சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு வெளியான அறிவிப்பு....

 சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு வெளியான அறிவிப்பு....




சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு வெளியான அறிவிப்பு....




சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு வெளியான அறிவிப்பு....

   2025 (2026) ஆம் ஆண்டுசாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான பரீட்சை சான்றிதழ்கள் இணையவழியில் மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், .கே.எஸ். இந்திகா குமாரி லியனகே,வெளியிட்ட அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

 இணையவழியில் விண்ணப்பித்து சான்றிதழை பெறலாம்

சான்றிதழ்களைப் பெறுவதற்காகத் பரீட்சைகள் திணைக்களத்திற்கு நேரில் செல்வதைத் தவிர்க்குமாறு பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 மேலும், https://certificate.doenets.lk/certificate என்ற இணைப்பின் மூலம் இணையவழியில் விண்ணப்பித்து, சான்றிதழைத் தபால் மூலம் வீடுகளுக்குப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

5 மாதங்களில் 7 பில்லியன் டொலர் மைல்கல் சாதனை: இலங்கையின் ஏற்றுமதித் துறை அதிரடி வளர்ச்சி! 

இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதித் துறை வருமானம் நடப்பு 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுக்குள் (ஜனவரி - மே) 7.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற மாபெரும் மைல்கல்லைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

 இலங்கை சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள தற்காலிக புள்ளிவிபரங்களின்படி, கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2026 மே மாதத்தில் மாத்திரம் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 18.34 வீதம் என்ற பாரிய வளர்ச்சியினைப் பதிவு செய்து, 1,570.64 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.

 பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரண்டு துறைகளையும் உள்ளடக்கிய இலங்கையின் ஒட்டுமொத்த கூட்டு ஏற்றுமதி வருமானம் 2026 ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் 7,393.39 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

 இது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7.56 வீத வளர்ச்சியாகும்.

 இதில் பொருட்கள் ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்ட ஒட்டுமொத்த வருமானம் 5,758.44 மில்லியன் டொலர்களாகும் (7.63 வீத வளர்ச்சி). அதேநேரம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட சேவைகள் ஏற்றுமதித் துறை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணித்து 1,634.95 மில்லியன் டொலர்களை (7.31 வீத வளர்ச்சி) நாட்டுக்கு ஈட்டித் தந்துள்ளது.

 கடந்த மே மாதத்தில் மாத்திரம் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 1,223.49 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், இது 18.25 வீத வருடாந்த வளர்ச்சியைக் காட்டியுள்ளது.

 அதேபோன்று, சேவைகள் ஏற்றுமதித் துறை மே மாதத்தில் 347.15 மில்லியன் டொலர்களைப் பெற்று, கடந்த ஆண்டை விட 18.67 வீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

 இந்த அபார வளர்ச்சி குறித்து இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவரும் முதன்மை நிறைவேற்று அதிகாரியுமான மங்கள விஜேசிங்க கருத்துத் தெரிவிக்கையில், முதல் 5 மாதங்களிலேயே 7 பில்லியன் டொலர் இலக்கைத் தாண்டியிருப்பது இலங்கை ஏற்றுமதியாளர்களின் பலம், புதிய சூழலுக்குத் தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் மற்றும் அவர்களின் விடாமுயற்சி ஆகியவற்றையே பிரதிபலிக்கிறது என்றார்.

 ஆடைத் துறை வழக்கம் போல நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் வருமானம் 6.66 வீதத்தினால் அதிகரித்து 414.72 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

 குறிப்பாக, இலங்கையின் முக்கிய சந்தையான அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 14.51 வீதம் என்ற கணிசமான வளர்ச்சியைக் கண்டு, இத்துறைக்கு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது.

 தென்னைத் துறை 17.13 வீதம் என்ற பலத்த வளர்ச்சியினைப் பதிவு செய்துள்ளது.

