டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை ......!

டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை ......!



டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை ......!


டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை ......!



இந்தியாவில் நீட் மறுதேர்வு வரும் ஜூலை 2ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்வு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் டெலிகிராம் மெசேஜிங் செயலிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கை தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000ன் பிரிவு 69Aன் கீழ் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது.


வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பாதுகாப்பு கவலைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், தேர்வு முடியும் வரை தடை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.




வேகமாகப் பரவும் டெங்கு: அதி-அபாய வலயங்கள் 84 ஆக அதிகரிப்பு!



நாட்டில் டெங்கு நோய்த்தாக்கத்தின் வீரியம் தற்போது ஒரு பாரிய தொற்றுநோய் மட்டத்திற்கு தீவிரமடைந்துள்ளதாக நிர்வாக சேவைகள் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக, நாடளாவிய ரீதியில் இதுவரை அடையாளம் காணப்பட்டிருந்த 74 டெங்கு அதி-அபாய வலயங்களின் எண்ணிக்கை, தற்போது 84 ஆக உயர்வடைந்துள்ளது.


தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக பின்வரும் 14 மாவட்டங்களில் டெங்கு நோய் மிக அதிவேகமாகப் பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது:


கொழும்பு, கம்பஹா, களுத்துறை,காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை குருநாகல், புத்தளம் ,இரத்தினபுரி, கேகாலை ,கண்டி, மாத்தளை , மட்டக்களப்பு, பதுளை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் வேகமாக பரவி வருகின்றது.


தற்போதைய சூழ்நிலையில் பாடசாலை மாணவர்கள் இந்த டெங்கு வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி சுட்டிக்காட்டியுள்ளார்.


எனவே, பாடசாலை வளாகங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு பெற்றோர்களுக்கும் அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை, வேகமாக பரவி வரும் டெங்குப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று (ஜூன் 15) ஆரம்பிக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் இரண்டாம் நாளான இன்றைய தினமும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




காலி வைத்தியசாலை வளாகத்தில் திடீரென பற்றி எரிந்த



காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு அமைந்துள்ள வளாகத்தில் இருந்த மின்மாற்றி ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. 


வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் காலி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். 


இந்த தீ பரவல் காரணமாக காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. 


தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.



300 ரூபாய்க்கும் குறைவான விலையில் கொழும்பு துறைமுகத்திற்கு எண்ணெய்



வளைகுடாப் பிராந்தியப் பதற்றங்கள் தணிந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஸ்திரத்தன்மையடைந்துள்ள நிலையில், அதன் உண்மையான இலாபத்தை உடனடியாக நாட்டு மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,


உலக சந்தையில் எண்ணெய் விலை குறைவடைந்துள்ளது.இந்த அரசாங்கம் போர் தொடங்கிய ஆரம்பத்தில், 35 நாட்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பு நம்மிடம் உள்ளதாகக் கூறியது. ஆனால், அடுத்த ஏழே நாட்களுக்குள் எண்ணெய் விலையை உயர்த்தியது.


இதன் மூலம் அவர்கள் ஒரு பெருந்தொகையான மேலதிகப் பணத்தை ஈட்டியிருப்பார்கள். எனவே, தற்போது எண்ணெய் விலை குறைந்திருப்பதால், மார்ச் மாதத்தில் மக்கள் பணமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட அந்தப் பழைய பெருந்தொகைப் பணத்தை மீண்டும் மக்களிடமே வழங்கி, இந்த எண்ணெய் விலையைக் குறைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


அதேபோல், எண்ணெய் விலை இதே மட்டத்தில் நீடிப்பதைக் கருத்திற்கொண்டு, மின்சாரக் கட்டண திருத்தம் ஒன்றினை மேற்கொண்டு அது தொடர்பிலும் புதிய தீர்மானம் ஒன்றினை எடுக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோருகிறோம்.


ஏனெனில், இந்த அரசாங்கத்தின் நிலக்கரி ஊழல் காரணமாகவும், அதேபோல் டீசல் ஊழல் காரணமாகவும் பெருமளவிலான மக்கள் பணம் வீணடிக்கப்பட்டது.


இப்பொழுதாவது மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் வகையில், எண்ணெய் விலையைக் குறைத்து, மின்சாரக் கட்டணத்தையும் குறைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.





மூவரின் மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்தது யாழ் மேல் நீதிமன்றம்!



யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், குற்றவாளிகள் முன்னிலையில் வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.


அத்துடன், உயர் நீதிமன்றினால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு பேரையும், மேல் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்ததுள்ளது.


கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.


இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகளில், குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்ட 07 பேருக்கும், யாழ்ப்பாண மேல்நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட தீர்ப்பாயத்தினூடாக மரண தண்டனை விதித்து தீர்பளித்தது.


குறித்த தீர்ப்பினை ஆட்சேபித்து, குற்றவாளிகள் அறிவிக்கப்பட்ட 07 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்திருந்தனர்.


இதனையடுத்து நடைபெற்ற விசாரணைகளில், இரண்டு பேரை விடுதலை செய்த உயர் நீதிமன்றம், ஏனைய ஐவரின் மரண தண்டனையையும் உறுதி செய்தது.


இந்தக் குற்றச் சம்பவத்தின் வழக்கு விசாரணை காலத்திலேயே மரண தண்டனை கைதி ஒருவர் நோய் வாய்ப்பட்டு, சிறையிலேயே உயிரிழந்தார்.


இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட ஏனைய நால்வரின் தண்டனையையும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் மீண்டும் வாசித்து அறிவிப்பதற்காக, குற்றவாளிகள் கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


அவர்களில் ஒருவர் சிறைச்சாலைக்குள் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.


அதனால் தீர்ப்பினை உறுதி செய்வதற்காக அன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்படவிருந்த வழக்கு, எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் குறித்த வழக்கு நேற்று திங்கட்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஐந்து குற்றவாளிகளில் இருவர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில் ஏனைய மூவருக்கும் உயர் நீதிமன்ற தீர்ப்பை மேல் நீதிமன்று வாசித்து காட்டி உறுதி செய்தது.




பலத்த காற்று கடல் கொந்தளிப்பு குறித்து




காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


எனவே, கடற்சார் மற்றும் மீனவச் சமூகங்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


அத்துடன், கற்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0 - 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பில் வெளியிடப்படும் அடுத்தடுத்த அறிவித்தல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவ மற்றும் கடற்சார் சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




338 ரூபாவைத் தாண்டியது அமெரிக்க டொலரின்



இலங்கை மத்திய வங்கி 16/06/2026 வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.29 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதன் விற்பனை விலை 16/06/2026 338.22 ரூபாவாக பதிவாகியிருந்தது.

அதேபோல்,15/06/2026 டொலரின் விற்பனை விலை 336.58 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



 டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை ......!


No comments

Theme images by fpm. Powered by Blogger.