உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி..... - !

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி..... - !





உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி..... - !





உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி..... - !



க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள  மாணவர்களின்  பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி  இன்று (12) நள்ளிரவுடன் முடிவடைகிறது.


இதன்படி  மாணவர்கள் தங்கள்  விண்ணப்ப படிவங்களை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க அனுமதிக்கும் வகையில்,  பரீட்சைத் திணைக்களம் ஒன்லைன் விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



சுற்றுலா வருவாய் இரட்டிப்பு..

     

இலங்கைக்கு இந்த ஆண்டில் இதுவரை 1.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர், இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.


இதன்படி , ஜூலை 2025 க்கான சுற்றுலா வருவாய் 318.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது . இது ஜூலை 2024 இல் பதிவு செய்யப்பட்ட 151.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை விட அதிகமாகும். இவ் வருவாய் அதிகரிப்பானது சுற்றுலாதுறைக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி, ஆண்டுக்கு ஆண்டு சுற்றுலா வருவாயானது 7.8% அதிகரிப்பை கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



இலங்கைக்கு மூன்றாம் இடம்...

   

2021 ஆம் ஆண்டில் வாகனக் கொள்வனவில் உலகின் மூன்றாவது அதிக விலையை கொண்ட நாடாக இலங்கை (Srilanka) தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.


உலக வங்கியின் வாகன விலை நிலை குறியீட்டில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த குறியீட்டில் இலங்கையின் மதிப்பெண் 175 என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் சிங்கப்பூர் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் முதல் 2 இடங்களில் உள்ளன.  


இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தற்போது 300 சதவீத வரி விதிக்கப்படுவதுடன் உள்ளூர் மறுவிற்பனை சந்தை விலைகள் அதிகரித்துள்ளது.


மேலும் இலங்கை மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே பல வருட பயன்பாட்டிற்குப் பிறகும், வாங்கிய விலையை விட அதிக விலைக்கு வாகனங்களை விற்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.



  சிறுவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை....

     

இலங்கையில் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.


11/08/2025  காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


எலிக்காய்ச்சல் பெரும்பாலும் சேற்று நீரால் பரவுவதாகவும், தற்போது பாடசாலைகளுக்கு விடுமுறை காலத்தில் சிறுவர்கள் பட்டம் விடுவதற்காக வயல் நிலங்களுக்கு செல்வதால் இந்நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர் தீபால் தெரிவித்துள்ளார். 


காய்ச்சல் ஐந்து அல்லது ஆறு நாட்கள் நீடித்தால், அது எலிக்காய்ச்சலாக இருக்கலாம் என சந்தேகிக்க வேண்டும் எனவும், கண்களில் சிவப்பு அல்லது மஞ்சள் நிறம், வயிற்று வலி, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும் எனவும் அவர் விளக்கினார்.


எலிக்காய்ச்சலுக்கு சிகிச்சை இருந்தாலும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், இந்நோய் சிறுநீரகத் தொற்றுக்கு வழிவகுக்கும் ஆபத்து உள்ளதாகவும் வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்தார். 


சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரும் சேற்று நீர் மற்றும் மாசடைந்த பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.



காற்றாலை மின்சாரத் திட்டத்தால்  --- பறவைகளுக்கு ஆபத்தில்லை...

  

மன்னாரில் காற்றாலை மின்சாரத் திட்டங்கள் பறவைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறப்படுவதை எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி நிராகரித்துள்ளார்.


குறித்த பகுதியை தான் பார்வையிட்டதை வெளிப்படுத்திய அமைச்சர் அந்தப் பகுதியில் பறவைகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படும் கூற்றுகள் ஆதாரமற்றவை என்று கூறினார்.


மன்னாரிலிருந்து பூநகரிக்கு வடக்கே உள்ள பகுதி வெறும் பழமையான நிலம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


சமூகத்தில் உள்ள சில பிரிவினர் மன்னாரை காற்றாலைகளால் அழிக்கப்படும் ஒரு "சொர்க்கம்" என்று சித்தரித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.



ஜனாதிபதி நிதியத்திலிருந்த வெளிநாட்டு உதவித்தொகைகள் பகிர்ந்தளிப்பு - அதனை மீட்க நடவடிக்கை....

    


ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி நிதியத்திலிருந்து அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட வெளிநாட்டு உதவித்தொகை மீட்கப்படுகிறது.


ஏழை மக்களின் வசதிகளுக்காக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி நிதியத்திலிருந்து, அரசியல்வாதிகளின் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்ட வெளிநாட்டு உதவித்தொகைகளை உடனடியாக மீட்க அரசு தீர்மானித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதற்காக விரைவில் சிவப்பு அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. இந்த நிதி மீட்பு தொடர்பாக அரசு ஏற்கனவே சட்டத்துறையிடம் ஆலோசனை கோரியுள்ளது.


ஜனாதிபதி நிதியத்திலிருந்து வெளிநாட்டு உதவித்தொகை வழங்குவது, அந்தச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணானது என சட்டத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.


கடந்த காலத்தில், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 72 பேருக்கு மேல், 20 கோடி ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு உதவித்தொகைகள் இந்த நிதியத்திலிருந்து வழங்கப்பட்டதாக நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக நாடாளுமன்றத்தில் அண்மையில் வெளியிட்டார்.




உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி..... - !

No comments

Theme images by fpm. Powered by Blogger.