்பு தகவல்கள் பற்றாக்குறையாக உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் பிணைத் தொகை கட்டாயப்படுத்தப்படலாம். 

பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்னர் ஒன்லைனில் வெளியிடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த முன்மொழிவு, டிரம்ப் நிர்வாகம் விசா விதிமுறைகளை கடுமையாக்கி வரும் நிலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

கடந்த வாரம், விசா புதுப்பித்தல் விண்ணப்பதாரர்கள் மீண்டும் நேரடி நேர்காணலுக்கு உட்பட வேண்டும் என்று இராஜாங்கத் திணைக்களம் அறிவித்தது. இது முன்பு தேவையில்லை



தேசபந்துவை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குதல் தொடர்பான தீர்மானம் 177 வாக்குகளால் நிறைவேற்றம்...


    

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்துக்கு  ஆதரவாக இன்று (5) பாராளுமன்றத்தில் 177 பேர் வாக்களித்துள்ளனர்.

இதேவேளைகுறித்த தீர்மானத்துக்கு எதிராக யாரும் வாக்களிக்களிக்கவில்லை.

இவ்வாக்கெடுப்பினையடுத்து இன்றிலிருந்து தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.



ரஷியாவில் 600 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த எரிமலை



600 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை வெடித்துள்ளது.

கடந்த வாரம் ரஷியாவில் பதிவான 7.0 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கத்தாலே வெடித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் வசிக்காத பகுதி என்பதால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

ரஷியா ரியா செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இது வரலாற்றில் பதிவான க்ராஷென்னினிகோவ் எரிமலையின் முதல் வெடிப்பாகும்" என்று தெரிவித்துள்ளது. இந்த எரிமலையின் கடந்த வெடிப்பு 1463-ஆம் ஆண்டில் (40 ஆண்டுகள் முன்/பின் வேறுபாடு இருக்கலாம்) நடந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா அரசு தரப்பில் கூறுகையில், 6000 மீட்டர் உயரம் வரை சாம்பல் மேகம் உயர்ந்துள்ளது. சாம்பல் மேகம் பசிபிக் கடலுக்கு நோக்கி நகர்ந்து வருவதால், மனித வசிப்பிடங்களுக்கு உடனடி அபாயம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த எரிமலை வெடிப்பிற்கு (Orange aviation alert )ஆரஞ்சு அவியேஷன் அலார்ட் அளிக்கப்பட்டுள்ளது, இது விமான போக்குவரத்துக்கு அபாய அளவைக் குறிக்கிறது. எரிமலை வெடிப்புகளுக்கு மத்தியில், சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வு செயல்பாடு தொடர்ந்தாக கூறப்படுகிறது.



ட்ரம்பின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி



ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு இந்தியா பதலடி கொடுத்துள்ளது.

“ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெருமளவில் கச்சா எண்ணெய் வாங்குவதுடன் மட்டுமல்லாமல், அவ்வாறு வாங்கிய எரிபொருள்களில் பெரும்பகுதியை திறந்த சந்தையில் அதிக லாபத்துக்கு விற்கிறது. ரஷ்யாவின் போர் ஆயுங்களால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது பற்றி இந்தியாவுக்கு கவலையில்லை. இதன் காரணமாக, அமெரிக்காவுக்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் எச்சரித்திருந்தார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் இந்தியா குறிவைக்கப்பட்டுள்ளது. உண்மையில், மோதல் வெடித்த பிறகு, வழக்கமாக கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகள் அனைத்தும் ஐரோப்பாவுக்கு திருப்பி விடப்பட்டதால் தான் ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யத் தொடங்கியது. உலகளாவிய எரிசக்தி சந்தைகளின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக அந்த நேரத்தில் இந்தியாவின் இத்தகைய இறக்குமதிகளை அமெரிக்கா தீவிரமாக ஊக்குவித்தது.

இந்தியாவின் இறக்குமதிகள் என்பது இந்திய நுகர்வோருக்கு மலிவு விலையில் எரிபொருள் செலவுகளை உறுதி செய்வதற்காக மட்டுமே ஆகும்.. இது உலகளாவிய சந்தை சூழ்நிலையால் கட்டாயப்படுத்தப்படும் ஒரு தேவையாகும். இருப்பினும், இந்தியாவை விமர்சிக்கும் நாடுகளே ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன என்பம் கவனிக்கத்தக்கது. ரஷ்யாவுடன் அவர்கள் மேற்கொள்ளும் வர்த்தகம் என்பது எங்களைப் போல் தேச நலனுக்கான கட்டாயம் கூட அல்ல.