 இதில் தென்னை நார் பொருட்கள் 32.95 வீதத்தினாலும், சிரட்டை உற்பத்திகள் 29.18 வீதத்தினாலும், தென்னை முளைக் கரு பொருட்கள் 6.13 வீதத்தினாலும் சர்வதேச சந்தையில் நன்மதிப்பைப் பெற்று வளர்ச்சியை எட்டியுள்ளன.

 அறிவுச் சார்ந்த சேவைகள் ஏற்றுமதித் துறையில், தகவல் தொழில்நுட்பத் துறை தனது நிலையான வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொண்டு மே மாதத்தில் மாத்திரம் 158.21 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுத் தந்துள்ளது.

 கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தேயிலை ஏற்றுமதி வருமானம் 1.12 வீதம் என்ற சிறிய வீழ்ச்சியைக் கண்டு, 130.33 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது. முக்கியமாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏற்றுமதி 42.32 வீதத்தினால் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்ததே இதற்கு காரணமாகும்.

 குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் (76.92 வீதம்), ஈரான் (82.23 வீதம்) மற்றும் ஈராக் (61.43 வீதம்) ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி கணிசமாகக் குறைவடைந்துள்ளது.

 இருப்பினும், சர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு உள்ள நன்மதிப்பு மற்றும் பலமான சந்தை இருப்பு காரணமாக இத்துறை நாட்டின் முதன்மை வருமான ஈட்டியாகத் தொடர்ந்து நீடிக்கிறது.

 



 

 

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் மற்றும் வவுனியா மாநகர சபை முதல்வர் பதவி நீக்கம்

 வட மாகாணத்தில் உள்ள இரண்டு உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதன்படி, சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் மற்றும் வவுனியா மாநகர சபையின் முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் ஆகியோர் அவர்களின் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

 மாநகர சபை மற்றும் நகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த ஆளுநர், சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் மற்றும் வவுனியா மாநகர சபையின் முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீன் ஆகிய இருவரும் மேற்குறிப்பிட்ட பதவிகளை வகிக்க தகுதியற்றவர்கள் எனத் தீர்மானித்துள்ளார்.

 அதற்கமைய, இந்த பதவி நீக்கம் இன்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் இருவரும் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 


மரணத்தை ஏற்படுத்தும் பாதிப்பு! -  இலங்கையில் அவசர நிலையை எட்டும் நிலைமை 

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கமானது தற்போதைய நிலையில் எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதாகவும், அரச நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் இந்த நிலைமை மிகவும் தீவிரமாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

 இவ்வாறானதொரு பின்னணியில், டெங்கு நோயைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், அதற்கமைய நேற்று (24) முதல் 3 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தரவுகளின்படி, டெங்கு நோய் காரணமாக இதுவரையில் 29 மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன், இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 48,287 ஆக உயர்வடைந்துள்ளது.

 

அதிஅவதான வலயங்கள்

அதன்படி, பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். அந்த எண்ணிக்கை 25,167 ஆகும். அத்துடன், டெங்கு அதிஅவதான வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது.

 இதேவேளை, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கண்ணங்கர, டெங்கு நோயுடன் சேர்த்து சிக்குன்குனியா நோயும் தற்போது தலைதூக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் மாற்றம் இல்லை...

2026 ஆம் ஆண்டிற்கான பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

 எனவே முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 நேற்று (24) பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து அவர், அங்கு மேலும் தெரிவிக்கையில், 2025.09.14 ஆம் திகதி வௌியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், 2026 ஆம் ஆண்டிற்கான பரீட்சைகளுக்கான கால அட்டவணை நடைமுறைப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

 மாணவர்கள் அனைத்துப் பரீட்சைகளுக்கும் தோற்றுவதற்குத் தேவையான கற்றல் காலத்தை கருத்திற்கொண்டதன் பின்னரே இந்த கால அட்டவணை தயாரிக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது கூறினார்.

 இதன்படி கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையானது ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

 இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி முதல் ஏப்ரல் 24 ஆம் திகதி வரையில் கோரப்பட்டிருந்தது.

