ஏறாவூரில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் - 15 வயது அண்ணன் கைது .........!

ஏறாவூரில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் - 15 வயது அண்ணன் கைது .........!



ஏறாவூரில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் - 15 வயது அண்ணன் கைது .........!



ஏறாவூரில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் - 15 வயது அண்ணன் கைது .........!



கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஏறாவூர் 5ஆம் குறிச்சி பகுதியில் 11 வயதுடைய சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் வெளியாகியுள்ளன.


கைப்பேசியை (Mobile Phone) பயன்படுத்துவதில் அண்ணன் மற்றும் தங்கைக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதே இந்த மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.


சம்பவத்தின் போது வீட்டில் பெற்றோர் இல்லாத நிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் 15 வயதுடைய அண்ணன், தனது 11 வயது தங்கையின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அச்சிறுமி மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.


குற்றத்தை மறைக்க முயற்சி:


இதனையடுத்து, பயமடைந்த அண்ணன், உயிரிழந்த தங்கையின் உடலை இழுத்துச் சென்று குளியலறைக்குள் வைத்துள்ளார். 


அங்கு வாளி ஒன்றில் நீரை நிரப்பி, தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்தது போல் காட்டுவதற்காக அவரது தலையை அந்த நீர் வாளிக்குள் திணித்து விபத்து என ஜோடிக்க முயன்றுள்ளார்.


எனினும், உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் ஏறாவூர் பொலிஸாரின் தீவிர முதற்கட்ட விசாரணைகளின் போது சிறுவனின் இந்தச் செயல் அம்பலமாகியுள்ளது. 


இதனைத் தொடர்ந்து 15 வயதுடைய சந்தேக நபரான அண்ணன் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.




விபத்தை ஏற்படுத்திய சாரதி மதுபோதையில்



கொழும்பு - மீகொட பகுதியில் தானசாலைக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வாடகை கார் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.


சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான குறித்த சாரதி மதுபோதையில் இருந்தமை தற்போது உறுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த விபத்தில், காயமடைந்த சிறு குழந்தை உட்பட ஏழு பேர் ஹோமகம மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


ஆரம்பகட்ட விசாரணைகளில் அவிசாவெல்ல பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குறித்த வாடகை கார் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில், வரிசையிலிருந்த 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35 மற்றும் 38 வயதுடைய மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டது.


சம்பவம் தொடர்பில், காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


அத்துடன், விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



14 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்



இறக்காமம் (Eragama) பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய மௌலவி ஒருவர், 14 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொலிஸாரின் கூற்றுப்படி, இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான மௌலவி, அப்பகுதியை விட்டு தப்பியோடியிருந்த நிலையில், பின்னர் மே 20 அன்று சட்டத்தரணி ஊடாக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


அதனைத் தொடர்ந்து, அவர் 2026 ஜூன் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


பிரதான சந்தேக நபருக்கு உடந்தையாக இருந்த இறக்காமத்தைச் சேர்ந்த மற்றுமொரு 21 வயதுடைய சந்தேக நபர், இச்சம்பவம் தொடர்பாக முதலில் கைது செய்யப்பட்டு மே 09 அன்று அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


ஆரம்பத்தில் மே 20 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், பின்னர் ஜூன் 03 வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்



சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை --- பொலிஸார் தலையிட முடியாது



சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் போது பொலிஸாரின் தலையீடின்றி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சுயாதீனமாகச் செயற்படக்கூடிய வகையில் சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அத்துடன் அந்த அதிகாரசபையின் அதிகாரங்களை அதிகரித்து அது சுயாதீனமாக முடிவுகளை எடுக்கக்கூடிய வகையில் புதியதொரு சட்டமூலத்தைக் கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் நம்பகமாக தெரியவந்துள்ளது.


16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தொடர்பிலான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ள அதேவேளை அதன் சட்டப்பூர்வமான பணிகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையே பொறுப்பேற்றுள்ளது.


எனினும் அந்த அதிகாரசபைக்குக் கிடைக்கும் முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் இயக்குநரிடமிருந்து அதிகாரசபை எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற வேண்டியுள்ளது.


குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 125ஆம் பிரிவின்படி இவ்வாறு பொலிஸ் மா அதிபர் ஊடாக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கும் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும் அவசியமான பிரிவைத் திருத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.


அதிகாரசபையின் தலைவரின் உத்தரவுக்கமைய செயற்படக்கூடிய வகையிலான புதியதொரு சட்டமூலத்தைக் கொண்டு வருவதுடன் சிறுவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸாரின் ஆதிக்கத்திற்கு உட்படாத (சுயாதீனமான) பொலிஸ் பிரிவு ஒன்றை அதிகாரசபைக்குள் நிறுவுவதற்குரிய சட்ட வரைபுகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் தற்போதும் ஒரு பொலிஸ் பிரிவு இயங்கி வருகின்ற போதிலும் அது பொலிஸ் மா அதிபரின் நேரடி உத்தரவுகளுக்கு இணங்கவே செயற்படுகின்றது.


இதன் காரணமாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் விசாரணைகளை அதன் தலைவரின் அதிகாரப் பலத்தின் கீழ் மேற்கொள்வதற்குரிய திருத்தங்களைக் கொண்டு வருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



மசகு எண்ணெய்யின் விலை 


உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் இன்று (1) 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


அதன்படி, WTI ரக மசகு எண்ணெயின் விலை 2.37 சதவீதம் அதிகரித்து ஒரு கொள்கலன் 89.73 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.


அதேவேளை, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலையும் 2.16 சதவீதம் உயர்ந்து ஒரு கொள்கலன் 93.28 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது



ஏறாவூரில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் - 15 வயது அண்ணன் கைது .........!


No comments

Theme images by fpm. Powered by Blogger.