2024-ல் ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவுடன் 67.5 பில்லியன் யூரோ மதிப்பிலான இருதரப்பு வர்த்தகத்தைக் கொண்டிருந்தது. கூடுதலாக, 2023-ல் 17.2 பில்லியன் யூரோ மதிப்பிலான சேவை வர்த்தகத்தைக் கொண்டிருந்தது. இது அந்த ஆண்டு அல்லது அதற்குப் பிறகு ரஷ்யாவுடனான இந்தியாவின் மொத்த வர்த்தகத்தை விட கணிசமாக அதிகம். உண்மையில், 2024-ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம், எல்என்ஜி எனப்படும் திரவ இயற்கை எரிவாயு இறக்குமதியை 16.5 மில்லியன் டன்களாகக் குறைத்தது. இது, 2022-ஆம் ஆண்டில் 15.21 மில்லியன் டன்களாக இருந்தது.

ஐரோப்பா - ரஷ்யா வர்த்தகத்தில் எரிசக்தி மட்டுமல்ல, உரங்கள், சுரங்கப் பொருட்கள், ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு மற்றும் இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்களும் அடங்கும்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அதன் அணுசக்தித் தொழிலுக்கு யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு, அதன் மின்சார உற்பத்தித் தொழிலுக்கு பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றை ரஷ்யாவில் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்கிறது.

இந்த விவகாரத்தில், இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது. எந்தவொரு பெரிய நாடுகளின் பொருளாதாரத்தையும் போலவே, இந்தியாவும் தனது நாட்டின் நலன்களையும், பொருளாதாரப் பாதுகாப்பையும் உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.



புதிய எல்லை நிர்ணயக் குழுவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்....



பிரதேச செயலக மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான எல்லை நிர்ணயக் குழு அமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிரதேச செயலக மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை நிறுவுதல் மற்றும் மீளாய்வு செய்வதற்காக 2012இல் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணயக் குழுவின் சில விதந்துரைகள் மட்டுமே அமல்படுத்தப்பட்டன. 2021இல் மீண்டும் ஒரு குழு நியமிக்கப்பட்ட போதிலும், அதன் விதந்துரைகள் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், 2021 எல்லை நிர்ணயக் குழு அறிக்கையில் உள்ள விதந்துரைகளை பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு சமர்ப்பித்து, அவற்றின் பரிந்துரைகளைப் பெற்று, மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தப் புதிய குழு, நிர்வாக எல்லைகளை திறம்பட மறுவரையறை செய்து, உள்ளூர் ஆட்சி மற்றும் நிர்வாக அமைப்புகளை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



10 இலட்சமாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்பீட்டு எல்லை இரண்டரை இலட்சமாக  குறைக்கப்படுகிறது...



    பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதி எல்லைகளைத் திருத்தம் செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

பாராளுமன்ற உயர்ந்தபட்ச உறுப்பினர் ஒருவருக்கு வருடமொன்றுக்கு ஒரு மில்லியன் ரூபாய்கள் முறையை காப்புறுதிக் காப்பீட்டின் கீழ் கூட்டுக் காப்புறுதி நடைமுறைப்படுத்துவதற்கு 2023.05.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, கடந்த காலப்பகுதியில் குறித்த காப்புறுதிக் காப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கின்ற போது ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படுகின்ற ரூபாய் 1,000,000/- காப்புறுதிக் காப்பீட்டு எல்லையை ரூபாய் 250,000/- ஆகக் குறைப்பதற்கு முன்மொழிந்துள்ளார். 

அதற்கமைய, 2025.10.19 ஆம் திகதி ஆரம்பிக்கின்ற காப்புறுதி ஆண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான காப்புறுதிக் காப்பீட்டு அனுகூலத்தை ரூபாய் 250,000/- ஆக மட்டுப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டுக் காப்புறுதிக் காப்பீட்டை வழங்குவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



அரச வாகனங்கள் தொடர்பில் புதிய தீர்மானம்...



  அரசாங்க வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்குப் பயன்படுத்த அனுமதிக்கும் வகையிலான சுற்றுநிருபமொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்குப் பயன்படுத்துவது, உரிய நபர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள் பயன்படுத்துவது குறித்த கடந்த காலங்களில் எதிர்க்கட்சியில் இருந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தி கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தது.