 இந்நிலையில், உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களை எதிர்வரும் ஜூலை மாதத்தில் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 அதேநேரம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையினை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 12 ஆம் தரத்திற்காக நடைபெறும் பொது தகவல் தொழிநுட்ப பாடத்திற்கான பரீட்சையானது ஒக்டோபர் 24 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 இதற்கான விண்ணப்பங்கள்   (22.06.2026) முதல் எதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதி வரையில் கோரப்பட்டுள்ளன.

 இதேவேளை கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை டிசம்பர் 8 ஆம் திகதி முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

 இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் - ஜூலை 1 முதல் அமுல்படுத்த நடவடிக்கை...

ஆண்டுதோறும் அமுல்படுத்தப்படும் பஸ் கட்டணத் திருத்தத்தை ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்தக் கோரி, தனியார் பஸ் சங்கங்கள் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

 இக்கோரிக்கையை நேற்று (24) எழுத்துபூர்வமாக கையளித்ததாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

 அதன்படி, அடுத்த 5 நாட்களுக்குள் கட்டணத் திருத்தம் தொடர்பாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்ப்பதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 ''ஆண்டுதோறும் அமுல்படுத்தப்படும் பஸ் கட்டணத் திருத்தம் 5 ஆம் திகதி செயல்படுத்தப்படும் என நாங்கள் முன்னதாக அறிவித்திருந்தோம். இந்த மாத இறுதியில் வரவிருக்கும் எரிபொருள் விலை மாற்றத்தை பரிசீலித்த பிறகு, எங்களின் அனைத்து சங்கங்களுடனும் கலந்துரையாடி, அவர்களின் ஒப்புதலைப் பெற்று, பஸ் கட்டணத்தை வழக்கம் போல் ஜூலை 1 ஆம் திகதி திருத்தியமைக்க நேற்று எழுத்துபூர்வ அறிவிப்பை வெளியிட முடிவு செய்தோம். மேலும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடனும் இந்த 5 நாட்களுக்குள் கலந்துரையாட முயற்சி செய்து வருகிறோம். நாங்கள் எங்கள் அனைத்து விலைகளையும் தெரிவித்துவிட்டோம். இருப்பினும், ஜூலை மாதத்தில் செய்யப்படும் திருத்தம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.''



 

 

 

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு...

   எரிபொருள் விலைகளில் எப்போது மாற்றம் செய்யப்படும் என்று தற்போதைக்குக் கூற முடியாது வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (25.06.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறையும் சந்தர்ப்பங்களில், அந்த விலைக்குறைப்பின் பலனை நிச்சயமாக நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். டீசலுக்கு 100 ரூபாவும், பெற்றோலுக்கு 20 ரூபாவும் மானியம் வழங்கப்படுகிறது.

 இந்த எரிபொருள் மானியம் அனைவருக்கும் சமமான முறையில் வழங்கப்படுவதில்லை. தற்போது மானியங்களுக்காக அமைச்சரவையினால் 57 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இந்த தொகை இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.

 எரிபொருள் விலைகளில் எப்போது மாற்றம் செய்யப்படும் என்று தற்போதைக்குக் கூற முடியாது. உலகச் சந்தையின் விலை நிலவரங்களுக்கு அமைவாகவே அது தீர்மானிக்கப்படும். கடந்த மார்ச் மாதம் முதல் எரிபொருள் விலைகள் அதிகரித்து வந்துள்ளது.

 சர்வதேச சந்தையில் விலை அதிகரித்தமையினாலேயே உள்நாட்டுச் சந்தையிலும் விலை அதிகரித்தது. எனினும், சர்வதேச சந்தையில் விலை வீழ்ச்சியடையும் சந்தர்ப்பத்தில், அதன் நன்மையை நுகர்வோருக்கு வழங்க நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு வெளியான அறிவிப்பு....

 

 

 


No comments

Theme images by fpm. Powered by Blogger.