விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை......!

    

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை......! 



விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை......!



விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை......! 



காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சூரிய ஒளியில் இருப்பது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.


களுத்துறை பொது மருத்துவமனையின் புற்றுநோயியல் நிபுணரான வைத்தியர் ஹசந்தி ஜெயலத் இதனை தெரிவித்துள்ளார்.


இந்த பாதிப்பிலிருந்து பாதுகாக்க உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிவது அவசியம் என்று கூறியுள்ளார்.


இதேவேளை, வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


சபரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில், மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு, பகல் நேரங்களில் 'எச்சரிக்கை' மட்டத்தில் நீடிக்கக்கூடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை..! 


நாட்டில் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்குக் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் ‘அம்பர்’ நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.


இன்று (06) புதன்கிழமை நண்பகல் வெளியிடப்பட்ட இந்த அவசர எச்சரிக்கை, 06/05/2026  இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாறை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இன்றையதினம் பிற்பகல் வேளையில், 


இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். அத்துடன், அப்பகுதிகளில் கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை பெய்யும் தற்காலிகக் காலங்களில், அப்பகுதிகளில் சில இடங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்ளகப் பகுதிகளில் புகலிடம் தேடுங்கள், மரங்களின் கீழ் ஒருபோதும் நிற்க வேண்டாம்.


இடிமுழக்கத்தின் போது நெல்வயல்கள், தேயிலை தோட்டங்கள், திறந்த நீர்நிலைகள் போன்றவற்றைக் தவிர்த்துக் கொள்ளவும்.


இடி முழகை்கத்தின் போது கம்பித் தொடர்புள்ள தொலைபேசி மற்றும் மின்னிணைப்பிலுள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.


துவிச்சக்கர வண்டிகள், உழவியந்திரங்கள், படகுகள் திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.
விழக்கூடிய மற்றும் விழுந்த மரங்கள், மின் கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.


அவசர உதவிகளுக்கு உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.



நால்வரின் மரண தண்டனை உறுதியானது..! 



2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்,  சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (06) உறுதி செய்தது.


மூவரடங்கிய மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தினால் விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி பிரதிவாதிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுக்களை நிராகரித்து, 
நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
இருப்பினும், இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மேலும் இரு பிரதிவாதிகளின் தண்டனையை நீக்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 


தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மூவர் ஸூம் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். 


கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு நாளில், 

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 18 வயதுடைய சிவலோகநாதன் வித்யா என்ற மாணவி கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். 


இச்சம்பவம் தொடர்பில் சுவிஸ் குமார் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் யாழ்ப்பாணம் மூவரடங்கிய மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.


2017 ஆம் ஆண்டு இவ்வழக்கை விசாரித்த யாழ். மேல் நீதிமன்றம், ஏழு பிரதிவாதிகளைக் குற்றவாளிகளாகக் கண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அந்தத் தண்டனையிலிருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி பிரதிவாதிகள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தனர். 


இம்மேன்முறையீட்டு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில், பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.



பொலிஸ்காரர் ஒருவர் பொலிஸாரால் கைது..!


பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தின் கொடுப்பனவுப் பிரிவில் பணத்திற்குப் பொறுப்பாகக் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து 3,540,415 ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.


பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவின் மேற்பார்வையில், 
பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடித்துவக்குவின் ஆலோசனையின் கீழ், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் ஆரியவன்ச இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.



 எரிவாயு விலை அதிகரிப்பு..! 


06/05/2026 முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலன் விலை 545 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  


முன்னதாக 5700 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை 6,245 ரூபாவாகும். 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலையானது 220 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  


முன்னதாக 2,280 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை 2,500 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.



விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை......! 

No comments

Theme images by fpm. Powered by Blogger.