புரட்சியை கிளப்பும் புதிய தொழில்நுட்பம்........!

           

புரட்சியை கிளப்பும் புதிய தொழில்நுட்பம்........! 



புரட்சியை கிளப்பும் புதிய தொழில்நுட்பம்........!





புரட்சியை கிளப்பும் புதிய தொழில்நுட்பம்........!  


நாட்டின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக அதிக அறுவடை தரும் ஒரு வணிகத் துறையாக மாற்றியமைக்கும் நோக்கில், ஜனாதிபதியால் 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 25 மில்லியன் ரூபா நிதியின்கீழ் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கித்சிறி தர்மப்பிரிய தெரிவித்துள்ளார்.


இதுவரை பின்பற்றப்பட்ட பாரம்பரிய முறைக்கு மாற்றாக, இறால் குஞ்சுகளை (Post Larvae) நேரடியாக நீர்நிலைகளில் விடுவிக்காமல், அவற்றை நீர்த்தேக்கங்களுக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ள கூடுகளில் ஒரு மாதம் வரை வளர்த்து (Pre-growing), அதன் பின்னரே நீர்நிலைகளுக்குள் விடுவிப்பது இப்புதிய தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமாகும். 


இதற்கமைய, நன்னீர் இறால் வளர்க்கப்படும் பிரதான நீர்த்தேக்கங்களை மையப்படுத்தி, ஆராய்ச்சி மட்டத்திலான 25 கூடுகளை நிறுவுவதற்கு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 


இப்புதிய முறைமை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்துத் தலைவர் மேலும் தெரிவிக்கையில்: 


"நாங்கள் ஏற்கனவே கிரித்தலை குளம், அனுராதபுர மாவட்டத்தின் இரண்டு குளங்கள் மற்றும் வட மாகாணத்தின் இரண்டு குளங்களில் இந்த ஆராய்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளோம். 


முன்னைய முறையில், ஒரு கிலோ இறால் அறுவடையைப் பெறுவதற்கு சுமார் 300 முதல் 400 வரையான குஞ்சுகளை நீர்நிலைகளில் விட வேண்டியிருந்தது.


ஆனால், இந்த புதிய 'கூடு முறை' மூலம் ஒரு மாத கால வளர்ச்சியின் பின்னர் சுமார் 1.5 - 2 அங்குல நீளம் வரை வளர்ந்த நிலையில் இறால்களை விடுவிப்பதால், 100 குஞ்சுகளைக் கொண்டே ஒரு கிலோ இறால் அறுவடையைப் பெற முடியும் என எதிர்பார்க்கிறோம். 


இது நன்னீர் இறால் வளர்ப்புத் துறையின் வினைத்திறனை மூன்று மடங்காக அதிகரிக்கும் ஒரு புரட்சிகரமான மாற்றமாகும்." 


இவ்வேலைத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனியார் துறையினரும் மாகாண சபைகளும் இதில் ஆர்வத்துடன் பங்களிக்கத் தொடங்கியுள்ளனர். 


குறிப்பாக, நன்னீர் இறால்களைக் கொள்வனவு செய்யும் வர்த்தகர்கள், இறால் குஞ்சுகள் மற்றும் அவற்றுக்கான உணவுகளை வழங்க முன்வந்துள்ளனர். 


இப்புதிய தொழில்நுட்பத் தலையீட்டின் மூலம் நன்னீர் மீனவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நுகர்வோருக்கு அதிகளவிலான நன்னீர் இறால் உற்பத்திகளை வழங்கவும் முடியும் என தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை எதிர்பார்க்கின்றது.



வேலைக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்


ஒழுக்கக் கட்டுப்பாடு மற்றும் நடத்தைப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரிடம், அவர் பணிக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அவரது கழுத்தில் வாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்து, தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த பெண் பொலிஸ் சார்ஜன்ட் நேற்று (14) தனது கணவருடன் கொஸ்கம, பொல்லதாவ பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, 


முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மூவரில் ஒருவர் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி வந்து, பெண் பொலிஸ் சார்ஜன்ட்-இன் கழுத்தில் வாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்து, அவர் அணிந்திருந்த அரை பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.


பெண் பொலிஸ் சார்ஜன்ட் பொலிஸில் அளித்த புகாரின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,  சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.



 தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது..! 


ஆகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், 


இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கான எரிபொருள் தேவைக்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் ஆறாவது கூட்டம் இன்று (15) கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற போது, அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளதாக அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன்போது, வருங்காலத்தில் எரிபொருள் சலுகைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும், தற்போது நடைமுறையிலுள்ள இலக்கத் தகடுகளின் ஒற்றை மற்றும் இரட்டை (Odd-Even) முறையை நீக்கி, QR குறியீட்டின் கீழ் எரிபொருளை வழங்குதல் மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டை (Quota) அதிகரிப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.


மின்சாரப் பயன்பாட்டை நிலையான முறையில் முகாமைத்துவம் செய்வதை நோக்கமாகக் கொண்டு, ‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், 


மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தும் வீடுகளைத் தெரிவு செய்து மாணவர்களை மதிப்பீடு செய்தல் மற்றும் மாணவர்கள் ஊடாக மின்சார சேமிப்பு முறைகளை ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.


