பல்கலைக்கழகங்களுக்கு புதிய ‘AI கொள்கை கட்டமைப்பு ............!

        

பல்கலைக்கழகங்களுக்கு புதிய ‘AI கொள்கை கட்டமைப்பு ............! 



பல்கலைக்கழகங்களுக்கு புதிய ‘AI கொள்கை கட்டமைப்பு ............!





பல்கலைக்கழகங்களுக்கு புதிய ‘AI கொள்கை கட்டமைப்பு ............! 



செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை வெறும் பயன்பாட்டுடன் மட்டும் சுருக்கிக்கொள்ளாமல், கொள்கைகள், ஒழுக்கநெறிகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாக முறைமையின் ஊடாக அதன் எதிர்காலத்தை வடிவமைக்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரச பல்கலைக்கழகங்களுக்கான ‘AI கொள்கை கட்டமைப்பை’ (AI Policy Framework) அறிமுகப்படுத்தும் நிகழ்வில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இலங்கை பல்கலைக்கழக முறைமைக்குள் செயற்கை நுண்ணறிவை தார்மீக ரீதியாகவும், பொறுப்புடனும் பயன்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், வேகமாக மாறிவரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவுக்குள் வாய்ப்புகளும் அதேநேரம் சவால்களும் (அவதானம்) காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

பிரதமரின் உரையில் மேலும் குறிப்பிட்டதாவது:

“நாம் தற்போது மிக வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்துடன் பயணிக்கிறோம். எனவே, அதன் சரியான பயன்பாட்டிற்கு கொள்கைகள் மட்டுமல்லாது, நிர்வாகம் மற்றும் செயல்பாட்டிற்கான வலுவான கட்டமைப்புகள் இருப்பதும் அவசியமாகும்.

AI தொழில்நுட்பத்தின் தாக்கத்தினால் சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் துறைகள் சவால்களை எதிர்கொள்கின்றன. இதன்காரணமாகவே, இந்தக் கொள்கைக் கட்டமைப்பானது ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாக வடிவமைக்கப்பட வேண்டும். அத்துடன், AI தொழில்நுட்பமானது கல்வி முறைமையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்காமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.”


முதல்வர் விஜய்க்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து


தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 


அவர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, 

இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மக்களுக்கிடையிலான நெருக்கமான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. 


இலங்கையும் இந்தியாவும் மென்மேலும் நெருக்கமான உறவுகளையும் வலுவான கூட்டாண்மையையும் தொடர்ந்து கட்டியெழுப்பி வரும் நிலையில், நமது எதிர்காலம் மகத்தான பொருளாதார வளர்ச்சியையும் வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. 


வலுவான இந்திய - இலங்கை கூட்டாண்மைக்குள் இணைந்து செயல்படுவதன் மூலம், மேலான செழிப்பையும் முன்னேற்றத்தையும் அடைவதற்கு தாம் ஆவலுடன் காத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 


அத்துடன் உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிடைக்க இலங்கை மக்கள் சார்பாக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளார்.



 பொலிஸார் விசேட அறிவிப்பு


மே முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், டிஜிட்டல் மோட்டார் வாகன காப்புறுதி அட்டைகளை (Digital Motor Insurance Cards) வழங்குவது தொடர்பாக பொலிஸாரால் விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதிச் சங்கம் மற்றும் காப்புறுதித் துறையின் ஏனைய பங்குதாரர்கள் இணைந்து எடுத்த தீர்மானத்திற்கு இணங்க, காப்புறுதி நிறுவனங்களினால் மோட்டார் வாகன காப்புறுதிப் பத்திரங்களுக்குப் பதிலாக இந்த டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தேசிய காப்புறுதி சரிபார்ப்பு அமைப்பு (National Insurance Verification System) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், பின்வரும் முறைகள் மூலம் அதனை அணுக முடியும்:

SMS மூலம்

QR குறியீடு (QR Code) மூலம்

இணையதளம் (Website) மூலம்

இந்த முறைகளைப் பயன்படுத்தி மோட்டார் வாகன காப்புறுதியின் செல்லுபடியாகும் தன்மையை சரிபார்க்க முடியும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



முதல்வர் சீட்டில் மாஸாக அமர்ந்த விஜய்



தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் சென்னை தலைமை செயலகம் வந்து முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து தற்காலிக சபாநாயகருக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார். ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.


இதனைத்தொடர்ந்து  முதலமைச்சர் விஜய், பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சென்னை தலைமை செயலகம் வந்தார். 


முன்னதாக அங்கு அளித்த பொலிஸ் மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து தற்காலிக சபாநாயகருக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அவருக்கு துறை சார்ந்த அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


இந்நிலையில் தமிழ்நாடு 17வது சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. தற்காலிக சபாநாயகர்  சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர்


நாளை மறுதினம் புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.



கடற்பரப்பில் ஆணொருவரின் சடலம் மீட்பு!


கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் சடலம் ஒன்று காணப்படுவதாக கொழும்பு துறைமுகப் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் சுமார் 5 அடி 6 அங்குல உயரமுடையவர் எனவும், குட்டையான தலைமுடி மற்றும் தாடி வைத்துள்ளவர் எனவும் விவரிக்கப்பட்டுள்ளது. அவர் இறக்கும் போது கறுப்பு நிற அரைக்காற்சட்டை (Shorts) மற்றும் பழுப்பு (Brown) நிற ரீ-சேர்ட் அணிந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









பல்கலைக்கழகங்களுக்கு புதிய ‘AI கொள்கை கட்டமைப்பு ............! 

No comments

Theme images by fpm. Powered by Blogger.