விண்ணப்ப முடிவுத் திகதி ஜூன் 1ஆம் திகதி வரை நீடிப்பு.................!
விண்ணப்ப முடிவுத் திகதி ஜூன் 1ஆம் திகதி வரை நீடிப்பு.................!
விண்ணப்ப முடிவுத் திகதி ஜூன் 1ஆம் திகதி வரை நீடிப்பு.................!
இலங்கை பொலிஸ் துறையில் பயிற்சிப் பொலிஸ் கான்ஸ்டபிள், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதிகள் ஆகிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் இறுதித் திகதி வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விவரங்கள் வருமாறு:-
கடந்த 2026 மார்ச் 27ஆம் திகதியிட்ட 2482ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்கவே இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப இறுதித் திகதி கடந்த 2026 மே 8ஆம் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், 2026 மே 15ஆம் திகதியிட்ட 2489ஆம் இலக்க புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், விண்ணப்பங்களை ஏற்பதற்கான இறுதித் திகதி தற்போது 2026 ஜூன் 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் முழுமையாக இணையவழி முறைமையினூடாக மட்டுமே விண்னப்பிக்கப்பட வேண்டும் என்று பொலிஸ் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.
இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் ஏதேனும் தொழில்நுட்ப அல்லது நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், பொலிஸ் ஆட்சேர்ப்புப் பிரிவை நேரடியாகத் தொடர்புகொண்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நோர்வூட்டில் பஸ் விபத்து
நோர்வூட் வென்சர் தோட்டப்பகுதியில் இன்று (22) காலை தனியார் பேருந்தும், லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த மாணவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த மாணவர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அந்த பஸ்ஸில் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட 20 பேர் வரையில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு!
டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இன்று (22) காலை அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நிலவும் மோசமான காலநிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவிருந்த பல விமானங்கள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டிருந்தது.
குறித்த விமானங்களில் சிலவற்றிலேயே இந்த சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பாதாள உலகக் குழு உறுப்பினர்களில் மஹவத்தே சாமர மற்றும் குடு துமிந்த ஆகியோரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி அம்பாறைக்கு விஜயம்
நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பித்தல் மற்றும் அம்பாறை பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி பங்கேற்புடன் இடம்பெறவுள்ளது.
அம்பாறை மாவட்ட மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் நோக்கில், அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அம்பாறை மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெறும்.
மேலும், பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு நிர்மாணப் பணிகள் தடைப்பட்டிருந்த நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.
இதேவேளை அம்பாறை நகரத்தின் நீண்டகாலத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அம்பாறை பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகளும் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. 1,744.85 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம், 2028-12-31 ஆம் திகதி நிறைவுசெய்யப்படவுள்ளது.
விண்ணப்ப முடிவுத் திகதி ஜூன் 1ஆம் திகதி வரை நீடிப்பு.................!

No comments