பாடசாலைக்கு மாணவிக்கு நேர்ந்த கதி...

பாடசாலைக்கு மாணவிக்கு நேர்ந்த கதி...

 

பாடசாலைக்கு மாணவிக்கு நேர்ந்த கதி...



பாடசாலைக்கு மாணவிக்கு நேர்ந்த கதி...

அம்பலாந்தோட்டை தேசிய பாடசாலை ஒன்றில் 15 வயதுடைய மாணவி, அதே பாடசாலையில் வைத்து வேறொரு பாடசாலை மாணவனால் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

 இந்த சம்பவத்தை மறைத்த குற்றச்சாட்டின் கீழ், அந்த பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் மற்றும் சந்தேக நபரான மாணவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 கடந்த மாதம் 21ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டு விழாவின் போது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 இந்த பாடசாலை மாணவியை, விளையாட்டு விழாவிற்காக வேறொரு பாடசாலையில் இருந்து வந்திருந்த 15 வயதுடைய மாணவன் பாடசாலை கட்டிடங்களுக்கு இடையே மறைவான ஒரு இடத்தில் வைத்து, அந்த மாணவியை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

 இது குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அம்பலாந்தோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

 இதனையடுத்து, இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தலைமைப் பொலிஸ் பரிசோதகருமான அமில ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்டவர்கள் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.





புதிய சம்பள மாற்றம்

 கல்வித் துறையில் பணியாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும், புதிய சம்பள மாற்றத்திற்கு அமைவாக 2025, 2026 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகளில் கிடைக்கப்பெறும் வருடாந்த சம்பள அதிகரிப்பு (Annual Increment Values) பற்றிய உத்தியோகபூர்வ தரவுத்தாள் கீழே தரப்பட்டுள்ளது.

 இதன் மூலம், நீங்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு அதிகரிப்பு ஆண்டிலும் அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படும் துல்லியமான தொகையை இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்:

 

1. இலங்கை ஆசிரியர் சேவை (SLTES)

 

  • SLTES 3-II தரம்: ரூ. 552 (2025) ரூ. 676 (2026) ரூ. 800 (2027)
  • SLTES 3-I தரம்: ரூ. 744 (2025) ரூ. 912 (2026) ரூ. 1,080 (2027)
  • SLTES 2-II தரம்:ரூ. 1,024 (2025) ரூ. 1,257 (2026) ரூ. 1,490 (2027)
  • SLTS 2-I தரம்: ரூ. 1,655 (2025) ரூ. 2,027 (2026) ரூ. 2,400 (2027)
  • SLTES 1 தரம்:ரூ. 2,023 (2025) ரூ. 2,482 (2026) ரூ. 2,940 (2027)

 

2. இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை (SLTAS)

 

  • SLTAS 2 தரம்ரூ. 1,655 (2025) ரூ. 2,028 (2026) ரூ. 2,400 (2027)
  • SLTAS 1 தரம்: ரூ. 1,734 (2025) ரூ. 2,128 (2026) ரூ. 2,520 (2027)

 

3. இலங்கை அதிபர் சேவை (SLPS)

 

  • SLPS-3 தரம்: ரூ. 1,152 (2025) ரூ. 1,411 (2026) ரூ. 1,670 (2027)
  •  SLPS-2 தரம்: ரூ. 1,655 (2025) ரூ. 2,028 (2026) ரூ. 2,400 (2027)
  •  SLPS-1 தரம்:ரூ. 2,046 (2025) ரூ. 2,508 (2026) ரூ. 2,970 (2027)

 

4. இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) / இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவை (SLTES)

 

  • SL 1 - III (தரம் III): ரூ. 1,655 (2025) ரூ. 2,027 (2026) ரூ. 2,400 (2027)
  • SL 1 - II (தரம் II): ரூ. 1,023 (2025) ரூ. 2,481 (2026) ரூ. 2,940 (2027)
  • SL 1 - I (தரம் I): ரூ. 2,689 (2025) ரூ. 3,294 (2026) ரூ. 3,900 (2027)

 


 

 

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோருக்கு அவசர அறிவுறுத்தல்

 நாட்டில் தற்போது நிலவும் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

 மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

 இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 44,480 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 இதுவரை டெங்கு தொடர்பான 28 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு கூறியுள்ளது.

 இதற்கிடையில், நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு நுளம்பு ஒழிப்புத் திட்டம் இன்றும் (20.06.2026) தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷில சமரவீர பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

 

 

 

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நால்வரும் விளக்கமறியலில்

 தெரணியாகல பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 தெரணியாகல பகுதியில் போதைப்பொருள் சோதனைக்காகச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கும், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த 19ஆம் திகதி பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

 அங்கு சட்டவிரோதமாகக் கூடி, தாக்குதல் நடத்தி நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்குக் காயம் ஏற்படுத்தியமை, கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் 'ஐஸ்' போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

 சந்தேகநபர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சந்தேகநபர்களை அடுத்த மாதம் (ஜூலை) 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவிசாவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இச்சம்பவம் குறித்து தெரணியாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

வீட்டுப் பணியாளர்களுக்கான தேவை அதிகரிப்பு: சட்டப் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்

 இலங்கையில் வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதனாலும், கணிசமானோர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்வதனாலும், உள்நாட்டில் வீட்டுப் பணிகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐஎல்ஓ என்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

 வீட்டுப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 இலங்கையில் வீட்டுப் பணியாளர்களுக்குப் போதிய சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லாததன் காரணமாக, உள்ளூர் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக இணைவதற்குத் தயக்கம் காட்டுவதுடன், அது அவர்களை ஊக்கமிழக்கச் செய்துள்ளது.

 எனவே இவர்களின் அடிப்படைத் தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்துவது தற்போதைய சூழலில் மிக அவசியமானதாகும்.

 அத்துடன், வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், இந்தத் துறையை முறைப்படுத்துவதற்கும் அவர்களுக்கென ஒரு தரப்படுத்தப்பட்ட சேவை ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்துவது மிகவும் முக்கியமானது என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வலியுறுத்தியுள்ளதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது.

 

 

 

பாடசாலைக்கு மாணவிக்கு நேர்ந்த கதி...

 

 

No comments

Theme images by fpm. Powered by Blogger.