16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை ......!
16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை ......!
பிரித்தானியாவில் 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதைத் தடை செய்யப்போவதாகவும், கேமிங் மற்றும் நேரலை தளங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாகவும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
மேலும் கேமிங் மற்றும் நேரலை தளங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாகவும், இது சிறுவர்களின் உளநலப் பிரச்சினைகளை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கை உலகளவில் இதுவரை முன்வைக்கப்பட்ட மிகக் கடுமையான இணைய கட்டுப்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன
முறைப்பாடுகளை ஜூன் 30 இற்குள் சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு
முஸ்லிம் சமய பண்பாட்டிலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஹஜ் முகவர்களுடாக 2026 ஆம் ஆண்டு ஹஜ் கடமைகளை நிறைவேற்றியவர்கள் தங்கள் பயணித்த முகவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் ஏதேனும் இருப்பின்
தகுந்த ஆதாரங்களுடன் நேரடியாக, பதிவத் தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ “பணிப்பாளர்” முஸ்லிம் சமயபண்பாட்டிலுவல்கள் திணைக்களம், இலக்கம் 180, டீ.பி. ஜாயா மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு 2026.06.30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முடங்கிய பேஸ்புக், இன்ஸ்ட்டா!
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரட் மற்றும் மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்னும் சில சமூக ஊடகத் தளங்கள் உலகளாவிய ரீதியில் செயலிழந்துள்ளன.
இதனால் மில்லியன் கணக்கான பயனர்கள் தங்களது கணக்குகளைப் பயன்படுத்த முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு பதிலாக ஆண் ஒருவரின் சடலம் வழங்கப்பட்ட சம்பவம்
மொனராகலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண் ஒருவரின் உடலுக்கு பதிலாக, ஆண் ஒருவரின் உடல் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அழுபொத்த கொலனி முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் ஜனாஸாவிற்கு பதிலாக ஆண் ஒருவரின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள் உடலை சரியாக அடையாளம் காணாமல் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். எனினும் உடல் பிரேத அறையிலிருந்து ஒப்படைக்கும் போது அது துணியால் மூடப்பட்டிருந்ததாகவும், உறவினர்கள் அதனை அப்படியே பொறுப்பேற்று வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மதச் சடங்குகளின்படி அடக்கம் செய்வதற்கு முன்னர் ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்கு தயாரான போதே, அது ஒரு ஆணின் உடல் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உறவினர்கள் அந்த உடலை மீண்டும் மொனராகலை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று ஒப்படைத்ததுடன், உயிரிழந்த பெண்ணின் ஜனாஸாவை பெற்றுக்கொண்டு அன்றைய தினம் மாலையே நல்லடக்கம் செய்துள்ளனர். செய்துள்ளனர்.
IMF இடமிருந்தும் சிவப்பு எச்சரிக்கை..!
இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்கிறது.
நிபுணர்கள் எச்சரிக்கை. இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும்,
அதற்கான பல அறிகுறிகள் தற்போதைய பொருளாதாரச் செயற்பாடுகளில் ஏற்கனவே தென்படுவதாகவும் நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அடுத்த வருடத்தில் (2027) இலங்கை பொருளாதாரம் கடுமையான நெருக்கடிக்குள்ளாகும் என்றும்,
நாடு ஏற்கனவே கடுமையான வெளிநாட்டு நாணய மாற்று அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்ததுடன், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கமும் மத்திய வங்கியும் நாணயக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியும் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், உள்நாட்டு வெளிநாட்டு நாணய மாற்று சந்தையில் டாலர்களை விற்பனை செய்வதன் மூலம் ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி முயற்சித்த போதிலும்,
அதுவொரு நிலையான தீர்வாகாது என்றும் அந்த நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.2022 ஆம் ஆண்டில் நாடு வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போதிலும்,
அதிலிருந்து முறையான பாடங்களைக் கற்றுக்கொண்டு,
நிலையான முறையில் வெளிநாட்டு நாணய வருவாய் வழிகளை அதிகரிப்பதற்கான உத்திகளில் கவனம் செலுத்தவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டமொன்றை நிறைவு செய்துகொண்டிருக்கும் நிலையிலும், நாடு மீண்டும் ஒருமுறை வெளிநாட்டு நாணய அழுத்தத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் நிலைத்தன்மை (வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன்) அடிப்படையில் நாடு அதிக ஆபத்தில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியமே தனது சமீபத்திய மறுஆய்வு அறிக்கையின் மூலம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
2027 மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டம் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில், பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு நாணய நிர்வாகத்திற்கு இலங்கை தயாராக வேண்டும் என்றும்,
அது மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
முகநூலில் வலைவீசிய சீனா மாப்பிள்ளை..!
சமூக வலைத்தள காதல் மோகத்தால், தங்க நகைகளை அடகு வைத்து 5 இலட்சம் ரூபாயை ஏமாந்து,நடுத்தெருவுக்கு வந்துள்ள இலங்கை யுவதி ஒருவரின் அதிர்ச்சிப் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த குறித்த யுவதிக்கு, சில மாதங்களுக்கு முன்பு முகநூல் (Facebook) வழியாக ஒரு அறிமுகம் கிடைத்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஒரு அழகான இளைஞன் என்று கூறி பழகிய அந்த நபர், குறுகிய காலத்திலேயே தனது அன்பான பேச்சால் யுவதியின் மனதைக் கொள்ளையடித்துள்ளார்.
ஆன்லைன் நட்பு, அடுத்த சில நாட்களிலேயே தீவிர காதலாக மாறியுள்ளது.
25 இலட்சம் ரூபாய் பார்சல் அனுப்புறேன், கல்யாணம் பண்ணிக்கிறேன், என்று கூற காதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில்,நான் உன்னைத் திருமணம் செய்ய விரைவில் இலங்கை வருகிறேன் என அந்த இளைஞன் வாக்குறுதி அளித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, உனக்காக 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐபோன்கள், தங்க நகைகள் மற்றும் பிராண்டட் ஆடைகளை பார்சலில் அனுப்பி வைக்கிறேன் எனக் கூறி,அந்தப் பொருட்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அனுப்பியுள்ளார்.
மேலும், யுவதியை முழுமையாக நம்ப வைப்பதற்காக, தான் இலங்கை வருவதற்கு எடுத்த போலி விசா (Visa) மற்றும் விமான டிக்கெட் நகல்களையும் வாட்ஸ்அப்பில் தட்டிவிட்டுள்ளார்.
பார்க்க நாடகம் அத்தனையும் உண்மையாக நடக்க, திடீரென ஒருநாள் காதலனிடம் இருந்து அவசர செய்தி வந்துள்ளது.
நான் அனுப்பிய 25 இலட்சம் ரூபாய் பார்சல் கொழும்பு விமான நிலையத்திற்கு வந்துவிட்டது.
ஆனால், இலங்கை சுங்க அதிகாரிகள் (Customs) அதை விடுவிக்க 5 இலட்சம் ரூபாய் வரி கேட்கின்றனர்.
உடனே இந்த அக்கவுண்ட்டுக்கு காசைப் போடு!
பரிசுப் பொருட்களின் மதிப்பு அதிகம் என்பதால், காதலனின் பேச்சை அப்படியே நம்பிய யுவதியும், அவரது பெற்றோரும் பதறியடித்துள்ளனர்.
தங்களிடம் இருந்த சேமிப்புப் பணம் போதாததால், வீட்டில் இருந்த தங்க நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் அவசரம் அவசரமாகக் கூறப்பட்ட உள்ளூர் வங்கிக் கணக்கிற்கு 5 இலட்சம் ரூபாயை அனுப்பியுள்ளனர்.
கட் ஆன கனெக்ஷன்!
கதறும் குடும்பம்!
பணம் அவுட்!
அடுத்த செகண்டே ஆட்டமும் குளோஸ்!
வங்கிக் கணக்கில் பணம் விழுந்த அடுத்த சில நிமிடங்களில், அந்த சீன காதலனின் முகநூல் கணக்கு (Facebook Profile) மொத்தமாக முடக்கப்பட்டது (Block). அவனது வாட்ஸ்அப் எண்களும் அணைக்கப்பட்டன.
அப்போதுதான், தாங்கள் ஒரு "சர்வதேச ஆன்லைன் மோசடிக் கும்பலிடம்" (Romance Scam) சிக்கி ஏமாந்துள்ளோம் என்பதை உணர்ந்த யுவதியும், குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர்.
பின்னணியில் உள்ளூர் ஏஜெண்டுகளா? CID அதிரடி விசாரணை!
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்,காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCID) விசாரணைகளைக் முடுக்கிவிட்டுள்ளது.
யுவதி பணம் அனுப்பிய இலங்கையின் உள்ளூர் வங்கிக் கணக்கு யாருடையது?
இதன் பின்னணியில் இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு நைஜீரிய அல்லது ஆசிய மோசடிக் கும்பல்கள் உள்ளனவா?
என்ற கோணத்தில் தீவிர புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போலி 5000 ரூபா பணத்தை கொடுத்த இளைஞன் கைது..!
கொலன்னாவையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர், மூன்று 5,000 ரூபாய் போலி நோட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று மாலை (14) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, கொலன்னாவை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் உள்ளூர் உணவகம் ஒன்றில் உணவுக்காக 5,000 ரூபாய் போலி நோட்டை வழங்கி பணம் செலுத்த முயன்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பணம் குறித்து சந்தேகமடைந்த உணவகத்தின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை ......!
No comments