நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.........!

         

நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.........! 



நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.........!





நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.........! 


நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளது. டெங்கு தாக்கம் அதிகமுள்ளதாக 42 அதிக அவதானம்மிக்க வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27465 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 14 டெங்கு மரணங்கள் சம்பவித்துள்ளன.


கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் 5930 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


மர்ம நபரால் மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு...! 


காலி, தங்கேதர பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


காவல்துறையினரின் தகவல்படி, படுகாயமடைந்த நிலையில் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.


பாதிக்கப்பட்டவர் மற்றும் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர்கள் குறித்த விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.


தங்கேதர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


காரில் வந்த மர்ம நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னரே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு


நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 10 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும், 


தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.


அனுராதபுரத்தின் இராஜாங்கனை நீர்த்தேக்கம், பதுளை மாவட்டத்தின் சொரபொர நீர்த்தேக்கம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரவில, லுணுகம்வெஹெர, வெஹெரகல நீர்த்தேக்கங்கள், குருநாகல் மாவட்டத்தின் மாகல்ல, 


தெதுறு ஓயா நீர்த்தேக்கம் மற்றும் கண்டி மாவட்டத்தின் வாமெடில்ல, நாலந்த நீர்த்தேக்கங்களும் மொனராகலை மாவட்டத்தின் அலிகொட்டஆர நீர்த்தேக்கமும் இவ்வாறு வான்பாய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


கலா ஓயா வடிநிலப் பகுதியில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, அந்த வடிநிலத்தில் அமைந்துள்ள இராஜாங்கனை, தேவஹுவ, வெமெடில்ல ஆகிய நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்து வருவதாக எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் மேலும் தெரிவித்தார்.


இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளனதுடன், அவற்றின் ஊடாக வினாடிக்கு 18,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.


அதேபோல், கிரிந்தி ஓயா வடிநிலப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அந்த வடிநிலத்திலுள்ள லுணுகம்வெஹெர, திஸ்ஸவாவி, வீரவில, யோதவாவி மற்றும் அலிகொட்டஆர ஆகிய நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாகப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.


லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதுடன், வினாடிக்கு 7,100 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது.


மேலதிகமாக, வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 2,400 கன அடிக்கும் அதிகமான நீர் மாணிக்க கங்கைக்குள் வெளியேற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


வான்பாயும் நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களில் அங்கமுவ, போபுருஎல்ல, மஹாசியம்பலாங்கமுவ, சத்தாதிஸ்ஸ, மாலிம்பொத்த மற்றும் மருதமடு ஆகிய நீர்த்தேக்கங்கள் அடங்கும்.


தொடர்ந்து பெய்யும் மழையினால் வான்கதவுகள் ஊடாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வரும் நாட்களில் மாற்றமடையக்கூடும் என்பதால், 


நீர்த்தேக்கங்களை சூழவுள்ள பகுதிகளிலும் தாழ்நிலப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.



தனியார் துறையைப் பயன்படுத்த அரசாங்கம்


யூரியா உரம் விநியோக நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி துஷார விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.


இதன்படி, இந்த வாரத்திற்குள் உரப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும், விவசாயிகள் உணர்வுப்பூர்வமானவர்கள் என்பதால் நாட்டில் உரத் தட்டுப்பாடு நிலவுவதாகப் பொய்யான மாயையை உருவாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


நாட்டில் தற்போது போதுமான அளவு உரம் இருப்பதாகவும், பெரும் போகத்திற்குத் தேவையான உரத்தை இறக்குமதி செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்து முடித்துள்ளதாகவும் துஷார விக்ரமாராச்சி மேலும் தெரிவித்தார்.


198 வெளிநாட்டு பிரஜைகள் கைது..! 


தென் மாகாணத்தின் மூன்று வெவ்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, கணினி குற்றங்களில் ஈடுபட்ட 198 வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மிதிகம, ஹிக்கடுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.


இதன்போது, இந்தியர்கள் 174 பேரும் நேபாளிகள் 24 பேருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்தமை, சுற்றுலா விசாவில் வருகை தந்து சட்டவிரோதமாக தொழில் புரிந்தமை, வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை உடமையில் வைத்திருந்தமை, 


கணினி குற்றங்கள் சட்டத்தின் கீழ் வரும் பாரிய மோசடிகளில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் குறித்து மிதிகம மற்றும் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



 தலையை துண்டித்து, சிலையொன்றில் தொங்கவிட்டு சென்ற நபர்கள்..! 


நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதோடு, அவரது தலை துண்டிக்கப்பட்டு மாமடல சந்தியில் உள்ள சிலையொன்றில் தொங்கவிடப்பட்டுள்ளதாக, 


அம்பலாந்தோட்டை பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி தெரிய வருகிறது.


உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ள தகவலின்படி, 


நேற்று நள்ளிரவு மூன்று நபர்கள் அவரது வீட்டிற்கு வந்து கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, அவரைக் கொலை செய்து தலையைத் துண்டித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.


மாமடல பகுதியில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபர், 


பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


ஹம்பாந்தோட்டை பிரதம நீதவான் வை.ஆர்.பி. நெலும்தெனிய முன்னிலையில் மரண விசாரணை நடத்தப்பட்டது. 


அத்துடன், உயிரிழந்தவரின் வீட்டிற்கு முன்னால் இருந்து துப்பாக்கி ஒன்றையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.


தாக்குதல் இடம்பெற்ற போது, உயிரிழந்தவரின் மனைவி, இரு பிள்ளைகள் மற்றும் மாமா ஆகியோர் வீட்டிலிருந்தனர்.


தாக்குதலின் போது ஏற்பட்ட மோதலில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



வானிலை முன்னறிவிப்பு..! 


இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அந்தத் திணைக்களம் இன்று (12) மாலை 4 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதன்படி, இந்தத் தொகுதி அடுத்த சில நாட்களில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் தாக்கம் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அனுராதபுரம், திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.


இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அந்தத் திணைக்களம் இன்று (12) மாலை 4 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதன்படி, இந்தத் தொகுதி அடுத்த சில நாட்களில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதற்கமைய, மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அனுராதபுரம், திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.



நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.........! 



No comments

Theme images by fpm. Powered by Blogger.