பயணம் செய்யும்போது மிக அவதானமாக இருந்து கொள்ளுங்கள்.........!

பயணம் செய்யும்போது மிக அவதானமாக இருந்து கொள்ளுங்கள்.........!
பாதுக்கை வட்டரெக்க - பெருகட்டிய வீதியின் பெருகட்டிய பகுதிக்கு அருகிலுள்ள பாழடைந்த பகுதியொன்றில்,
இரவு வேளையில் வீதியின் குறுக்கே கம்பிகளை இழுத்துக்கட்டி, அந்த வழியாகச் செல்லும் மோட்டார் சைக்கிள்களை வீழ்த்தி கொள்ளையடித்த சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை இன்று (18) கிராம மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், இவ்வாறு வீதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கம்பியில் சிக்கி இளைஞர் ஒருவரின் கழுத்துப் பகுதி வெட்டப்பட்டு காயமடைந்திருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், இச்சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுற்றுலாத்துறை வருவாயில் வீழ்ச்சி..!
2026 ஏப்ரல் மாதத்தில் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 157.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், 2025 ஏப்ரல் மாதத்தின் சுற்றுலா வருமானமான 256.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், இது 38.8% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஏப்ரல் மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 135,643 ஆகும். அதேநேரம், 2025 ஏப்ரல் மாதத்தில் 174,608 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையின் ஊடாக 256.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயாக ஈட்டப்பட்டிருந்தது.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 876,277 ஆக பதிவாகியுள்ளதுடன், இக்காலப்பகுதியில் ஈட்டப்பட்ட மொத்த சுற்றுலா வருவாய் 1,111 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இது, 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 896,884 சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் 1,379 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயுடன் ஒப்பிடுகையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.3% உம், சுற்றுலா வருவாய் 19.4% உம் வீழ்ச்சியடைந்துள்ளமையை காட்டுகிறது.
டித்வாவில் மாயமான முச்சக்கரவண்டி
டித்வா புயல் நிலைமை காரணமாக ஊவா பரணகம, மஸ்பன்ன நகருக்கு அருகில் மண் சரிவில் சிக்கிப் புதையுண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று 171 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஸ்பன்ன நகரின் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் சில வர்த்தக நிலையங்கள் மீது மண்மேடு மற்றும் கற்பாறைகள் வீழ்ந்து மூடியது.
அப்பகுதியில் காணப்பட்ட அதிக ஆபத்து காரணமாக மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் மிகவும் மந்தகதியிலேயே இடம்பெற்றதுடன், தற்போதைய நாட்களிலும் அப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு மண் மற்றும் கற்பாறைகளை அகற்றும் போதே இந்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வலப்பனை டிப்போவில் பணிபுரியும் பேருந்து நடத்துனர் ஒருவருக்குச் சொந்தமானது எனவும் கூறப்படுகிறது.
அன்று இரவு இந்த பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் தனது முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டுச் சென்ற வேளையிலேயே, இந்த துரதிர்ஷ்டவசமான நிலையை அவர் எதிர்கொண்டுள்ளார்.
3,000யை கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை..!
ஈரான் போருக்கு இடையே அண்டை நாடான லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அங்கு இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேலின் இந்த நடவடிக்கையில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
கடந்த மார்ச் 2 ஆம் திகதி முதல் நடந்து வரும் இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் பலியானோரின் எண்ணிக்கை 3,000யை கடந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
நேற்று (18) அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இஸ்ரேலிய வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் இதுவரை 3,020 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 9,273 பேர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் 292 பெண்களும் 211 குழந்தைகளும் அடங்குவர்.
அண்மையில் அமெரிக்கா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இருப்பினும் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
லெபனானில் ஏற்பட்டுள்ள இந்த மோதலால் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை இழந்து, தலைநகர் பெய்ரூட் கடற்கரையோரங்களிலும், வீதிகளிலும் கூடாரங்கள் அமைத்து தஞ்சம் அடைந்துள்ளனர்.
குறிப்பாக லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லா பதில் தாக்குதலில் இதுவரை 20 இஸ்ரேலிய வீரர்கள், 2 இஸ்ரேல்யர்கள் மற்றும் ஐநா அமைதிப்படையை சேர்ந்த 6 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் வாஷிங்டனில் இஸ்ரேல் மற்றும் லெபனான் அரசுக்கு இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி அமுலுக்கு வந்த தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை, ஜூன் மாதம் வரை மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் கடந்த 15 ஆம் திகதி ஒப்புக்கொண்டுள்ளன.
வரும் மே 29 ஆம் திகதி அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் இரு நாட்டு ராணுவ உயர்மட்ட குழுவினர் நேரடியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இதில் இஸ்ரேலிய ராணுவம் லெபனானில் இருந்து வெளியேறுவது மற்றும் ஹிஸ்புல்லாக்கள் ஆயுதங்களை கைவிடுவது உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
QR குறியீடு பற்றிய அறிவிப்பு..!
எரிபொருள் QR குறியீடு பற்றிய அறிவிப்பு
எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு முறைமை, தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (19) பாராளுமன்றத்தில் இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், எரிபொருள் நுகர்வை இயன்றவரை குறைக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
உயரும் எண்ணெய் விலை...
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (18) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை 2.44% உயர்ந்துள்ளதுடன், அதன் புதிய விலை 111.7 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் புதிய விலை 108.32 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் நிச்சயமற்ற நிலை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீதான சமீபத்திய தாக்குதல்கள் காரணமாக மீண்டும் மசகு எண்ணெய் சடுதியாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
15,000 க்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்....
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 15,000 முதல் 18,000 வரையிலான புதிய புற்றுநோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டு வருவதாக விசேட வைத்திய நிபுணர் புத்திக சோமவர்தன தெரிவித்துள்ளார்.
அவர்களில் சுமார் 2,000 பேர் குருதிப் புற்றுநோயினால் (Blood Cancer/Leukaemia) பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை (Bone Marrow Transplant) செய்துகொண்டு குணமடைந்தவர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சைக்குப் பின்னர் நோயாளர்களைப் பாதுகாப்பாகப் பராமரிக்கும் முறைகள் மற்றும் அது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆரம்பக் கட்டத்திலேயே புற்றுநோயைக் கண்டறிந்து முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம், இந்த மரணங்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க முடியும் என மருத்துவ அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
பயணம் செய்யும்போது மிக அவதானமாக இருந்து கொள்ளுங்கள்.........!
No comments