எனினும், தற்போதைக்கு அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டவுடன் தேசிய மக்கள் சக்தியின் முன்னைய நிலைப்பாடு முற்றாக மாற்றமடைந்துள்ளது.

 அதன் பிரகாரம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாகனங்களை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தவும், அவர்களின் மனைவி, பிள்ளைகள் பயன்படுத்தவும் அனுமதியளிக்கும் வகையிலான சுற்றுநிருபமொன்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க குறித்த சுற்றுநிருபத்தை வெளியிட்டுள்ளார்.

குறித்த சுற்றுநிருபத்தின் பிரகாரம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாகனங்களின் உத்தியோகபூர்வ சாரதிகள் இல்லாத நேரங்களிலும் குறித்த வாகனங்களை பயன்படுத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது



விசா முடிந்தும் நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை..



பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை பொலிஸ் 128 விசாரணைகளையும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை 149 விசாரணைகளையும் நடத்தியுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இன்று (05) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

துப்பாக்கிகளைப் பயன்படுத்தி பொலிஸார் செய்த கொலைகள், துப்பாக்கிகளைப் பயன்படுத்தி கொலை முயற்சி மற்றும் காயப்படுத்துதல் மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி தடைசெய்யப்பட்ட விலங்குகளைக் கொன்றது தொடர்பாக இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், விசா முடிந்தும் நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்யவும் அவர்களின் கடவுச்சீட்டுக்களை பெறுவதற்காக தவறான தகவல்கள் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்த நபர்கள் தொடர்பாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

கொலைக்காக 241 பேர், கொலை முயற்சி மற்றும் காயப்படுத்தலுக்காக 180 பேர் மற்றும் கொல்லப்படுவதற்கு தடைசெய்யப்பட்ட விலங்குகளைக் கொன்றதற்காக 04 பேர் உட்பட 425 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியேற்றத் துறை 219 பேரை கைது செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதில் 23 வியட்நாமியர்கள், 02 பாகிஸ்தானியர்கள், 106 வங்கதேசத்தினர், 56 இந்தியர்கள், 04 சீனர்கள், 06 தாய்லாந்து நாட்டினர், 02 பிலிப்பைன்ஸ் நாட்டினர், 02 புருண்டி நாட்டினர், 01 எத்தியோப்பியர், 02 கென்யர்கள், 01 உகாண்டா நாட்டினர், 01 நேபாள நாட்டினர், 03 ரஷ்யர்கள், 01 டச்சுக்காரர்கள், 02 யேமன் நாட்டினர், 04 இஸ்ரேலியர்கள், 01 ஆஸ்திரேலியர்கள், 01 இத்தாலியர்கள் மற்றும் 01 சூடானியர்கள் ஆகியோர் அடங்குவர்.

இதற்கிடையில், மூன்று கொலை வழக்குகள் மற்றும் மூன்று கொலை முயற்சி மற்றும் காயப்படுத்துதல் வழக்குகள் உட்பட ஆறு வழக்குகளை பொலிஸார் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.



டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு மீண்டும் எச்சரிக்கை...


டொனால்டு டிரம்ப்,  இந்தியா ரஷ்யாவிடமிருந்து பெருமளவு எண்ணெய் வாங்குவதற்கு எதிராக மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு செலுத்தப்படும் பொருட்களின் மீதான வரியை கணிசமாக உயர்த்துவேன் என அவர் அறிவித்துள்ளார்.

“இந்தியா ரஷ்யாவிடமிருந்து மிகப்பெரிய அளவில் எண்ணெய் வாங்குவது மட்டுமல்லாமல், அவ்வாறு வாங்கப்பட்ட எண்ணெயில் பெரும்பகுதியை உலக சந்தையில் விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டுகிறது,” என டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இன்று பதிவிட்டார்.

“இதன் காரணமாக, இந்தியா அமெரிக்காவுக்கு செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்,” என அவர் குறிப்பிட்டார். இருப்பினும், வரி உயர்வின் அளவு குறித்து அவர் தெளிவாக எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த அறிவிப்பு இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.



இன்ஸ்டாகிராமில் வரும் புதிய கட்டுப்பாடு...




No comments

Theme images by fpm. Powered by Blogger.