ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு.......!

             

ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு.......! 



ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு.......!





ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு.......! 


2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டில் இதுவரையில் பெயர்கள் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் பதிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியவர்கள் உடனடியாக அவர்களுக்குரிய கிராம உத்தியோகத்தர்களை தொடர்புகொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.


அதன்படி,பதிவேட்டில் இதுவரை பெயர் சேர்க்கப்படாத தகுதியுடைய நபர்கள், தற்போதைய பதிவுகளில் முகவரி, பெயர் அல்லது தேசிய அடையாள அட்டை விபரங்களில் மாற்றங்கள் உள்ளவர்கள் 2009 பெப்ரவரி 01 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்த, புதிய வாக்காளராகப் பதிவு செய்யத் தகுதியுடையவர்கள் ஆகியோர் தத்தமது விபரங்களைச் சரிபார்ப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் தகுதியுடையவர்களாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது



சட்டவிரோத மதுபான விற்பனையை பொலிஸார் சுற்றி வளைக்க சென்ற போது 


அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் நேற்றிரவு (17) கைதுசெய்யச் சென்றபோது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


சந்தேகநபர் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளார். அதன்பின்னர் சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார்.


இதன்போது, நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகநபரைக் கைதுசெய்ய முற்பட்டபோது, சந்தேகநபர் அந்த உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோதே குறித்த துப்பாக்கிசூடு இடம்பெற்றுள்ளது.


இச்சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



நினைவு நாள் இன்று!


2009 இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களும், அதிலிருந்து மீண்டவர்களும் அனுபவித்த இன்னல்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. 


இனவெறியை எதிர்த்து, தன்னாட்சி உரிமைக்காக போராடிய ஈழ தமிழர்களை கொன்று குவித்து, போர் முடித்து வைக்கப்பட்ட நாள் தான் மே.18. நெருக்கடியான போர் சூழலில் தமிழ் மக்களின் உயிரை காப்பாற்றியது, உப்பில்லாத அரிசி கஞ்சிதான். 


எனவே முள்ளிவாய்க்காலில் ஆண்டு தோறும் இந்த சோகத்தை நினைவுகூறும் விதமாக கஞ்சி காய்ச்சி விநியோகிக்கப்படும். அந்த வகையில் மே.12 தொடங்கி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று வரை கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 


அதன்படி, வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படவுள்ளது.


இதற்கமைய, மதுபான சாலைகள் உட்பட வர்த்தக நிலையங்களை மூடி நிறைவேந்தல் நிகழ்வினை சிறப்புற நிகழ்த்துவதற்கு ஒத்தாசை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்தினர் அரைகூவல் விடுத்துள்ளனர்.


 ▪️பின்னணி


1983 முதல் 2009 வரையிலான உள்நாட்டு ஆயுத மோதலின் போது, ​​இலங்கை அரசாங்கப் படைகளும் அவற்றின் ஆயுதமேந்திய அரசியல் கூட்டணிகளும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (LTTE) தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிராக சட்டத்திற்குப் புறம்பான கொலைகளையும், கட்டாயக் காணாமல் போதல்களையும், சித்திரவதைகளையும் செய்தன. 


மேலும்,சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மோதலின் இறுதி மாதங்களில் உச்சத்தை அடைந்தன. குறிப்பாக 2009 மே மாதத்தில், போரிடும் தரப்பினருக்கு இடையில் சுமார் 300,000 இடம்பெயர்ந்த பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். 


இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் என்ற சிறிய கிராமத்தில்தான் இலங்கைப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதித் தாக்குதல் நடைபெற்றது. 


ஐ.நா. மதிப்பீடுகளின்படி, இந்தத் தாக்குதலில் குறைந்தது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.


அதனை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று, முள்ளிவாய்க்காலில் நடைபெறும் ஒரு நினைவு நிகழ்வானது, போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரவும், நீதியையும் பொறுப்புக்கூறலையும் கோரவும், போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை ஒன்றிணைக்கிறது.


ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று, 1983 முதல் 2009 வரை இலங்கையில் நடந்த படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, டொரொன்டோ நகரில் உள்ள தமிழ் சமூகத்தினர் “முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை” அனுசரிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றிணைக்கும் இந்த நிகழ்வு, சமூகத்தின் பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்படுகிறது. 


மேலும், தமிழ் புலம்பெயர் சமூகம் வசிக்கும் உலகின் பல்வேறு நகரங்களிலும் இந்த நிகழ்வு நினைவு கூரப்படுகின்றது.



பிரபல ஹோட்டலுக்கு சீல் வைப்பு


மட்டக்களப்பில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றை இரண்டு வார காலத்துக்கு சீல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டுட்டுள்ளது.


மேலும் குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 


மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


சுகாதார ஆய்வாளர்களால் மேற்குறித்த ஹோட்டல் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்னரே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த ஹோட்டலுக்கு இதற்கு முன்னர் இரு தடவைகள் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.




சவூதி அறிவிப்பு!



தமது வான்பரப்புக்குள் பிரவேசித்த மூன்று ட்ரோன்களை இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. குறித்த ட்ரோன்கள் ஈராக் வான்வெளியில் இருந்து நுழைந்ததாகக் சவூதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது. 


தமது இறையாண்மை மற்றும் பாதுகாப்பை மீறும் எந்தவொரு முயற்சிக்கும் பதிலடி கொடுக்க தேவையான செயல்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக சவூதி எச்சரிக்கை விடுத்துள்ளது.  கடந்த ஏப்ரல் மாதம் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து ஈரான் மோதலின் போது நடந்த விரோதப் போக்குகள் பெருமளவில் குறைந்துள்ளன. 


இருப்பினும் ஈராக்கிலிருந்து சவூதி அரேபியா மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளை நோக்கி ட்ரோன்கள் ஏவப்பட்டு வருகின்றன. ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள ஒரு அணுமின் நிலையத்தை இலக்கு வைத்து நேற்று (17) ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
 

இதனால் கதிரியக்கப் பாதுகாப்பு அளவுகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், எவருக்கும் இந்த தாக்குதலில் காயம் ஏற்படவில்லை என்றும் ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். 


இந்தத் தாக்குதலின் பின்னணி குறித்து விசாரித்து வருவதாகவும், இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு முழு உரிமை உண்டு என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு.......! 





No comments

Theme images by fpm. Powered by Blogger.