நேர்முகப்பரீட்சை....

  

நேர்முகப்பரீட்சை....


நேர்முகப்பரீட்சை....



நேர்முகப்பரீட்சை....


2023/2024 க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள், 2026 ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் 2026 மே 08 ஆம் திகதி வரை அந்தந்தக் கல்வியியல் கல்லூரிகளில் நடைபெறவுள்ளன.


நேர்முகப்பரீட்சைக்காகதெரிவுசெய்யப்பட்டுள்ள  விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...


எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகளும் கணிசமாக உயரக்கூடும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எச்சரித்துள்ளது.


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உரங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, கடந்த காலங்களில் 5% ஆக இருந்த இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் தற்போது 4% ஆகக் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இது குறித்து கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான சிரேஷ்ட பொருளாதார நிபுணர் லிலியா அலெக்சாண்டியன் கருத்துத் தெரிவிக்கையில்: "கடந்த ஆண்டு பணவீக்கம் மறை பெறுமதியில் இருந்தது.


எனினும், இந்த ஆண்டு அது 5.2% வரை அதிகரிக்கும். இது மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன், அடுத்த ஆண்டு மீண்டும் 4% ஆகக் குறையும்.


தற்போது உரங்களின் விலை சுமார் 50% ஆல் அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் இலங்கையின் விவசாயத் துறையில் எதிரொலிக்கும். உணவுப் பொருட்களின் விலை உயர்வதற்கும் இது ஒரு பாரிய சவாலாக அமையும்.


உர விலை மற்றும் மின்சாரக் கட்டணம் உயரும் என்பதால், அத்தியாவசிய நிவாரணங்கள் தேவைப்படுவோருக்கு அதனை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.


மேலும், மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 20% ஆல் குறைந்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதான பொருளாதார அதிகாரி லக்ஷினி பெர்னாண்டோ தெரிவித்தார்.


மத்திய கிழக்கிலிருந்து பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வராமல் போனால், வளைகுடா பிராந்திய வான்பரப்பைப் பயன்படுத்தி இலங்கை வரும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும். இதன் தாக்கம் எதிர்வரும் மாதங்களில் உணரப்படும்," எனத் தெரிவித்தார்.


பொலிஸார் அறிவுறுத்தல்...


புத்தாண்டு விடுமுறை நாட்களில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் சமூக ஊடகப் பாவனையில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.


அதாவது, நிகழ்நேரத் தகவல்களையோ அல்லது வருகைப் பதிவுகளையோ பகிர்வதை தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பதிவுகளை வெளியிடும்போது வீடுகளில் ஆட்கள் இல்லை என்பதை வெளிப்படுத்திவிடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


உடனடியாக பகிர்வதற்குப் பதிலாக வீடு திரும்பிய பின்னர் பதிவிடும் லேட்டர் - க்ராம் முறையைப் பின்பற்றுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் தங்களின் பயணப் புகைப்படங்களையும் காணொளிகளையும் உடனடியாக பதிவேற்றுவதை தவிர்த்து பயணம் நிறைவுற்ற பின்னர் பகிருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


ஒருவர் வீட்டில் இல்லை என்பதை வெளிப்படுத்துவது திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவது வழியமைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எச்சரிக்கை விடுப்பு...


மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு, ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவ மாவட்டங்களிலும் கடும் மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.


12/04/2026 நண்பகல் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும்.


அதன்படி, பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு, ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவ மாவட்டங்களிலும் சில இடங்களில் கடும் மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.



உடனே அறிவிக்கவும் - போக்குவரத்து ஆணைக்குழு...


நியமிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படும் பேருந்துகள் குறித்து 1955 எனும் இலக்கத்துக்கு முறைப்பாடளிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


இது தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ஆணைக்குழுவின் செயற்பாட்டு பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.


முறையான அனுமதிப்பத்திரமின்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் இப் பிரச்சினை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



நேர்முகப்பரீட்சை....


No comments

Theme images by fpm. Powered by Blogger.