பாடசாலைகளுக்குள் நடைமுறைக்கு வரும் புதிய தடை ...
பாடசாலைகளுக்குள் நடைமுறைக்கு வரும் புதிய தடை ...
மாணவர்களுக்கு உகந்த உணவகங்களை உருவாக்கும் நோக்கில் புதிதாக வெளியிடப்பட்ட “ஆரோக்கியமான பாடசாலை உணவகங்களுக்கான வழிகாட்டுதல்கள்” கீழ் தடைசெய்யப்பட்ட உணவுப் பொருட்களின் விவரங்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நோய் பரப்பும் காரணிகளற்ற, தூய்மையான, பாதுகாப்பான மற்றும் எளிதில் அணுகக்கூடிய சூழலைப் பராமரித்தல், உணவகச் செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தல், மற்றும் உணவு கையாளுபவர்களிடையே தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை இந்த வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன.
குழந்தைகளின் விருப்பங்கள், ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் உள்ளூர் உணவுப் பண்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உணவுப் பட்டியல்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தடைசெய்யப்பட்ட பட்டியலின் கீழ், சுகாதார அமைச்சகம் பின்வருவனவற்றைத் தடை செய்துள்ளது.
சொசேஜ்கள், மீட்பால்ஸ், பேக்கன், ஹாம் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் அவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் (பர்கர்கள், ஹொட் டொக்ஸ், பீட்சா).
பேஸ்ட்ரிகள், டோனட்கள், எக்ளேர்கள், பிஸ்கட்கள் மற்றும் கேக்குகள் உள்ளிட்ட மாவு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள்.
உடனடி நூடுல்ஸ், சூப் கட்டிகள், மசாலாப் பொடிகள் மற்றும் டப்பாவில் அடைக்கப்பட்ட ஊறுகாய் போன்ற உடனடி உணவுகள் மற்றும் சுவையூட்டிகள்.
சூயிங்கம், டாஃபி, லாலிபாப்ஸ், புட்டிங்குகள், ஐஸ்கிரீம் மற்றும் பதப்படுத்தப்பட்ட இனிப்பு வகைகள் உள்ளிட்ட சர்க்கரை நிறைந்த இனிப்புகள்.
பூண்டி, மஸ்கட், தோடோல், முறுக்கு போன்ற உப்பு நிறைந்த தின்பண்டங்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட தின்பண்டங்கள் (டிப்பி டிப்).
கார்பனேற்றப்பட்ட பானங்கள், அதிக சர்க்கரை கொண்ட பானங்கள், சுவையூட்டப்பட்ட பால் மற்றும் தயிர் பானங்கள், ஆற்றல் பானங்கள், மற்றும் உடனடி தேநீர்/காபி போன்ற ஆரோக்கியமற்ற பானங்கள்.
பாடசாலை, மாணவர்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிப்பதோடு, தொற்றா நோய்களுடன் தொடர்புடைய உணவுகளின் வெளிப்பாட்டைக் குறைக்கும் வகையிலும் இந்த நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் வரி செலுத்துவோர் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கையில்
வரி செலுத்துவோர் உள்நாட்டு இறைவரித்திணைக்களம் (IRD)திணைக்களத்திற்கு 550 பில்லியன் ரூபாய்க்கும் மேல் வரிகளை செலுத்த வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சமீபத்திய
வரித்திருத்தங்களை விளக்குவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு ஊடக சந்திப்பில், உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இதனை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு
செலுத்தப்படாத இந்த வரிகளில் ஏறக்குறைய 100 பில்லியன் ரூபாயை மீட்பதற்கு சட்டரீதியான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்,
இந்த செலுத்தப்படாத வரிகளை மீட்பதற்கு திணைக்களம் பல பிற முறைகளையும்
பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.
இந்த
நடவடிக்கைகளில், வங்கிக் கணக்குகளை முடக்குதல், சொத்துக்களைப் பறிமுதல் செய்தல் மற்றும் வரி செலுத்தத்தவறிய வரி செலுத்துவோருடன் கலந்துரையாடி உரிய நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்கு உதவுதல் ஆகியவை அடங்கும் என கூறப்படுகின்றது.
உள்நாட்டு
இறைவரித்திணைக்கள சட்டத்தின் கீழ் உரிய விதிகள் செய்யப்பட்டுள்ளதால், வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு திணைக்களத்திற்கு சட்டரீதியான அதிகாரம் உள்ளது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போது
இலங்கையில் சுமார் 1.3 மில்லியன் தனிநபர் வரி செலுத்துவோர் உள்ளதாகவும், மேலும் சுமார் 130,000 நிறுவனங்கள் வரி செலுத்துவோராகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொசன் தானசாலைகள் குறித்து வெளியான அறிவிப்பு..
