மாணவர்கள் பாடசாலை இடைவிலகல்.........!

               

மாணவர்கள் பாடசாலை இடைவிலகல்.........! 



மாணவர்கள் பாடசாலை இடைவிலகல்.........!





மாணவர்கள் பாடசாலை இடைவிலகல்.........! 


2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.இன்று (19) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


2024 இல் 711 மாணவர்களும் 2025 இல் 885 மாணவர்களும் பாடசாலைக்குச் செல்லாதவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இடைவிலகல் மற்றும் மீள்சேர்க்கை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளார்.



விடுக்கப்பட்ட எச்சரிக்கை...


நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்றும் கொந்தளிப்பான கடல் நிலையும் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.இன்று (19) பிற்பகல் 2.00 மணிக்கு இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பகுதிகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.


இதேவேளை ஏனைய கடல் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பிள்ளைகளுக்கு 10,000/- கொடுப்பனவு வழங்கத் தீர்மானம்...


வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் பகல்நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால், அவர்களுக்கு மாதமொன்றுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் பற்றிய பாராளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். 


அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் மற்றும் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சனவின் பங்கேற்புடன் அண்மையில் பாராளுமன்றத்தில் இக்குழு கூடிய போதே அதிகாரிகள் இதனைத் குறிப்பிட்டுள்ளனர். 


சிறு பிள்ளைகளைக் கொண்ட பெண்கள் வெளிநாடு செல்வதால் சமூகத்தில் எழும் பிரச்சினைகள் குறித்து தலையிடுமாறு, இதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது மேலாளருக்கு (உள்நாட்டு விவகாரங்கள்) இந்த ஆலோசனைக் குழு வழங்கியிருந்த அறிவுறுத்தல்களின் முன்னேற்றம் குறித்து வினவிய போதே அதிகாரிகள் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளனர்.




சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு...


இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 950,000-ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதன்படி, 2026 ஜனவரி 1 முதல் மே 17 வரையான காலப்பகுதியில் மொத்தம் 951,742 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.


அதிகளவிலான வருகை இந்தியாவிலிருந்து பதிவாகியுள்ளதுடன், அங்கிருந்து 221,953 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


அத்துடன் ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சீனா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.


இதேவேளை, 2026 மே 1 முதல் மே 17 வரையான காலப்பகுதியில் மொத்தம் 75,465 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இருப்பினும், 2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில், மே மாதத்தில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.



டொலரின் விலை மீண்டும் அதிகரிப்பு..! 


இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று (20) 342 ரூபாயைத் தாண்டியுள்ளது.


இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று வீத அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 332.08 ரூபாயாகவும், விற்பனை விலை 342.70 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.


நேற்று (19) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.23 ரூபாயாகவும், விற்பனை விலை 338.07 ரூபாயாகவும் பதிவாகியிருந்தது.


இதேவேளை, இன்றைய தினம் அரச வங்கி ஒன்றில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 345.20 ரூபாயாகப் பதிவாகியுள்ளதுடன், அதன் கொள்வனவு விலை 335.65 ரூபாயாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.




8 சாரதிகள் மற்றும் நடத்துனர் ஒருவர் கைது



பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவையில் ஈடுபட்டிருந்த போது, போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்ட 8 சாரதிகள் மற்றும் நடத்துனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நேற்று (19) களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகளால், தேசிய போக்குவரத்து மருத்துவ அதிகாரிகளுடன் இணைந்து இந்த கூட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட இந்த விசேட சோதனையின் போது, பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் சேவையில் ஈடுபட்டிருந்த சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், போதைப்பொருள் பாவித்து பணியில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் 35 முதல் 57 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் பயாகல, யட்டியன, தொடம்கொட, தெபுவன, மீகஹதென்ன மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



மாணவர்கள் பாடசாலை இடைவிலகல்.........! 


No comments

Theme images by fpm. Powered by Blogger.