பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள.......!
பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள.......!

பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள.......!
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 2026 க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்களின் தேசிய அடையாள அட்டைகளைத் தயாரித்துக் கொள்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறிப்பிட்ட பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னர், தங்களது தேசிய அடையாள அட்டையைத் தயாரித்துக் கொள்வது அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களின் பொறுப்பாகும் என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம்..
மியான்மரில் இன்று (04) 3.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மியான்மரில் இன்று அதிகாலை 7.10 மணியளவில் நிலப்பரப்பில் இருந்து சுமார் 126 கிலோமீட்டர் ஆழத்தில் 4.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால், உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
ஆழமற்ற நிலநடுக்கங்கள் பொதுவாக ஆழமான நிலநடுக்கங்களை விட அதிக ஆபத்தானவை. ஏனெனில், ஆழமற்ற நிலநடுக்கங்களில் இருந்து வரும் நில அதிர்வு அலைகள் மேற்பரப்பிற்கு குறைந்த தூரமே பயணிக்கும். இதன் விளைவாக, தரை அதிர்வு அதிகமாகவும், கட்டமைப்பு சேதங்கள் அதிகமாகவும், உயிரிழப்புகள் அதிகமாகவும் ஏற்படுகின்றன.
மியான்மர் அதன் நீண்ட கடற்கரையோரம் மிதமான மற்றும் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமிகளால் ஏற்படும் அபாயங்களுக்கு ஆளாகக்கூடியது.
அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்...
இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்தை நகர்த்தும் நோக்கத்தில் அரச சேவையையும் டிஜிட்டல்மயமாக்குவதற்கும், அரச அதிகாரிகளின் தொழில்நுட்பத்திறன்களை மேம்படுத்துவதற்குமான தேசிய திட்டத்தின் ஆரம்ப கட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்காக, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் ஆகியோரின் தலைமையில் நேற்று (03) சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.
உலகளாவிய தொழில்நுட்பப்போக்குகளுடன் அரச சேவையின் செயல்திறனை அதிகரித்தல், சேவை தாமதங்களைக் குறைத்தல் மற்றும் அதிகாரிகளின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த திட்டம், டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதற்கும், குறிப்பாக சிரேஷ்ட அதிகாரிகளிடையே தொழில்நுட்ப அச்சத்தை குறைப்பதன் மூலம் இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலட்சக்கணக்கான அரச ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க மின்னணு கற்றல் முறையைப் பயன்படுத்தவும், கைபேசிகள் மூலம் கிடைக்கும் குறுகிய காணொளிப்பாடங்கள் வழியாக நுண் கற்றல் முறையை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் ஆண்டு செயல்திறன் மதிப்பீடுகள் மற்றும் பதவி உயர்வுகளுக்கு, இந்த டிஜிட்டல் எழுத்தறிவுப்பயிற்சியை நிறைவு செய்வதை கட்டாயமாக்குவது குறித்தும் விவாதங்கள் நடைபெற்றுள்ளன.
பயிற்சிக்காக அலுவலகம் மற்றும் பாடசாலை கணினி ஆய்வகங்களைப் பயன்படுத்தவும், விளையாட்டுமயமாக்கல் முறைகளை அறிமுகப்படுத்தவும், டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ்களை வழங்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது பணியில் இருக்கும் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்தல், புதிய பணியாளர்களுக்கு டிஜிட்டல் தகுதிகளைக் கட்டாயமாக்குதல், மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு பாடசாலை மற்றும் பல்கலைக்கழக பாடத்திட்டங்களை உருவாக்குதல் ஆகிய மும்முனைத் திட்டத்தின் கீழ் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆரம்பக் கட்டமாக, அரச அதிகாரிகளுக்கு இணையப் பாதுகாப்பு குறித்த ஒரு குறுகிய விழிப்புணர்வுப் பயிற்சியும், அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மற்றும் ஒத்துழைப்புக்கருவிகளைப் பயன்படுத்துவது குறித்த செய்முறைப் பயிற்சியும் வழங்கப்பட உள்ளன
பேருந்து கட்டண திருத்தம் குறித்து
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு நிகராகப் பேருந்து கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (04) நெடுஞ்சாலைகள் அமைச்சில் நடைபெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பாகப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன் விரைவில் கலந்துரையாடல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து தருவதாக அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் பேருந்து சங்கங்களிடம் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நிலவரம் காரணமாக அண்மையில் டீசல் விலை இரண்டு கட்டமாக உயர்த்தப்பட்டதன் காரணமாக, ஒரு மாத காலத்துக்குள் லீற்றருக்கு மொத்தம் 25 ரூபாய் அதிகரித்துள்ளதாக பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதனால் போக்குவரத்து சேவையை முன்னெடுக்க பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதனையடுத்து 5% இடைக்கால கட்டண உயர்வு அல்லது எரிபொருள் மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தட்டம்மை பரவல் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு..
பங்களாதேசத்தில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 601 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் 15 முதல் நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதே காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான புதிய சந்தேகிக்கப்படும் நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், பலருக்கு ஆய்வகப் பரிசோதனைகள் மூலம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை பங்களாதேசத்தில் 74,000க்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நோய் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் தேவை என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தடுப்பூசி முயற்சிகள் மற்றும் மருத்துவமனை சிகிச்சை மட்டும் போதாது என்றும், வீடு வீடாகச் சென்று தடுப்பூசி வழங்குதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பை வந்தடைந்தது இந்திய
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT ’ 2026 ஜூன் 01 காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாட்டை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த Landing Ship Tank வகைக்குரிய ‘INS AIRAVAT என்ற கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் IP Patil கடமையாற்றுகின்றார்.
மேலும், கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ள இந்தியக் கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT' நட்டில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் குழுவினர் இலங்கைக் கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், நட்டின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர்.
No comments