க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் அடுத்த வாரத்திற்குள் ......!

 க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் அடுத்த வாரத்திற்குள் ......!


க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் அடுத்த வாரத்திற்குள் ......!


 க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் அடுத்த வாரத்திற்குள் ......!


2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வார நிறைவுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


விடைத்தாள் திருத்தம் மற்றும் பெறுபேறுகள் ஒழுங்கமைக்கும் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் கல்வி நாட்காட்டியின்படி திட்டமிடப்பட்ட திகதிகளிலேயே நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்படாதவாறு, தேவையானால் மேலதிக நேரம் ஒதுக்கி கற்பித்தலை நிறைவு செய்யுமாறு அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.




TIN இலக்கம் பெறாதோர் 40 இலட்சம் பேர் என இறைவரித் திணைக்களம் 




வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இதுவரை சுமார் 40 இலட்சம் பேர் பெறவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. 


தற்போது 13 மில்லியனுக்கும் அதிகமானோர் TIN இலக்கத்தை பெற்றுள்ளதாகவும், 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மொத்தம் சுமார் 17 மில்லியன் பேர் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், 2026ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தின் படி வங்கி கணக்கு திறப்பு, வாகன பதிவு, வணிக பதிவு, பங்கு பரிமாற்றம் மற்றும் கடன் அட்டை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய TIN இலக்கம் இனி இரகசியத் தகவலாக கருதப்படமாட்டாது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.




எல் நினோ மாற்றத்தால் 




நாட்டில் நிலவும் எல் நினோ வானிலை மாற்றத்தின் தாக்கத்தால் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.


தற்போது எல் நினோ நிலை பலவீனமாக இருந்தாலும், நவம்பர் மாதத்திற்குப் பின்னர் அது படிப்படியாக வலுப்பெற்று மிகவும் வலிமையான நிலையை அடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமன்னே தெரிவித்துள்ளார்.


மேலும், டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் எல் நினோ தாக்கம் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் 60 சதவீதத்திற்கும் மேல்வுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


எல் நினோ வானிலை நிலைகள் பலவீனமான, மிதமான, வலிமையான மற்றும் மிகவும் வலிமையான என வகைப்படுத்தப்படுகின்றன என்றும் தற்போது இலங்கை பலவீனமான கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




2.5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பலாம் - 




இலங்கையைச் சுற்றியுள்ள பல கடல் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வானிலை அவதானிப்பு நிலையம் எச்சரித்துள்ளது.


இன்று காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, கொழும்பில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.


திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.


இதன் காரணமாக, மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.


தீவைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகள் ஓரளவுக்கு கொந்தளிப்பாக இருக்கக்கூடும். மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் அலைகள் சுமார் 2.0 முதல் 2.5 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வானிலை அவதானிப்பு நிலையம் மேலும் எச்சரித்துள்ளது.



எனவே, இக்கடற்பரப்புகளில் தொழிலில் ஈடுபடும் கடற்படையினரும், மீன்பிடி சமூகத்தினரும் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 




மூளைக்காய்ச்சல் பரவல் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்....




நாட்டில் மூளைக்காய்ச்சல் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நோய்ப்பரவல் ஆய்வுப் பிரிவின் மருத்துவ நிபுணர் ஹரேந்திர தசநாயக்க தெரிவித்துள்ளார்.


மூளைக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகள் சுமார் 280 பேர் இதுவரை பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், 


மூளைக்காய்ச்சல் நோய் முதன்முதலில் பதிவான தெனியாய பகுதியில் இருந்து தற்போது புதிய நோயாளிகள் யாரும் பதிவாகவில்லை.


நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட ரிக்கில்லகஸ்கடா மற்றும் கண்டி பகுதிகளில் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


நோய்ப்பரவல் ஆய்வு பிரிவு குழுக்கள் நோய்க் கட்டுப்பாட்டு திட்டங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார். 





காய்ச்சல் இருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை! 




'காய்ச்சல் இருப்பவர்கள் டெங்கு பாதிப்பு இருக்கலாம் என சந்தேகித்தால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது தொடர்பில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குநர் வைத்தியர் கபில கண்ணங்கரா தெரிவிக்கையில், காய்ச்சல் இருந்தால் டெங்கு பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகித்தால் பொது மக்கள் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.


நாட்டின் பல பகுதிகளில் இப்போதெல்லாம் டெங்கு வேகமாகப் பரவி வருகிறது.


எனவே உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும், தங்களுக்கு டெங்கு பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறியவும், மருத்துவ ஆலோசனையின்படி செயல்படவும் அவர் கேட்டுக்கொண்டார்.


இதேவேளை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பூச்சியியல் நிபுணர் சபுந்தலா ஜானகி கூறுகையில், நாடு முழுவதும் நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி வேகமாக அதிகரித்து வருகிறது.


இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய, தங்களை சுற்றியுள்ள இடங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்றுள்ளார். 






 க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் அடுத்த வாரத்திற்குள் ......!

No comments

Theme images by fpm. Powered by Blogger.