பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறைகளில் மாற்றம்

   

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறைகளில் மாற்றம்...! 



பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறைகளில் மாற்றம்



பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறைகளில் மாற்றம்


2027 ஆம் ஆண்டு முதல் பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சைகள் அனைத்தும் அவற்றின் வழக்கமான கால அட்டவணையின்படி நடைபெறும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவ தெரிவித்துள்ளார் .


அதன்படி பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சை கால அட்டவணையை, 2020 ஆம் ஆண்டிற்கு முந்தைய நிலைக்கு அடுத்த ஆண்டு (2027) முதல் முழுமையாகக் கொண்டுவர கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.


பழைய அட்டவணைக்கு மாறுவதற்கான ஒரு நிலைமாற்றக் காலமாக நடப்பு 2026 ஆம் ஆண்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


2027 ஆம் ஆண்டு ஜனவரியில் புதிய கல்வியாண்டைத் தொடங்குவதற்கு ஏதுவாக, இந்த ஆண்டு (2026) எஞ்சியுள்ள இரண்டு பாடசாலை விடுமுறை காலங்களும் வழக்கத்தை விட நீண்ட நாட்களுக்கு வழங்கப்படும்.


2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எவ்வித மாற்றமும் இன்றி திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் நடைபெறும். இலங்கையின் கல்வி முறைமை கடந்த சில ஆண்டுகளாக கடுமையாகப் பாதிக்கப்பட்டது.


2020 முதல் பரவிய கொவிட் 19 மற்றும் அதன் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு, போக்குவரத்து சிரமங்கள் போன்றவற்றால் பாடசாலைகள் அடிக்கடி மூடப்பட்டன.


சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா சூறாவளி உள்ளிட்ட மோசமான வானிலை பாதிப்புகளும் நாட்டின் பல பகுதிகளில் கல்வி நடவடிக்கைகளைத் தற்காலிகமாக முடக்கின.


இந்தச் சவால்களைக் கடந்து, கல்வி முறையைச் சீரமைப்பதன் மூலம் மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை மீண்டும் ஒரு நிலையான பாதைக்குக் கொண்டு வர முடியும் என கல்வி அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.



அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கும் தெளிவூட்டல்


பல்லின சமூகம் வாழும் எமது நாட்டில் காலாகாலமாக அறிவுபூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும், கௌரவமாகவும் ஏனைய சமூகங்களுடன் இணைந்து வாழும் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் அதனைக் கடைப்பிடித்து நமது உயர் கௌரவத்தைக் காத்து நடந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம் என இவ்வருட ஹஜ்ஜுப் பெருநாள் காலத்தில் உழ்ஹிய்யா (குர்பானி) கிரியையை  நிறைவேற்றுவது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) முஸ்லிம் சமூகத்திற்கு தெளிவூட்டல் ஒன்றை வழங்கியுள்ளது.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU)வின் பதில் தலைவர் 

அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். ரிழா மற்றும் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம். அர்கம் நூராமித் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


இலங்கையில் அமுலில் உள்ள 1971ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விடுமுறைச் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகளின்படி மிருகங்களை அறுத்தல் மற்றும் மாமிச விற்பனையில் ஈடுபடல் தொடர்பான கட்டுப்பாடானது, குறிப்பாக பௌர்ணமி போயா நாளுக்கு மட்டுமே பொருந்தும். அது மே மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை வருகிறது. அந்தத் தினத்துக்கு முன்போ அல்லது பின்போ உழ்ஹிய்யாக் கடமையை செய்வதற்கு சட்ட ரீதியான தடை எதுவும் இல்லை. எனினும், கலாசார ரீதியாக வெசாக் காலம் போயா நாளுடன் விரிவுபடுத்தப்படலாம்.


ஹஜ்ஜுப் பெருநாளுடன் தொடர்புடைய சமய கிரியைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடந்த 23.04.2026ஆம் திகதி கடித மூலமாக ஜனாதிபதி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சருடன் முறையாக தொடர்பு கொண்டுள்ளது.


இதேவேளை, அரசாங்கத்தின் மிக முக்கிய முஸ்லிம் பிரதிநிதியான, சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் அவர்கள் கடந்த 26.04.2026 இல், போயா நாள் தவிர்ந்த பிற நாட்களில் உழ்ஹிய்யாக் கடமையைச் செய்வதற்கு எவ்வித தடையும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.


மேலும், அனைத்து சமூகங்களின் மத உரிமைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் மதிக்கப்படும் என்றும், அதே சமயம் அமைதியான சகவாழ்வு மற்றும் தேசிய ஒற்றுமை முக்கியம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜுப் பெருநாள் காலங்களில் போயா தினம் வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்; அந்தந்த காலங்களில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி போயா தினம் தவிர்ந்த தினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ததை ஞாபகப்படுத்துவதுடன், இம்முறையும் உழ்ஹிய்யா கிரியைகளை சுமுகமாக செய்வதற்கு எம்மாலான சகல முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் என்பதையும் தெரிவிக்கிறோம்.


எனவே, பல்லின சமூகம் வாழும் எமது நாட்டில் காலாகாலமாக அறிவுபூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும், கௌரவமாகவும் ஏனைய சமூகங்களுடன் இணைந்து வாழும் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் அதனைக் கடைப்பிடித்து நமது உயர் கௌரவத்தைக் காத்து நடந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.