மேலும், எதிர்கால கட்டுமானங்களின் போது ‘பசுமை கட்டிடம்’ (Green Building) எனும் எண்ணக்கருவை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.


அரசாங்கம் வலுசக்தித் துறையை முறையாக முகாமைத்துவம் செய்வதன் காரணமாக, மக்கள் தற்போதைய நெருக்கடி குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது சுட்டிக்காட்டினார்.


ஏனைய நாடுகளில் எரிபொருள் வரிசைகள் மற்றும் மின்வெட்டு ஏற்பட்ட போதிலும், தமது அரசாங்கம் இந்த நெருக்கடியை சரியாக முகாமைத்துவம் செய்துள்ளதாக அவர் வலியுறுத்தினார்.


எனினும், இந்த நெருக்கடி இன்னும் முழுமையாக முடிவுக்கு வராததால், இது குறித்து நாம் தொடர்ச்சியான அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும், நிலையான வலுசக்தி முகாமைத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


அத்துடன், எதிர்வரும் வெசாக் வாரத்தில் தடையின்றி மின்சாரத்தை வழங்குவது அவசியம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.



வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது --- 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்..! 


வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் இன்று (16) முதல் அமலுக்கு வரும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு விதிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.


இருப்பினும், மே 15 அல்லது அதற்கு முன்னர் திறக்கப்பட்ட நாணய கடிதங்களுக்கு இந்த கூடுதல் கட்டணம் பொருந்தாது என நிதியமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.



சீரற்ற காலநிலையால் 4,000க்கும் அதிகமானோர் பாதிப்பு..! 


தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக,  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


கடந்த 10ஆம் திகதி முதல் இன்று சனிக்கிழமை (16) வரையிலான காலப்பகுதியிலேயே இந்த சேதங்கள் பதிவாகியுள்ளன.


தொடர்ந்து வரும் அனர்த்த நிலைமையால் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, வழமை போன்று அதிகளவிலான பகுதிச் சேதங்கள் களுத்துறை மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன.


- களுத்துறை: 78 வீடுகள்


- மட்டக்களப்பு: 25 வீடுகள்


- இரத்தினபுரி: 12 வீடுகள்


- காலி: 06 வீடுகள்


- கொழும்பு: 05 வீடுகள்


- மொனராகலை: 04 வீடுகள்


- யாழ்ப்பாணம்: 04 வீடுகள்


- கம்பஹா: 03 வீடுகள்


- அனுராதபுரம்: 02 வீடுகள்


- அம்பாந்தோட்டை: 02 வீடுகள் மாவட்ட ரீதியாக பகுதியளவில் சேதமடைந்துள்ளன.


இந்த மோசமான வானிலை காரணமாக இதுவரை 4,099 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.


நாட்டின் 48 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 1,263 குடும்பங்களைச் சேர்ந்த 4,099 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியவர் கைது


இன்று (16) காலை ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில், ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


பேலியகொட பொலிஸாரினால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


தண்டவாளத்தில் கழற்றப்பட்ட ஆணிகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சென்ற நபர் இவரே என்பது பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



வெளியேறும் மருத்துவ நிபுணர்கள்  ----   இலங்கைக்கு பேரிடியாகும் நிலைமை - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


இலங்கையின் மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை மீண்டும் அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான டாக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.


இலங்கையில் பணியாற்றுவதற்குப் பதிலாக இளம் மருத்துவர்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்வதால் மருத்துவமனைகளில் சுகாதார சேவைகளைப் பராமரிப்பதில் பெரும் சவால்களை உருவாக்கி வருகின்றதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மயக்க மருந்து நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் வெளிநாட்டு மருத்துவத் தேர்வுகளில் தகுதி பெற்ற இளம் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறுவது, நாட்டில் தங்கியிருக்கும் மருத்துவர்கள் மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளது.


இதன் விளைவாக, பலர் இப்போது தங்களின் வழக்கமான பணிச்சுமைக்கு அப்பாற்பட்ட கூடுதல் கடமைகளை ஏற்க வேண்டியுள்ளது. 


மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை, கொழும்பு தேசிய மருத்துவமனை போன்ற முக்கிய நிறுவனங்கள் உட்பட, சுகாதார சேவைகளின் தரம் மற்றும் செயல்திறனை இப்போது பாதித்து வருகிறது.


ஒரு மருத்துவருக்கு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இலவச சுகாதார அமைப்பின் கீழ் சரியான நேரத்தில் மற்றும் தரமான சிகிச்சையைப் பெறுவதில் பொதுமக்கள் பெருகிய முறையில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்


முன்னர் நாட்டை விட்டு வெளியேறிய சில மருத்துவர்களும் நிபுணர்களும் திரும்பி வர விரும்புவதாகக் கூறப்பட்டாலும், பொது சேவை ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றால் மறுநியமனங்களில் ஏற்படும் தாமதங்கள் அவர்களின் திரும்புதலைத் தடுத்துள்ளன.


இந்த நடவடிக்கையானது சில தொழில் வல்லுநர்கள் அரச வேலையில் சேராமல், வெளிநாடுகளில் தங்கிவிடவோ அல்லது தனியார் துறை வேலைக்கு மாறிவிடவோ வழிவகுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 




புரட்சியை கிளப்பும் புதிய தொழில்நுட்பம்........! 


No comments

Theme images by fpm. Powered by Blogger.