எதிர்வரும்
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தானசாலைகள் மற்றும் தோரணங்களை ஏற்பாடு செய்யும்போது, குறித்த பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு முன்கூட்டியே அறிவிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என பிரதிப் பொலிஸ்
மா அதிபர் டப்ளியூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இந்த
நடவடிக்கை விபத்துக்களைக் குறைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
தானசாலைகள்
மற்றும் தோரணங்களை நடத்துபவர்கள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட தேவையான வழிகாட்டுதல்களை பொலிஸாருடன் ஒருங்கிணைந்து பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை,
வீதி விபத்துகளை 24 மணித்தியாலங்களுக்குள் பொலிஸாருக்கு அறிவிக்காத சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை.
மோட்டார் போக்குவரத்துத்
திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வாகனப்பதிவு எண்களுக்குப் பதிலாக, தரமற்ற மற்றும் வண்ணமயமான வாகனப்பதிவு எண்களைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடு
மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக (DIG) டபிள்யூ. பி. ஜே. சேனதீரா இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில்
வாகனப்பதிவு எண்களுக்குத் தட்டுப்பாடு இருந்ததால், நாங்கள் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கினோம்.
அந்த காலகட்டத்தில்,
வெள்ளை பின்னணியில் கருப்பு எழுத்துக்களில் (ஒரு A4 தாளில் கூட) வாகனப் பதிவு எண்ணைக் காண்பிக்க தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டது.
இருப்பினும், வாகன
எண்களை வெவ்வேறு வண்ணங்களில், தாம் விரும்பும் நிறத்தில் வண்ணம் பூசி காட்சிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே முறையான
தரநிலைகள் இல்லாமல் தன்னிச்சையாகத் தயாரிக்கப்பட்ட வாகன எண் அட்டைகளை கொண்ட வாகனங்களை ஆய்வு செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்
கூறியுள்ளார்.
11 இலட்சத்தை கடந்தது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...
ஜனவரி
மாத தொடக்கம் முதல் கடந்த 21ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி,
குறித்த காலப்பகுதியில் மொத்தம் 1,104,354 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
ஜூன்
முதலாம் திகதி முதல் 21ஆம் திகதி வரை மட்டும் 82,332 பேர் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இவ்வருடம்
இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இரண்டாம் இடத்தில் ஐக்கிய இராச்சியம், மூன்றாம் இடத்தில் சீனா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
மேலும்,
மாதாந்திர அளவில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை பெற்ற மாதமாக பெப்ரவரி மாதம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
14 மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை....
இலங்கையில் வேகமாகப்
பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதி அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த
அதிஅபாயப் பிரிவுகளில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பதற்கும் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சமீபத்திய
தரவுகளின்படி, மேல் மாகாணமே டெங்கு நோயினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா
மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே அதிகளவிலான அதிஅபாயக் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொழும்பு
மாவட்டம்
கொழும்பு மாநகர
சபை எல்லை, மகரகம, பிலியந்தலை, ஹோமாகம, கடுவலை, பொரலஸ்கமுவ, தெஹிவளை, எகொட உயன மற்றும் கோட்டடுவ ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கம்பஹா
மாவட்டம்
அத்தனகல்ல, சீதுவ,
களனி, ராகம, மினுவாங்கொடை, நீர்கொழும்பு, பியகம, வத்தளை, கட்டான மற்றும் மஹர ஆகிய பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
களுத்துறை
மாவட்டம்
பண்டாரகம, ஹொரண,
இங்கிரிய, மத்துகம, பாணந்துறை, வத்தேகம (வத்துவ), களுத்துறை மற்றும் பாயாகல ஆகிய பகுதிகள் இந்த அதிஅபாயப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஏனைய
மாவட்டங்கள்
மேல் மாகாணத்துக்கு
மேலதிகமாகக் காலி, அம்பாந்தோட்டை, மாத்தறை, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் அதிஅபாயக் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்களது
வீடுகள், பொது இடங்கள் மற்றும் பணியிடங்களைச் சூழவுள்ள பகுதிகளில் நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாக அழித்து, டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், சோதனைகளில்
ஈடுபடும் சுகாதாரக் குழுவினருக்கு உரிய ஒத்துழைப்பை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்குள் நடைமுறைக்கு வரும் புதிய தடை ...
No comments