மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் கடுமையான அரசியல் மற்றும் இராணுவ நெருக்கடி காரணமாக, உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில நாடுகள் பாரிய செல்வாக்கிற்கு உள்ளாகியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது.
இதன்கீழ் மேற்கொள்ளப்பட்ட புதிய அறிவியல் பகுப்பாய்வின்படி, சோமாலியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அதிக ஆபத்துள்ள நாடுகளின் வரிசையில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடி காரணமாக, இலங்கையில் மேலதிகமாக மேலும் 1.3 மில்லியன் (13 இலட்சம்) மக்கள் தங்களின் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் கடுமையான பட்டினியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.இலங்கை செய்திகள்
“மத்திய கிழக்கு நெருக்கடி ஆபத்துக்குள்ளான நாடுகளைப் பாதிக்கும் விதம்” என்ற தலைப்பிலான இந்த புதிய அறிக்கையின் மூலம், உலகளாவிய ரீதியில் எரிபொருள், உரங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையே இந்த நிலைமைக்குக் காரணம் என உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலக உணவுத் திட்டம் தனது ஆய்விற்காக புவியியல் இருப்பிடம் மற்றும் பொருளாதார நிலைகளின் அடிப்படையில் வெவ்வேறு சூழல்களைக் கொண்ட, ஆனால் மத்திய கிழக்கு நெருக்கடியால் நேரடியாகப் பாதிக்கப்படக்கூடிய மூன்று நாடுகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளது.
அதன்படி, அந்த நாடுகள் எதிர்கொள்ளும் நெருக்கடியின் தன்மை பின்வருமாறு:
இலங்கை: நீண்டகால பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் பின்னணியில், நாட்டின் மின்சக்தி தேவையில் 63 சதவீதம் மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், இந்நாட்டிற்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தில் 44 சதவீதம் வளைகுடா பிராந்தியத்தில் இருந்தே கிடைப்பதுடன், தேயிலை ஏற்றுமதியில் 45 சதவீதம் அந்த பிராந்தியத்திற்கே அனுப்பப்படுகிறது. தற்போதைய நெருக்கடி காரணமாக, 2026 ஆம் ஆண்டிற்காக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள 4.7 மில்லியன் உணவு பாதுகாப்பற்ற மக்கள் தொகைக்கு மேலதிகமாக, மேலும் 1.3 மில்லியன் மக்கள் புதிதாக இதற்கு பலியாகும் அபாயம் உள்ளது.
சோமாலியா: ஏற்கனவே வறட்சி மற்றும் உள்நாட்டு மோதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியா, தனக்குத் தேவையான எண்ணெயை முழுமையாகவும் (100%) மற்றும் தானிய வகைகளில் 90 சதவீதத்தையும் இறக்குமதி செய்கிறது. இதன் விளைவாக, 2026 ஆம் ஆண்டில் அந்நாட்டில் மேலதிகமாக 2.5 மில்லியன் மக்கள் கடுமையான உணவு நெருக்கடிக்கு ஆளாக நேரிடும்.
ஆப்கானிஸ்தான்: ஏற்கனவே 13.8 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற தன்மையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், தனது ஏற்றுமதியில் 60 சதவீதத்திற்கும் மற்றும் இறக்குமதியில் 50 சதவீதத்திற்கும் ஈரானில் தங்கியுள்ளது. மத்திய கிழக்கு நெருக்கடியின் விரிவாக்கத்துடன், அங்கு மேலதிகமாக 2.3 மில்லியன் மக்கள் புதிதாக உணவுப் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பகுப்பாய்வு சேவையின் பணிப்பாளர் ஜீன்-மார்ட்டின் பவர் பிரකාශ செய்கையில், இந்த நெருக்கடியின் மையப்பகுதிக்கு வெளியே வாழும் உலகின் ஏழ்மையான குடும்பங்களே இதனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். “பல நாடுகளின் சந்தைகளில் உணவுப் பொருட்கள் உள்ளன, ஆனால் குடும்பங்களுக்கு அவற்றை வாங்குவதற்கான பொருளாதார சக்தி இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் அதீத ஏழை மக்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் இந்த புதிய ஆபத்துக்கு ஆளாகி வருவதாக அறிக்கை காட்டுகிறது.
மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக உலக உணவுத் திட்டமும் கடுமையான நிதி மற்றும் செயல்பாட்டு அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. நிவாரணம் வழங்குவதற்கான செலவுகள் அதிகரிப்பு மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக, 2026 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் திட்டமிட்டதை விட 1.5 மில்லியன் மக்களுக்கு உதவிகளை வழங்க முடியாமல் போகும் என WFP மதிப்பிட்டுள்ளது. எதிர்வரும் மாதங்களிலும் இந்த மோதல்கள் தொடருமானால், உலகளவில் 9 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்குக் கிடைக்கும் மனிதாபிமான உதவிகள் இல்லாமல் போகும் அச்சுறுத்தலும் எழுந்துள்ளது.
மத்திய கிழக்கு நெருக்கடி நாளைக்கே முடிவுக்கு வந்தாலும், எரிபொருள், உரம் மற்றும் உணவு விலையேற்றம் காரணமாக விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பால், இதன் மோசமான விளைவுகளை மேலும் நீண்ட காலத்திற்கு பல நாடுகள் அனுபவிக்க நேரிடும் என உலக உணவுத் திட்டம் வலியுறுத்துகிறது. எனவே, உலகைப் பேரழிவுகரமான பட்டினியிலிருந்து காப்பாற்ற உலக சமூகம் உடனடியாகச் செயல்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.
மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு...
மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (8) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.45 சதவீதம் அதிகரிப்பை பதிவு செய்து 96 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.41 சதவீதம் அதிகரித்து 93.63 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
லெபனான் மீதான தாக்குதலை கண்டித்து ஈரான் இஸ்ரேல் மீது நேற்று தாக்குதலை நடத்தியது. அதற்கு பதிலளிக்கும் வகையில் இஸ்ரேலும் தாக்குதலை நடத்திய நிலையில் ஏற்பட்டுள்ள அச்சநிலைமையை அடுத்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்து வருகின்றது.
ஹொரணை வங்கி பண மோசடி
ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கியில் இருந்து ரூ.35 மில்லியன் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட உதவி முகாமையாளர் மேலதிக விசாரணைகளுக்காக இன்று (07) வங்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அவரை ஆறு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க ஹொரணை நீதவான் நீதிமன்றம் நேற்று (06) அனுமதி வழங்கியிருந்தது. இதேவேளை, கைதுசெய்யப்பட்ட பாதுகாப்பு அதிகாரி எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 3ஆம் திகதி பல ஏ.டி.எம் இயந்திரங்களில் வைப்புச் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ரூ.35 மில்லியன் பணம் திருடப்பட்டதாக ஹொரணை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்தது. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து பணம் எடுக்கப்பட்டமை சி.சி.ரி.வி காட்சிகளில் உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் வங்கி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, கழிவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கொள்கலனிலிருந்து ரூ.17 இலட்சத்து 40 ஆயிரம் பணம் மீட்கப்பட்டது.
விசாரணைகளின் அடிப்படையில், உதவி முகாமையாளரும் பாதுகாப்பு ஊழியரும் இணைந்து பணத்தை அபகரிக்கத் திட்டமிட்டிருந்தமை தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களின் தொலைபேசி பதிவுகளைப் பெறவும், அவர்களது வீடுகளைச் சோதனையிடவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு முன்னெடுத்து வருகின்றது.
இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய
இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை 1 முதல் 3 சதவீதம் வரையான தொகையினால் அதிகரிப்பதற்கு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன.
அதற்கமைய, தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையில் கடன் அட்டைகளை பயன்படுத்தும் 22 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படவுள்ளனர்.
அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வதற்காக பலரும் இந்த அட்டைகளை பயன்படுத்தி வரும் நிலையில், ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த அதிகரிப்பு அவர்களுக்குப் பெரும் சுமையாக இருக்கும் என நிதி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சமீபத்தில் தனது கொள்கை வட்டி வீதத்தை ஒரு சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
இதன் நேரடித் தாக்கம் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, இதுவரையில் கடன் அட்டைகளுக்கு நிலவிய 26 சதவீதம் என்ற வருடாந்த வட்டி வீதத்தை, ஜுலை முதலாம் திகதி முதல் 28 சதவீதமாக அதிகரிப்பதற்கு சில வங்கிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளன.
மத்திய வங்கியின் தரவு அறிக்கைகளுக்கமைய, இந்த ஆண்டு மார்ச் மாதமளவில் இலங்கையிலுள்ள கடன் அட்டை வைத்திருப்பவர்கள் வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் நிலுவை 194,105 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments