பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய ....!

பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய    ....!



பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய    ....!




பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய    ....!


2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரம்) மற்றும் கல்விப் பொதுத் தராதர (உயர்தரம்) பரீட்சைகள் முன்னதாக அறிவிக்கப்பட்ட தவணை அட்டவணையின்படி உரிய திகதிகளில் நடத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


2025.09.11 ஆம் திகதியிட்ட 30/2025 இலக்க சுற்றறிக்கையும், பாடசாலைப் பரீட்சைத் திகதிகள் தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் 2025.07.09 ஆம் திகதியிட்ட 6/1/2025 இலக்க சுற்றறிக்கையும் அடிப்படையாகக் கொண்டு பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, பரீட்சைகளுக்குரிய பாடத்திட்டங்கள் முழுமையாக கற்பித்து முடிக்கப்பட்டு, மாணவர்கள் உரிய முறையில் பரீட்சைகளுக்குத் தயார்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், ஏதேனும் பாடசாலைகளில் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்பட்டிருந்தால், முன்கூட்டியே திட்டமிட்டு மேலதிக நேரங்களை ஒதுக்கி பாடத்திட்டங்களை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பான அறிவுறுத்தல் அடங்கிய கடிதம் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



 வாகனங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை....


பொதுச் வீதிகளில் அதிக இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட ஒலி அடக்கிகள் பொருத்தப்பட்ட வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.


இத்தகைய வாகனங்கள் பொலிஸாரின் காவலில் எடுக்கப்படுவதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் சோதனைகளும் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.


மேலும், மோட்டார் போக்குவரத்து திணைக்கள அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


மாற்றியமைக்கப்பட்ட புகை வெளியேற்றும் அமைப்புகள் மற்றும் அதிக இரைச்சல் ஏற்படுத்தும் வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக அதிகரித்து வரும் புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.



தீவிரம் அடையும் டெங்கு - மாணவர்கள் உட்பட 21 பேர் மரணம்...


இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதன் காரணமாக, மருத்துவமனைகளின் கொள்ளளவு எல்லை தாண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


தற்போது வரை டெங்கு நோய் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களுள் ஐவர் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தற்காலிக பணிப்பாளர், மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.


டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரமொன்றை முன்னெடுக்க பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


பொது இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை உள்ளடக்கும் வகையில் இந்த ஒழிப்பு வாரம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை செயல்படுத்தப்படவுள்ளது.

 

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் அதிகளவான டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மானியம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது...


எரிபொருள் மானியங்களை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாக, (CPC) தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார். 


பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) முன்னிலையில் ஆஜராகிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அரசாங்கத்தினால் ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாயும், ஒரு லீட்டர் பெற்றோலுக்கு 20 ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது.


இதற்காக ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 15.3 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன், இதற்கான மொத்த மானியத் தொகை சுமார் 20 பில்லியன் ரூபாயாகும்.


தற்போதைய நிலவரப்படி, ஜூன் மாத இறுதியில் இந்த மானிய நிதி தீர்ந்துவிடும் என்றும், ஜூன் மாதத்திற்குப் பிறகு மானியத்தைத் தொடர்ந்து வழங்குவது குறித்து அரசாங்கம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தலைவர் வலியுறுத்தினார்.


அரசாங்கம் 100 ரூபாய் மானியம் வழங்கிய போதிலும், ஏப்ரல் மாத தரவுகளின்படி ஒரு லீட்டர் டீசல் மூலம் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் மொத்த நஷ்டம் 129 ரூபாயாகும். 


அரசாங்கத்தின் மானியத்திற்குப் பின்னரும், கூட்டுத்தாபனம் ஒரு லீட்டர் டீசலுக்கு இன்னமும் 29 ரூபாய் நஷ்டத்தை எதிர்கொள்வதாக தலைவர் சுட்டிக்காட்டினார்.


எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக வெளிநாட்டு நாணயத்தைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


சந்தையில் டொலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட சந்தர்ப்பங்களில், மத்திய வங்கியின் தலையீட்டுடன் டொலரின் மதிப்பை 350 ரூபாய்க்கு மிகாமல் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.


கூட்டுத்தாபனம் முறையான திட்டமிடல் இன்றி ஒரே தடவையில் சந்தையிலிருந்து 50 மில்லியன் டொலர் போன்ற பெருந்தொகையை திரட்ட முயற்சிப்பதால், வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் அதிகரிப்பதாக நிதிக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.


இவ்வாறு டொலரின் விலை உயர்வதனால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்து, ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் எச்சரித்தார்.


இதற்குப் பதிலளித்த கூட்டுத்தாபனத்தின் தலைவர், தற்போதைய திட்டத்தின்படி வங்கிகள் ஊடாக நாளொன்றுக்கு 11 மில்லியன் டொலர் வீதம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.



வரையிலான கடற்பரப்பில் பயணிக்க வேண்டாம்....


காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை பயணிப்பதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 


அந்த திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், இக்கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதன் காரணமாக, மறு அறிவித்தல் வரும் வரை இக்கடற்பரப்புகளுக்குள் செல்ல வேண்டாம் என கடற்படையினருக்கும் கடற்றொழிலாளர் சமூகத்திற்கும் அறிவுறுத்திப்பட்டுள்ளது. 


அதேபோல், திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலும், கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், இக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம் என்றும் அந்த திணைக்களம் எச்சரித்துள்ளது. 


மேலும், மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது சுமார் 2.0 - 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



பலத்த மழைக்கான எச்சரிக்கை...


மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


குறித்த பகுதிகளின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மன்னார் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் (40-50) கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.


ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் (30-40) கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.



சிவப்பு’ எச்சரிக்கை 


கங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடல் பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த ‘சிவப்பு’ எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்படி, கங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையிலான கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும், மணிக்கு 60–70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, மறு அறிவித்தல் வரும் வரை மீனவர்களும் கடற்படையினரும் இந்தக் கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக கங்கேசன்துறை வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும், மணிக்கு 50–60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தக் கடல் பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களும் கடற்படையினரும் நிலைமை குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் அலையின் உயரம் சுமார் 2.0–2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதற்கமைய, வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகள் குறித்து மீனவர்களும் கடற்படையினரும் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கோரப்படுகிறார்கள்.




 பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய    ....!

.








No comments

Theme images by fpm. Powered by Blogger.