நாட்டில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே, ....!
நாட்டில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே, ....!

நாட்டில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே, ....!
இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே மந்த போசணை மிக அதிகமாகக் காணப்படும் மாகாணம் ஊவா மாகாணம் என்று,
பதுளை போதனா வைத்தியசாலையின் ஊட்டச்சத்து விசேட வைத்தியர் வாசனா மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த மாகாணத்தில் மந்த போசணை மட்டுமன்றி,
அதிபோசணை (Overnutrition) அதாவது தேவையற்ற முறையில் உடல் எடை அதிகரித்தல் என்ற நிலையும் அதிகமாகக் காணப்படுவதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் ஊட்டச்சத்து குறித்த அறிவு மட்டம் குறைவாக இருப்பதே இதற்கான காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட
குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
குவைத் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக,
வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று இலங்கையர்களுக்கு மேலதிகமாக, இரண்டு குவைத் நாட்டவர்கள், ஓர் இந்தியர் மற்றும் மேலும் இரு வெளிநாட்டவர்கள் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து ஹஷிஷ் (Hashish), ஹெரோயின், போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,
போதைப்பொருட்களை அளவிடும் கருவிகள் மற்றும் பொதி செய்யும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட உபகரணங்களும் மேலதிக விசாரணைகளுக்காக குவைத் நாட்டின் குற்றவியல் பாதுகாப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
2.6 இலட்சம் குழந்தைகள், --- படிப்பை நிறுத்திய பின்னணி. .!
2018ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில்,
267,138 குழந்தைகள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாகப்,
பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர்,
2010 முதல் 2017ஆம் ஆண்டின் முற்பகுதி வரை பாடசாலை கல்வியை இடைநிறுத்திய குழந்தைகள் குறித்த துல்லியமான தரவுகள் தன்னிடம் இல்லை எனக் குறிப்பிட்டார்.
2018 முதல் 2024 வரையான வருடாந்திர பாடசாலை மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில்,
முதலாம் தரம் முதல் 10ஆம் தரம் வரை ஒவ்வொரு வகுப்பிலும் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் விலகிய விகிதங்களை கருத்தில் கொண்டு,
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சமன்பாட்டைப் பயன்படுத்தி இந்தத் தரவுகள் கணக்கிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, பாடசாலை கல்வியை இடைநிறுத்திய குழந்தைகளின் எண்ணிக்கை
கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து,
டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட,
இரு சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை(5) முதல் திங்கட்கிழமை (8) வரையான காலப்பகுதியில் திடீர் போக்குவரத்து விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு,
பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக பத்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குறித்த நடவடிக்கையின் போது
தலைக்கவசம் அணியாமல் வாகனம் செலுத்தியமை,
சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்,
கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல்,
உள்ளிட்ட குற்றங்களுக்காக 10 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டதுடன்,
அவற்றை செலுத்தியவர்களும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இது தவிர டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இருவர் கைதாகினர்.
மேலும் இச்சேதனை நடவடிக்கையின் போது சாரதி அனுமதி பத்திரம் வருமான வரிச் சான்றிதழ் காப்பீட்டுச் சான்றிதழ் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல்,
ஆகிய குற்றங்களுக்காக நடவடிக்கைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மேலும் இந்த சந்தேக நபர்களில் ஒருவருக்கு நீதிமன்றத்தால் ரூ. 38000 அபராதம் விதிக்கப்பட்டமை சுட்டிககாட்டத்தககது.
ஏனைய சந்தேக நபர்கள் மீது எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே, ....!
No comments