இன்ஷா அல்லாஹ், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தொடர்ந்தும்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தேவையான தகவல்களை முஸ்லிம் சமூகத்துக்கு அவ்வப்போது தெரிவிக்கும் என்பதையும் அறியத்தருகின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வியாபாரம் செய்யும் அனைவரும் VAT செலுத்த வேண்டும்..!


இலங்கையில் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) தொடர்பான முக்கிய திருத்தங்களை உள்ளடக்கிய புதிய சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 


2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க VAT சட்டத்தைத் திருத்தும் இந்த முன்மொழிவு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ளது.


வரி விகித உயர்வு

புதிய திருத்தங்களின் கீழ், நிதிச் சேவைகளுக்கு விதிக்கப்படும் VAT விகிதம் 18% இலிருந்து 20.5% ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. 


இந்த மாற்றம் 2026 ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.


VAT பதிவு எல்லை மாற்றம்


VAT பதிவுக்கான வருடாந்த விற்றுமுதல் எல்லைகளும் திருத்தப்பட்டுள்ளன.


ஒரு வரிக்குட்பட்ட காலப்பகுதியில் 9 மில்லியன் ரூபாயை மீறும் விற்றுமுதல் அல்லது வருடாந்த மொத்த விற்றுமுதல் 36 மில்லியன் ரூபாயை மீறும் வணிகங்கள் 2026 ஜூலை 1 முதல் கட்டாயமாக VAT பதிவு செய்ய வேண்டியுள்ளது.


(ஒரு நாளைக்கு 500 ரூபா பொறுமதியான 200 சோறு பார்சல்ககளை  விற்கும் சிறிய  ஹோட்டல்கள் முதல் ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் வியாபரம் செய்யும் சில்லறை கடைகளிடமும் இனி வெட் வரி செலுத்த வேண்டும்.)


டிஜிட்டல் சேவைகள் மீது கவனம்


மின்னணு தளங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கான VAT விதிமுறைகள் 2026 ஜூலை 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், டிஜிட்டல் சேவைகள் பதிவு மற்றும் வரி செலுத்துதல் தொடர்பான புதிய சட்ட அத்தியாயமும் சேர்க்கப்பட்டுள்ளது.


வரி நிர்வாகத்தில் மாற்றங்கள்


வரி வசூல் மற்றும் கணக்கியல் செயல்முறைகளை மேம்படுத்துவதற்காக விற்பனை முனைய இயந்திரங்கள் (POS) பயன்பாட்டுக்கு புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 


மேலும், VAT கணக்கீட்டின் போது உள்ளூராட்சி மன்றங்கள் வசூலிக்கும் பொழுதுபோக்கு வரியை கழிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கடுமையான தண்டனைகள்


தவறான தகவல்களை வழங்கி வரி மீளப் பெற முயற்சிக்கும் நபர்களுக்கு எதிரான அபராதங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.


SVAT முறை நீக்கம்


முன்னர் நடைமுறையில் இருந்த எளிமையாக்கப்பட்ட VAT (SVAT) முறைமை நீக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் புதிய திருத்தங்களில் அடங்கியுள்ளன.


இந்த திருத்தங்கள், வரி வசூல் திறனை மேம்படுத்துவதோடு, நாட்டின் பொருளாதார மேலாண்மையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 

தந்தையின் தாக்குதலில் மகள் உயிரிழப்பு..!


பலாப்பழம் பறித்தது தொடர்பாக ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து, மகளை இரும்புத் தடியால் தாக்கிப் படுகொலை செய்த தந்தை ஒருவரைக் களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 


இச்சம்பவத்தில் வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த திலினி மதுஷானி எனும் 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்துள்ளார்.


மகளும் தந்தையும் களுத்துறை வடக்கு பிரதேசத்தில் அருகருகே உள்ள இரு வீடுகளில் வசித்து வந்துள்ளனர். 


எனினும், இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக, மகள் தனது கணவன் மற்றும் சிறு மகளுடன் வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள வாடகை வீடொன்றுக்குச் சென்று வசித்து வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


தந்தை, மகள் முன்னர் வசித்த களுத்துறை வடக்கு காணியிலுள்ள பலா மரத்தில் இருந்து பழம் ஒன்றைப் பறித்துள்ளார். 


இது குறித்து அயலவர் ஒருவர் மகளுக்குத் தொலைபேசி ஊடாகத் தகவல் வழங்கியுள்ளார். 


அதனையடுத்து, மகள் அந்த இடத்திற்கு வந்து தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


இதன்போது, சந்தேகநபரான தந்தை வீட்டிலிருந்த இரும்புத் தடியால் மகளின் தலையில் தாக்கியுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


தாக்குதலை நடத்திய பின்னர், சந்தேகநபர் தான் பயன்படுத்திய இரும்புத் தடியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.



குளிப்பதை வீடியோ பதிவு செய்த --- 

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கைது...! 



கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்து நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் வைத்தியர்கள் சிலர் குளியலறையில் நீராடிக்கொண்டிருந்த போது, அவர்களைத் தமது கைபேசிகள் மூலம் காணொளி பதிவு செய்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியின் (U-19) உறுப்பினர்கள் என நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


சந்தேகநபர்கள் ஆண்களின் காணொளிகளையும் இவ்வாறு பதிவு செய்துள்ளதோடு, அவ்வாறு பெறப்பட்ட காணொளிகள் இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 


கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.




பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறைகளில் மாற்றம்...! 



No comments

Theme images by fpm. Powered by Blogger.