G.C.E O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக..
G.C.E O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக..
G.C.E O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக..
G.C.E O/L சாதாரண தர 2025 (2026) பரீட்சை முடிவுகள் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும் எனத் பரிட்சைத் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
எனினும், இதுவரை பரீட்சை முடிவுகள் வெளியாகும் திகதி தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
ஆகையால் சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கவனம் மக்களே 180 ஐ தாண்டினால் 18%
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கு அமைவாக, 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீட்டுப் பிரிவினரின் மின்சாரக் கட்டணத்தை, 18 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இருப்பினும், 180 அலகுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்தும் வீட்டுப் பிரிவினரின் மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மின் உற்பத்திச் செலவு அதிகரித்தமையால் இந்த மற்றும் அடுத்த காலாண்டுகளில் சுமார் 38 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை தொகை ஏற்படுகின்றமை உள்ளிட்ட மூன்று பிரதான காரணிகளை முன்னிலைப்படுத்தி மின் கட்டணத்தை 18 சதவீதத்தால் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் நிவாரணத்தை வழங்க எழுத்துப்பூர்வமாக இணங்கியுள்ளதால், இந்த அதிகரிப்பு 5 சதவீதமான மின் நுகர்வோரை மாத்திரமே தாக்கம் செலுத்தும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டின் 95 சதவீதமான மின் நுகர்வோருக்கு இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பு பொருந்தாது என ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கையிருப்பில் வீழ்ச்சி..!
2026 ஏப்ரல் மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி மீண்டும் 7 பில்லியன் அமெரிக்க டொலர் மட்டத்திற்கு கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2026 மார்ச் மாத இறுதியில் 7,026 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு, ஏப்ரல் மாத இறுதியில் 6,759 மில்லியன் டொலர்கள் வரை குறைந்துள்ளது.
கையிருப்பு சொத்துக்களின் பிரதான அங்கமான வெளிநாட்டு செலாவணி கையிருப்பும் ஏப்ரல் மாதத்தில் 6,800 மில்லியன் டொலர்களிலிருந்து 6,505 மில்லியன் டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதேபோல், மத்திய வங்கியின் தங்க கையிருப்பும் 222 மில்லியன் டொலர்களிலிருந்து 219 மில்லியன் டொலர்களாகக் குறைவடைந்துள்ளது.
ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக 2026 பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியதுடன், அந்த மாத இறுதியில் அது 7,284 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியிருந்தது.
எவ்வாறாயினும், மார்ச் மாதத்தில் அது 7,026 மில்லியன் டொலர்கள் வரை 3.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது.
அதன்படி, ஏப்ரல் மாதத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாகவும் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
விஜய் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்...
10/05/2026 பிற்பகல் 3.15 மணிக்கு தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்க உள்ளார். விஜய்யுடன் சேர்ந்து 10 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
விஜய்க்கு பெரும்பான்மை கிடைத்த நிலையில் ஆளுநர் அர்லேகரை 4-வது முறையாக சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்த சந்திப்பின் போது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த செல்வப்பெருந்தகை, பெ சண்முகம் உள்ளிட்டோரும் விஜய்யுடன் வந்திருந்தனர். பெரும்பான்மையை காட்டியுள்ளதால் இன்று இரவே விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நாளை பிற்பகல் 3.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், விழா அரங்கில் இருக்கைகள், விளக்குகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
விஜயுடன் நாளை செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன், சத்தியபாமா, ஜேசிடி பிரபாகர், வெங்கட்ரமணன் ஆகிய 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
டொலருக்கு எதிராக இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி..!
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைக்கால அந்நியச் செலாவணி விகிதத் தரவுகளின்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய வங்கி அறிக்கைகளின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 325.53 ரூபாவாகவும், அதன் கொள்வனவு விலை 317.86 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேவேளை, ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 442.69 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன், அதன் கொள்வனவு விலை 429.44 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
G.C.E O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக..

No comments