மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..........!

 மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..........! 




மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..........!



 மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..........! 


மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது. 


மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், 


இம்மாதம் 25ஆம் திகதி வரை மாத்திரமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். 


இதனால் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் மற்றும் நெப்தா ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். 


இது ஒரு பாரிய பிரச்சினை.  


ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளது, ஆனால் நெப்தா வராது. 


அதற்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். 


இந்த நெருக்கடியால் இரவு நேரங்களில் டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். 


எனவே, ஒரு விளக்கையாவது அணைத்து, வீதி விளக்குகளையும் அணைத்து இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்கிறோம். 


அவ்வாறு செய்தால் மாத்திரமே எம்மால் நிலைமையைச் சமாளிக்க முடியும். 


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் D ராஜகருண, இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் இவை. 



கொலை தொடர்பில் வௌியான பல தகவல்கள்..! 


மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பெண் ஒருவரை வீசிச்சென்ற சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அத்துடன் சந்தேகநபர்கள் குற்றச்செயல்களுக்காக பயன்படுத்திய இரண்டு முச்சக்கர வண்டிகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.


கைதானவர்கள் மட்டக்களப்பில் நடைபெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடனும் தொடர்புபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு மூன்று வயது குழந்தையுடன் இளம் தாய் ஒருவர் சென்றிருந்த நிலையில் காணாமல் போனார்.


மறுநாள் வெள்ளிக்கிழமை குறித்த தாய் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டதுடன், 


அவரது குழந்தை வயல் பகுதி ஒன்றில் தனித்துவிடப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.


குறித்த தாய் மீட்கப்பட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் மற்றுமொரு பெண்ணின் சடலமும் இதன்போது மீட்கப்பட்டிருந்தது.


குறித்த சம்பம் தொடர்பில் சிசிரிவி காட்சிகளைக் கொண்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி அடையாளப்படுத்தப்பட்டு அதன் உரிமையாளர் இனங்காணப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா, வேர்க்கண்டசேனை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கணவன் மனைவி, கணவனின் சகோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்ட கணவன், மனைவி சம்பவ தினமான வியாழக்கிழமை வவுணதீவு பகுதியில் குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்த இளம் தாயைக் கண்டு, முச்சக்கர வண்டியை நிறுத்தி மட்டக்களப்பு நகருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


அப்போது தாம் அடகு வைத்த குழந்தையின் தங்க ஆபரணத்தை மீட்கப் போவதாகத் குறித்த தாயிடம் இருந்து சந்தேகநபர்கள் தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.


பின்னர் மட்டக்களப்பு நகருக்கு சென்று தாம் மீண்டும் இதே வழியில் வருவதாகவும், 


அதற்கு குறைந்தளவான கட்டணத்தை தருமாறும் கோரியுள்ளனர்.


இதற்கு குறித்த தாயும் இணக்கம் வௌியிட்டுள்ள நிலையில், சந்தேகநபரான பெண் ஒருவர் நகை அடகு நிலையத்திற்கும் அந்த தாயுடன் சென்று திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.


மீண்டும் அவர்களை தமது முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற நிலையில், வலையிறவு பாலத்தை அண்மித்த போது, அவருக்கு மயக்க மருந்து கலந்த பழச்சாறு போத்தலைக் அருந்தக் கொடுத்துள்ளனர்.


அவர் அதனை வாங்கி அருந்திய பின்னர் மயக்கமடைந்துள்ளார்.


இதன்போது கொத்தியாபுலை பகுதியில் உள்ள வயல்பகுதியில் குழந்தையினை எரிந்துவிட்டு குறித்த முச்சரக்கவண்டி காஞ்சிரங்குடா சென்று அங்கு மயக்கமடைந்த பெண்ணின் சுமார் நான்கரை பவுன் தாலிக்கொடியை கழட்டியுள்ளனர்.


பின்னர் அதனை சந்தேகநபரின் மனைவி எடுத்துக் கொண்டு முச்சக்கரவண்டியில் இருந்து வீட்டில் இறங்கியுள்ளார்.


இதனையடுத்து வீட்டிலிருந்த தனது காரில் மயக்கமுற்ற பெண்ணை ஏற்றிக்கொண்டு தமது சகோதரனையும் அழைத்து சென்ற சந்தேகநபர் நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் வீசிச் சென்றுள்ளனர்.


சந்தேகநபர்கள் இதேபோன்ற கொள்ளைச் சம்பவங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொண்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதில் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை விற்று பெற்றுக் கொண்ட பணத்தில் காரை கொள்வனவு செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.


கொள்ளையிடப்பட்ட நகைகள் விற்பனை செய்த மற்றும் அடகுவைக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் இருவரும் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்டவர்களிடம் கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தொடர்பில் 


இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது.


 "நாட்டின் இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய விடயங்கள் குறித்து உங்கள் அவதானத்தைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனப் பொதுமக்களுக்கு வழிகாட்டுவது போல் அமைந்துள்ள அந்தச் செய்தி, எவ்வகையிலும் இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டது அல்ல என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 


பொலிஸார் தரப்பிலிருந்து பொதுமக்களுக்கு ஏதேனும் அறிவித்தல் விடுக்கப்படுவதாயின், அது பொலிஸ் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பின் கீழ் ஊடகங்களுக்கு அறிக்கையாகவே வெளியிடப்படும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அத்துடன், அவர்களின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் மற்றும் யூடியூப் தளம் வாயிலாகவும் அன்றாட உத்தியோகபூர்வ செய்திகள் புதுப்பிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


பொலிஸ் இலச்சினை அல்லது பெயரைப் பயன்படுத்தி இவ்வாறான பொய் தகவல்களைப் பரப்புவது ஏதேனும் திட்டமிட்ட செயலா என்பது குறித்து கண்டறிய ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


எனவே, சமூக வலைதளங்களில் பரவும் இவ்வாறான பதிவுகள் குறித்து அவதானத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் செயற்படுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.



மின்சார கட்டண உயர்வு தொடர்பில் 


மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக  22/03/2026 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


உலக சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாத நிலவரங்களைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தை 13 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.


எனவே குறித்த இறுதி முடிவை ஏப்ரல் முதலாம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கும் என்றும் அவர் குறி்ப்பிட்டுள்ளார்..



பாடசாலை விடுமுறை தொடர்பில் 


நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காகப் பாடசாலைகளை நடாத்துவதை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக 22/03/ 2026 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


திட்டமிட்டபடி முதலாம் பாடசாலை தவணை ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அதுவரை புதன்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 


சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பாக கடந்த காலங்களில் நிலவிய நிச்சயமற்ற நிலைமை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததால், வாரத்தில் 4 நாட்களாவது பாடசாலைகளை நடாத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.



 மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..........! 



 

No comments

Theme images by fpm. Powered by Blogger.