Tiktok மூலம் கடும் குற்றங்களில் சிக்கும் சிறுவர்கள் தொடர்பாக --பெற்றோர்களுக்கு எச்சரிக்கை !

 Tiktok மூலம் கடும் குற்றங்களில் சிக்கும் சிறுவர்கள் தொடர்பாக --பெற்றோர்களுக்கு எச்சரிக்கை !




Tiktok மூலம் கடும் குற்றங்களில் சிக்கும் சிறுவர்கள் தொடர்பாக --பெற்றோர்களுக்கு எச்சரிக்கை !





Tiktok மூலம் கடும் குற்றங்களில் சிக்கும் சிறுவர்கள் தொடர்பாக --பெற்றோர்களுக்கு எச்சரிக்கை !




Tiktok மூலம் கடும் குற்றங்களில் சிக்கும் சிறுவர்கள் தொடர்பாக --பெற்றோர்களுக்கு எச்சரிக்கை !



டிக் டோக் குழுக்களில் ஈடுபடுவதால் சிறுவர்கள் கடுமையான குற்றங்களில் சிக்குவதாக  மகளிர் தலைமை பொலிஸ் ஆய்வாளர் வருணி கேசலா போகாவத்த தெரிவித்துள்ளார்.


பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும்போது அவர்களை கண்காணிப்பது மிகவும் முக்கியம். டிக் டோக் தொடர்பான கடுமையான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக கடந்த ஒன்றரை மாதங்களில் முறைப்பாடுகள் பெறப்பட்டது. சிறுவர்கள் இணையத்தில் டிக் டோக் குழுக்களில் சேரும் போக்கை நாங்கள் காண்கிறோம். இதன் மூலம், சிறுவர்கள் தங்களுக்கு அறியாமலேயே கடுமையான குற்றங்களில் சிக்குகின்றனர்.


டிக் டாக் குழுக்களில் சேரும்போது சிறுவர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவது மிகவும் முக்கியம். அந்த டிக் டோக் குழுக்களில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம். இந்த குழுக்கள் சில சிறுவர்களின் அந்தரங்க புகைப்படங்களைப் பெறுகின்றனர். அதனை கொண்டு பெற்றோர்களை மிரட்டி பணம் பறிக்கும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன.


சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசி, மடிக்கணினிகள் மற்றும் டேப்களை வழங்கும்போது, அவர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும். மேலும் சிறுவர்களை அவர்களின் அறைகளில் தனியாக இருக்க அனுமதிக்க வேண்டாம். உங்கள் பிள்ளகைள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்கவும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகளுக்கு தடை!



தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


இந்த தடையை மீறும் ஆசிரியர்கள், பாடசாலைகள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர எச்சரித்துள்ளார்.


இந்நிலையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்தப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,787 பரீட்சை நிலையங்களில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



வெள்ளத்தில் அடித்து வந்த 20 கிலோ தங்கம்...வலை வீசி தேடிய மக்கள்! 



சீனாவில் ஷான்ஸி மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் தங்க நகைக் கடைகளில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள் அடித்து செல்லப்பட்டன. 


மொத்தமாக 20 கோடி தங்க நகைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், கடை உரிமையாளர் ஊழியர்களை வைத்து தேட சொல்லியுள்ளார். இதற்கிடையே இந்த தகவல் ஊர் மக்களும் தெரிந்து அவர்களும் தேட ஆரம்பித்துள்ளனர். 


காணாமல் போன நகைகளை மக்கள் சேற்றில் தேடும் படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.



பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை



வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  


இந்த அறிவிப்பு இன்று (02) இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 


இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.



பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழப்பு



அநுராதபுரம் (Anuradhapura) - கெக்கிராவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவை காவல்துறையினர் தெரிவித்தனர்.


பாடசாலை முடிந்து வீடு திரும்புவதற்காக பாடசாலை பேருந்திற்காக வீதியோரம் காத்திருந்த மாணவி திடீரென சுகயீனமுற்று மயக்கமடைந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.


இந்த நிலையில், மயக்கமடைந்த மாணவியை பாடசாலை சமூகத்தினர் இணைந்து பாடசாலை பேருந்து மூலம் கெக்கிராவை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த மாணவி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிகிரியாவின் டல்கோட்டில் வசிக்கும் தரம் 6 இல் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்தர் ஆவார்.


மாணவியின் மரணம் குறித்து உடலில் தடயவியல் வைத்திய பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 




Tiktok மூலம் கடும் குற்றங்களில் சிக்கும் சிறுவர்கள் தொடர்பாக --பெற்றோர்களுக்கு எச்சரிக்கை !

No comments

Theme images by fpm. Powered by Blogger.