பாடசாலைகளுக்கு 5 நாட்கள் விசேட விடுமுறை.................!
பாடசாலைகளுக்கு 5 நாட்கள் விசேட விடுமுறை.................!
பாடசாலைகளுக்கு 5 நாட்கள் விசேட விடுமுறை.................!
இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி முதல் மே மாதம் 31 ஆம் திகதி வரை (27.05.2026 – 31.05.2026) விசேட விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
வரவிருக்கும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டும், பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான விடுமுறையினை அடிப்படையாகக் கொண்டும் இந்த விசேட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முக்கிய அறிவித்தல்: அனைத்து முஸ்லிம் பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த விடுமுறை தினங்களைக் கவனித்திற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மீள ஆரம்பம்: விடுமுறை முடிவடைந்து மீண்டும் ஜூன் மாதம் முதலாம் திகதி (01.06.2026) வழமை போல் பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரம்: இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் உத்தியோகபூர்வ சுற்றுநிருபங்கள் கல்வி அமைச்சின் ஊடாக அனைத்து மாகாண கல்வித் திணைக்களங்களுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
டொலரின் விற்பனை விலை 350
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்றைய தினம் (21) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 354 இலங்கை ரூபாயைக் கடந்துள்ளதுடன், அது 354.03 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
அதேநேரம், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 342.63 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
இது, கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் பதிவு செய்த மிகக் குறைந்த மதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
19 வயது இளம் குடும்பப் பெண் தற்கொலை
வரதட்சணைக் கொடுமை காரணமாக இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்று (20) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் - நாவாந்துறையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்சி (வயது 19) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
உயிரிழந்த பெண், இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்த நபரைக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். எனினும், அந்தப் பெண்ணைக் கணவனின் தாயார் மருமகளாக ஏற்றுக்கொள்ளவில்லை.
அதனைத் தொடர்ந்து, 25 பவுண் தங்க நகையையும், ஒரு வீட்டையும் வரதட்சணையாக வழங்குமாறு கோரி கணவனின் தாயார் அப்பெண்ணை நச்சரித்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பம் என்பதால், அவர்களால் கோரப்பட்ட வரதட்சணையை வழங்க முடியாமல் போயுள்ளது.
இந்த நிலையில், தனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்ப கணவனின் தாயார் முயற்சித்த வேளையில், தனது கணவனை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என அப்பெண் கோரியுள்ளார். எனினும், "எனது தாயார் கேட்ட வரதட்சணையைத் தராவிட்டால் நான் வெளிநாட்டுக்குச் செல்வேன்" என அப்பெண்ணின் கணவரும் கூறியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் உள்ளான அந்தப் பெண், நேற்று காலை தவறான முடிவெடுத்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இந்த மாதம் 27ஆம் திகதி 700 மில்லியன் டொலர் நிதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். "ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களுக்கு மேலதிகமாக, வெளிநாட்டு நாணயத்தைப் பெற்றுக்கொள்வதில் இந்த 27ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதன் பணிப்பாளர் சபை நமக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்கும் என நம்புகிறோம்.
அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இந்த வருடத்திற்குள் 480 மில்லியன் டொலர்கள் வரை பெற்றுக்கொள்ள முடியும். உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர்களும், அதன் அணுக்க நிறுவனம் ஒன்றிடமிருந்து 50 மில்லியன் டொலர்களும் கிடைக்கவுள்ளன. எனவே, இதனை மேலாண்மை செய்வதில் எந்தவொரு சிக்கலும் ஏற்படாது."
பாடசாலைகளுக்கு 5 நாட்கள் விசேட விடுமுறை.................!

No comments